காங்கிரஸ் ஆட்சி செய்யாத மாநிலத்தில் இடைஞ்சல் செய்வதையே தனது முக்கிய கடமைகளில் ஒன்றாக கருதுகிறது, இதில் பாரதிய ஜனதா ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தையும் காங்கிரஸ் விட்டுவைக்கவில்லை,
காங்கிரஸ்சின் கைப்பாவையான கவர்னர் கமலா பெனிவால், முதல்வர் மோடியுடன் மோதல் நடவடிகையை தொடங்கிவிட்டார்
.கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பாவுக்கு பரத்வாஜ் குடுத்த குடைச்சலை போன்று , இம்மாநில கவர்னர் தன் இஷ்டப்படி லோக்_அயுக்தாவின் தலைவரை நியமித்துள்ளார்.
இது மாநில அரசை புறம்தள்ளிவிட்டு அடிப்படை கொள்கை மீறல் என்று பாரதிய ஜனதா தனது எதிர்ப்பை_தெரிவித்துள்ளது. இந்த பிரச்னையை பார்லிமென்டில் எம்.பி_க்கள் எழுப்பியதால் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனையடுத்து பார்லிமென்ட் ஒத்தி வைக்கபட்டது.
சமீபத்தில் முதல்வர் நரேந்திர மோடி லோக் அயுக்தா நியமனம் 3அமைச்சர்கள், எதிர் கட்சி தலைவர் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவின் மூலம் தேர்வு செய்யபடலாம் என்று பரிந்துரை செய்திருந்தார் , ஆனால் முதல்வரின் பரிந்துரையை புறந்தள்ளிய கவர்னர் தன் இஷ்டப்படி லோக்_அயுக்தாவின் தலைவரை நியமித்துள்ளார் , இதை போன்று நமது ஜனாதிபதி செய்தால் இவர்கள் (பிரதமர்) ஒத்துக்கொள்வார்களா
எந்த ஒரு மாநிலமானாலும் அமைச்சரவை பரிந் துரையின் படியே கவர்னர் செயல்படவேண்டும் ஆனால் கமலா அரசிலமைபு சட்டத்தின் 163பிரிவை மதிக்காமல் நடந்து கொண்டுள்ளார் . இதன் மூலம் கவர்னர் காங்கிரஸ் அரசின் கைப்பாவையாக செயல்படுவது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
கடந்த 2010ம் ஆண்டு இந்தியாவின் மிகசிறந்த முதலமைச்சர் யார் என்று இந்தியா டுடே பத்திரிகை கேள்விக்கு பெரும்பான்மையோர் நரேந்திரமோடி என்று பதில் அளித்துள்ளனர்.
உலகளவில் வேகமாக முன்னேறி வரும் மிகவும் சக்திவாய்ந்த நகரங்களுள் ஒன்றாக, இந்தியாவில் முதலாவதாக, அகமதாபாத் நகரை தேர்ந்தெடுத்துள்ளது ஃபோர்ப்ஸ் பத்திரிகை
கடந்த பாத்து ஆண்டுகளாக தொடர்ந்து முதலமைசராக இருந்துவரும் பா.ஜ.க. தலைவர் நரேந்திர மோடி மாநிலத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வது ஒன்றையே கடமையாககொண்டு செயல்பட்டு வருகிறார். நாட்டில் இருக்கும் கல்வி, சுகாதார மற்றும் தொழில் வல்லுனர்கள் அனைவரும் அவரின் ஊழலற்ற சிறப்பான ஆட்சி முறையை பெரிதும் பாராட்டுகின்றனர்.
இத்தனைக்கும் மற்ற மாநிலங்கள் போன்று வருமானத்திற்காக, மக்களின் ஆரோக்கியத்தையும் ஏழை குடும்பங்களின் குடியையும் கெடுக்கும் மதுபான வியாபாரத்தை மேற் கொள்ளாமல், பூரணமதுவிலக்கு அமலில் இருக்கின்றபோதும் திறமையாக ஆட்சிபுரிந்து நிதிநிலையை அதிக இருப்புடன் வைத்துள்ளார் மோடி.
ஐநாசபையின் பொருளாதார மற்றும் சமூக சங்கதிகளுகான துறை (Economic & Social Affairs), ஒளிவு மறைவற்ற, பொறுப்புமிக்க நிர்வாகமும் பொதுமக்கள் சேவையும் (Better Management; Better Public Service- Improving Transparency, Accountability and Responsiveness in the Public Service Category) தந்ததற்காக உலகளவில் இரண்டாம் பரிசைத்தந்து, மோடி அரசைப் பெருமைப்படுத்தியுள்ளது. அந்த நற்சான்றிதழை தனது அலுவலகத்தில்- தன் அறையில் மாட்டி வைத்து விட்டு, ஆரவாரமின்றி, அமைதியாக தன்னுடைய பணிகளை தொடர்ந்து கொண்டிருக்கிறார் முதல்வர் மோடி.
பத்து வருடத்திற்கு_முன்னால் 6700 கோடி ரூபாய் பற்றாகுறையுடன் இருந்த குஜராத்தின் நிதிநிலை, தற்போது 500கோடி ரூபாய் அதிக இருப்புடன் உள்ளது, மற்ற மாநில அரசுகள் “நலத்திட்டம்” என்ற பெயரில் உதாரிதனமாக இலவசங்களை அள்ளி வீசும்போது, எதையுமே இலவசமாக கொடுக்காமல் ஏழைமக்களுக்கு தேவையான பொருள்களை, தரமான நிலையில் நியாயமான விலையில் தடங்கல் இன்றி பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் கிடைக்குமாறு செய்கிறது மோடியின் அரசு, இப்படி பட்டவரை உங்களால் ஒன்றும் செய்துவிட முடியாது
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
Leave a Reply
You must be logged in to post a comment.