ராஜேஷின் காயங்கள் பயங்கரவாதிகளையும் நிலைகுலைய செய்யும்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சிசெய்யும் கேரளாவில் அரசியல் கொலைகள் சமீபகாலமாக சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. கடந்த 29-ம் தேதி திருவனந்த புரத்தில் ஆர்எஸ்எஸ். தொண்டர் ராஜேஷ் வார்த்தைகளால் சொல்லமுடியாத வண்ணம் கொடூரமான முறையில் வெட்டப்பட்டு, சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரளமாநில அரசுக்கு மத்திய அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட ராஜேஷின் குடும்பத்தினரை சந்தித்து மத்திய நிதி மற்றும் பாதுகாப்புதுறை மந்திரி அருண் ஜெட்லி ஆறுதல் கூறினார். அப்போது நிலை குறித்து அவரிடம் பேசப்பட்டது. 

 

இதனையடுத்து மாநிலத்தில் உள்ள பினராயி விஜயன் அரசு மீதான தாக்குதலை அருண்ஜெட்லி தொடுத்தார். அவர் பேசுகையில் அவர்கள் எப்போது எல்லாம் ஆட்சிக்கு வருகிறார்களோ, அப்போது எல்லாம் வன்முறை யானது அதிகரிக்கிறது என ஆவேசமாக கூறினார்.

 

ராஜேஷ் மீது ஏற்படுத்தப்பட்ட காயங்கள், பயங்கரவாதிகளாக இருந்தாலும்கூட மனதை நிலைகுலைய செய்யும் “ராஜேஷின் உடலில் 89 காயங்கள் உள்ளது. அவர்மீது பிரயோகப்படுத்த மிகவும் கொடூரமான தாக்குதலை நாங்கள் மறக்கமாட்டோம். என்னுடைய கட்சியின் சார்பில் ஒற்றுமையை தெரிவிக்க நான் இங்கு உள்ளேன். கேரளாவில் உள்ள எங்களுடைய தொண்டர்கள் தனி நபர்கள் கிடையாது, அவர்களுடன் ஒட்டுமொத்த நாடும் உள்ளது,” என்றார் அருண் ஜெட்லி.

இடதுசாரிகள் ஆட்சி வரும்போது எல்லாம் வன்முறை அதிகரிக்கிறது. மிகவும் வேதனையானது. அரசியல் எதிராளிகளை நீங்கள் கொல்கிறீர்கள். குற்றவாளிகளை நீதியின்முன் நிறுத்துவது மாநில அரசின் பொறுப்பாகும். போலீஸ் சுதந்திரமாக செயல்படுகிறது என எதிர்பார்க்கப் படுகிறது. இவ்விரு விஷயங்களும் நடக்கவில்லை என்றால் வன்முறையானது முடிவுக்கு வராது. 

 

இதுபோன்ற வன்முறை சூழ்நிலையானது நீடிக்காது என நான் பிரார்த்திக்கின்றேன். இதுபோன்ற சம்பவங்களில் குற்றவாளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகின்றேன். அரசு, தன்னுடைய சொந்த தொண்டர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கவேண்டும், அரசியல் எதிராளிகள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட பயன்படுத்த கூடாது. கேரளாவில் நடக்கும் அரசியல் வன்முறையானது பாரதீய ஜனதா அல்லது அதன் கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் நடந்து இருந்தால் என்ன நடந்து இருக்கும்? அரசு வழங்கிய விருதுகள் திருப்பி அளிக்கப்பட்டு இருக்கும், பாராளுமன்றத்தை செயல்பட அனுமதித்து இருக்க மாட்டார்கள். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் போராட்டத்தை தொடங்கியிருப்பார்கள் என்றார் அருண் ஜெட்லி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...