டெல்லியில் பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். கூட்டத்தில், கட்சிதலைவர் அமித் ஷா பங்கேற்றார். கடந்த 2014 மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, 2019ல் ஆளுங் கட்சியாக மக்களவை தேர்தலை பாஜக சந்திக்க உள்ளது. இதிலும் தனிப் பெரும்பான்மை வெற்றியுடன் ஆட்சியை தக்கவைக்க கட்சி, இப்போதே தீவிரமாக களமிறங்கி உள்ளது.
மத்திய அமைச்சர்கள், கட்சியின் முக்கிய தலைவர்களுக்கான பொறுப்புகள் அடங்கிய செயல்திட்டத்தை கட்சி தலைவர் அமித்ஷா சமீபத்தில் வழங்கினார். கடந்தமக்களவை தேர்தலில் தோல்வியை சந்தித்த தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இம்முறை வெற்றிபெற பாஜ இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் பாஜ ஆளும் 13 மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் 6 துணைமுதல்வர்கள் கூட்டம் டெல்லியில் 3வது முறையாக நேற்று நடந்தது. தமிழகம், பீகாரில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களை தொடர்ந்து சில முக்கிய முடிவுகள் இக்கூட்டத்தில் எடுக்கப்படலாம் என முன்கூட்டியே தகவல்கள் வெளியாகின. அதற்கேற்றார் போல், பாஜ தேசிய தலைவர் அமித்ஷா, தமிழக சுற்றுப் பயணத்தை திடீரென ரத்து செய்துவிட்டு, முதல்வர்கள் கூட்டத்தில் பங்கேற்றார்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், மத்திய அரசின் முன்னோடித்திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது குறித்தும், திட்டங்களின் தற்போதைய நிலவரம் குறித்தும் மாநில முதல்வர்கள், பிரதமரிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். தேர்தலுக்கு தயாராக மாநிலமுதல்வர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாகவும் பிரதமர் மோடி சிலஅதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், மத்திய அமைச்சரவையில் மாற்றம்செய்வது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது .
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.