அ.தி.மு.க பிரிந்ததுக்கும் இணைந்ததுக்கும் பிஜேபி. காரணமல்ல என்று இல.கணேசன் தெரிவித்துள்ளார். கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று மதுரை வந்த எம்.பி இல.கணேசன் செய்தியாளர்களிடம் பேசும் போது,''உச்ச நீதிமன்றம் முத்தலாக் விவகாரத்தில் அளித்துள்ள தீர்ப்பு இஸ்லாமியப் பெண்களுக்கு மிகுந்தமகிழ்ச்சியைத் தந்துள்ளது.
அ.தி.மு.க-வில் உட்கட்சி பிரச்னைதான் உள்ளது. ஓபிஎஸ் வெளியில்வந்தவுடன் ஆட்சி கலைந்து விடும் என்றார்கள். அப்படி நடக்கவில்லை. இன்னும் நான்குவருடங்கள் இந்த ஆட்சித் தொடர வேண்டும். அதுவே மக்களின் விருப்பமும்கூட. அ.தி.மு.க இரண்டு அணிகளாகப் பிரிந்ததிலும் எங்களுக்குப் பங்கு இல்லை, அவர்கள் இணைந்ததிலும் எங்களுக்குப் பங்கு இல்லை. உண்மை இப்படி இருக்க ஏன் எங்கள்மீது குற்றம் சாட்டுகிறார்கள் என்று தெரியவில்லை. நீட் தேர்வைப் பொறுத்தவரையில், நீட்தேர்வு வேண்டும் என்பதில் தமிழக மக்களிடம் முழுமையான ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை. சட்டத்தின் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். தமிழக அரசுடன் நாங்களும் இணைந்து போராடினோம். நீதிமன்ற உத்தரவை அனைவரும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.