இந்தியா – நேபாளம் இடையே பல்வேறுதுறைகளில் 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. நேபாளப் பிரதமர் ஷேர்பகதூர் தூபா, இந்தியாவுக்கு 4 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
பிரதமராகப் பொறுப்பேற்று அவர் மேற்கொண்டுள்ள முதல் வெளிநாட்டுப்பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, தில்லிக்கு புதன் கிழமை வந்த அவருக்கு, இந்திய அதிகாரிகள் உற்சாகவரவேற்பு அளித்தனர். அதன் பின்னர், தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடியை ஷேர்பகதூர் தூபா வியாழக் கிழமை காலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இருநாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு, ராணுவ ஒத்துழைப்பு, வர்த்தகம், மின்சாரப்பகிர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அவர்கள் ஆலோசித்ததாக தெரிகிறது. குறிப்பாக, இரு தரப்பு நல்லுறவை மேம்படுத்துவது, பிராந்திய விவகாரங்கள் ஆகியவை குறித்து அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இருநாடுகள் இடையே பல்வேறு துறைகள் தொடர்பாக 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
அவற்றில், போதைப் பொருள் தடுப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம், பேரிடர் மறுசீரமைப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஆகியவையும் அடங்கும். அதன் பின்னர், இரு நாட்டுத் தலைவர்களும் செய்தியாளர்களைக் கூட்டாக சந்தித்தனர். அப்போது, நரேந்திரமோடி பேசியதாவது:
ஷேர் பகதூர் தேவுபாவுடனான சந்திப்பு மிகவும் ஆக்க பூர்வமானதாக இருந்தது. இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து நாங்கள் பேச்சு வார்த்தை நடத்தினோம். நேபாளத்தின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் இந்தியா எப்போதும் உதவத்தயாராக இருப்பதாக தூபாவிடம் உறுதியளித்திருக்கிறேன். ராணுவ ஒத்துழைப்பு, பாதுகாப்பு ஒருங்கிணைப்பு ஆகியவையே இருநாட்டு நல்லுறவுக்கு முக்கிய அம்சங்களாக விளங்குகின்றன என்றார் மோடி.
இதனைத் தொடர்ந்து, நேபாளப்பிரதமர் ஷேர்பகதூர் தூபா கூறியதாவது: மோடியுடனான பேச்சு வார்த்தை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இரு நாடுகளும் ஒரு சேர வளர்ச்சி அடைவது குறித்து நாங்கள் விவாதித்தோம். இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை அரங்கேற்று வதற்காக நேபாளத்தைப் பயன்படுத்த ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என ஷேர்பகதூர் தேவுபா தெரிவித்தார்.
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.