வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் "புதியஇந்தியா'வை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் பாடுபடுங்கள் என்று மத்திய அரசு அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப் பட்டுள்ளதாவது: மத்திய அரசின் 80 கூடுதல் செயலர்கள் மற்றும் இணை செயலர்களுடன் தில்லியில் ஞாயிற்றுக் கிழமை பிரதமர் மோடி கலந்தாலோசனை நடத்தினார்.
அப்போது, வேளாண்மை, குடிநீர், குடிமக்கள் சார்ந்தநிர்வாகம், புத்தாக்கம், திட்ட அமலாக்கம், கல்வி, உற்பத்தி, உள்நாட்டு பாதுகாப்பு, சூரியஎரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து தங்களுடைய அனுபவங்களை பிரதமர் மோடியுடன் அதிகாரிகள் பகிர்ந்து கொண்டனர்.
அப்போது பேசிய பிரதமர், "சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத மருத்துவ உபகரணங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். புதிய சட்டங்கள் கொண்டுவரப் படுவதால், பழையசட்டங்கள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டு, பயனற்றவை எனக் கண்டறியப்பட்டால் அவை ரத்து செய்யப்படவேண்டும்.
நாட்டில் உள்ள 100 பின்தங்கிய மாவட்டங்களைத் தேர்வுசெய்து அவற்றின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும்' என்று தெரிவித்தார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.