கேரளமாநிலத்தவர் மீது அந்த மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு உண்மையான அக்கறைகிடையாது என்று பாஜக முன்னாள் எம்.பி. தருண்விஜய் விமர்சனம் செய்துள்ளார்.
ஹரியாணாவில் தேரா சச்சா சௌதா அமைப்பினரின் கலவரத்தைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திரமோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், ஹரியாணாவில் வசிக்கும் கேரளமக்களின் பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப் படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று விஜயன் கேட்டுக் கொண்டிருந்தார்.
இதை பாஜக முன்னாள் எம்.பி.யும், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தருண் விஜய் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
ஹரியாணாவில் வசிக்கும் கேரள மக்கள் மீது போலி அக்கறைகாட்டும் பினராயி விஜயன், எனது கேள்விகளுக்கு முதலில் பதிலளிக்க வேண்டும். கேரளத்தில் அந்த மாநில மக்களால் மரியாதையுடனும், பாதுகாப்பாகவும் வாழ முடிகிறதா? நாட்டிலேயே மலையாள மொழி பேசும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாதமாநிலம் எது என்று கேள்வி எழுப்பினால், அது துரதிருஷ்டவசமாக, கேரளம்தான். கேரளத்திலேயே மலையாள மொழிபேசும் மக்களால் பாதுகாப்பாக வசிக்க முடியவில்லை.
ஹரியாணா மாநிலமானது, அனைத்து மாநிலமக்கள், பிற நாட்டு மக்களுக்கு பாதுகாப்பான இடமாகத்திகழ்கிறது. ஆனால், கேரளமோ, பிற மாநில மக்களை ஈர்ப்பதிலும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதிலும் தோல்வியடைந்து விட்டது. பினராயி விஜயன் ஆட்சியின்கீழ், மலையாள மொழிபேசும் மக்கள் கொடூரமாகத் தாக்கப்படுகின்றனர்.
பிரபல மலையாள நடிகை காரில் கடத்திச்செல்லப்பட்டு, கொச்சியில் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். பாலக்காட்டில் தலித் சமூகத்தைச்சேர்ந்த பள்ளி முதல்வரை அவமதிக்கும் வகையில், அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களால் பரிசாக சவப் பெட்டி அளிக்கப்பட்டது. கேரளத்தில் கடந்த 13 மாதங்களில் 14 ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கொலை செய்யப் பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர், தலித்சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
கேரள மாநிலம், அதன் மக்களுக்கு பாதுகாப்பான பகுதியாக இருக்கிறது என்பதற்கான அறிகுறிகளா இவை? எனவே, கேரளத்தில் மக்களை பாதுகாக்க முதலில் அவர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தருண் விஜய் தெரிவித்துள்ளார்.
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |
தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ... |
Leave a Reply
You must be logged in to post a comment.