நெஞ்சை நிமிர்த்தி நின்ற சீனா பல்டி அடித்தது

எந்த வகையிலும் பேச்சு வார்த்தைக்கு உடன்பட மாட்டோம், இந்தியா எந்தவிதமான நிபந்தனையும் இன்றி டோக்லாமில் இருந்து வெளியேற வேண்டும் என்று மிரட்டியது சீனா !! அமைதியாக, ஆனால் இம்மிகூட டோக்லாமில் இருந்து அசையாமல் இருந்தது இந்திய ராணுவம்.

தன்னுடைய அடிமை ஊடகங்களை வைத்து, இந்தியா வெளியேறவில்லை என்றால் மிகப்பெரும் விளைவுகளை சந்திக்க வேண்டும் என்றது சீனா !! அமைதியாக, ஆனால் இம்மிகூட டோக்லாமில் இருந்து அசையாமல் இருந்தது இந்திய ராணுவம்.

1962ல் நடந்தது போல் மீண்டும் ஒருபோரை இந்தியா சந்திக்க வேண்டி வரும், இந்தியா நினைத்துப் பார்க்க முடியாத விளைவுகளை சந்திக்க வேண்டும் என்றெல்லாம் எழுதி தள்ளின சீனஊடகங்கள். சீனாவில் அதன் அரசின் சம்மதமில்லாமல் எதையுமே எழுதஇயலாது என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால் இத்தனை மிரட்டலுக்கு இடையேயும், அமைதியாக, ஆனால் இம்மி கூட டோக்லாமில் இருந்து அசையாமல் இருந்தது இந்திய ராணுவம்.

பேச இயலாது என்று கூறிய சீனா தற்போது இந்திய ராணுவத்தோடு பேசிதீர்க்க வந்துள்ளது. அது வெளிப்படையாக குறிப்பிடா விட்டாலும், டோக்லாமில் உள்ள‌ சாலை கட்டுமானத்தை அது இனி தொடரப்போவது இல்லை என்பது தேசிய ஊடகங்கள் மூலமாக நமக்கு தெரிய வருகிறது.

நெஞ்சை நிமிர்த்தி நின்ற சீனா ஏன் இப்போது பல்டி அடித்தது ?

1) டோக்லாம் பகுதியில் ஏற்கனவே சீனா, 1967ல் இந்தியாவிடம் மண்ணை கவ்வியபகுதி. இங்கு இந்திய ராணுவம் யுக்தி ரீதியாக மிகச்சிறப்பான வகையில் நிலைநிறுத்தப் பட்டுள்ளது.

2) போர் மேகத்திற்கான சூழல் தொடர்ந்தால் அதனால் பாதிக்கப்பட போவது சீனாதான். சீனப் பொருள்கள் இந்தியாவின் மிகப்பெரும் சந்தையில் விற்க இயலாது. தீபாவளி நெருங்கிவரும் நிலையில் மிகப்பெரும் வியாபார வாய்ப்பை சீனா இழந்துவிடக்கூடும்.

3) மோடி அவர்களின் மிகப்பெரும் சுற்றுப்பயணம் மற்றும் வெளியுறவுத் துறை சுஷ்மா ஸ்வராஜ் அவர்களின் அரும்பணியின் காரணமாக சீனாவின் அண்டை நாடுகள் பலவும் இந்தியாவின்பக்கம் உள்ளது. இந்தியா ஒரு மிகப்பெரும் சக்தியாக முன்னேறிவரும் நிலையில், அமெரிக்கா, இஸ்ரேல், ஜப்பான் மற்றும் ஆஸ்த்ரேலியாவின் ஆதரவு இந்தியாவின் பக்கம் உள்ள‌து சீனர்களை மிகவும் யோசிக்க வைத்துள்ளது. மேலும் இந்தியா சீனாவை கண்டு அஞ்சும் வகையில் பிலிப்பைன்ஸோ, வியட்நாமோ இல்லை.

4) இதற்கெல்லாம் மேலாக பிரிக்ஸ் மாநாட்டுக்கு மோடி அவர்கள், சீனாவுக்குசெல்ல உள்ளார். ஆனால் டோக்லாம் பிரச்சனை காரணமாக மோடி அவர்களின் பயனம் சந்தேகத்துக்கு உரியது என்று இந்திய வெளியுறவுதுறை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். ஒருநாட்டின் தலைவர் கலந்து கொள்ளவில்லை என்றால் மாநாடு நடைபெறாது என்கிற நிலையில் இது சீனாவுக்கு பின்னடைவையே தரும். ஆகையால் அடிமட்ட அளவில் பேச்சு வார்த்தைக்கு சீனா வேறுவழியில்லாமல் சம்மதித்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...