மதிப்பிற்குரிய சபரிமாலா அவர்களுக்கு வணக்கம்.. உங்களிடத்தில் இன்று நிறைய நபர்கள் மதிப்பு கொண்டிருக்கிறார்கள்!. உங்களால் மட்டுமே இந்தக் கேள்விகளுக்கு பதில்சொல்ல முடியும் என்பதால் இந்தக் கேள்விகள்!!!
*என்னைப்போன்ற 8 லட்சம் அரசு ஊழியர்களின் வாழ்வாதார பிரச்சினையை கொச்சைப்படுத்திய நீங்கள்
*பொதுவெளியிலேயே இதற்கு பதில் சொல்லுங்கள்.*
1.அரசு நீட் தேர்வை தடுக்கவில்லையென ராஜினாமாசெய்த நீங்கள்! கல்விசார் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தராத எந்த ஊடகத்திலும் தோன்றமாட்டேன் எனச் சொல்லதைரியம் உண்டா?
2. மருத்துவக்கல்லூரி சேர்க்கைக்காக லட்சம் லட்சமாய் லஞ்சம்வாங்கி மாணவர்களை ஏமாற்றிய குற்றத்திற்காக சிறைசென்று இன்னும் அதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் SRM குழும வேந்தர் தொலைக்காட்சியில் பட்டிமன்றம் பேசுவது ஏன்?
3.கடந்த ஒரு ஆண்டில் எத்தனை நாள் பள்ளிசென்றீர்கள்? என்ன பணி செய்தீர்கள்? மாற்றுப்பணி காலத்தில் நீங்கள் பள்ளி சென்றதைவிட பட்டிமன்றம் சென்றது அதிகம் என்பதில் உங்களுக்கு மாற்றுக்கருத்து உண்டா?
என்பதை உங்களால் இப்பொழுது போல் உரத்துச்சொல்ல முடியுமா? தொடக்கப்பள்ளியில் பணியாற்றி 1 ,2 ம் வகுப்பில் பணியாற்றும் நீங்கள், 12 ம் வகுப்பு நீட்தேர்வு பற்றி அக்கறைப்பட்டது ஆச்சர்யமாக இருக்கிறது..அதனை எந்த ஊடகமும் வினவவில்லை.. மேல்நிலைப் பாடத்திட்டம் குறித்து அறியாத நீங்கள்! கல்விமுறை குறித்துப் பேசுவது..யாரைதிருப்திபடுத்த…
4. சர்வ சாதாரணமாக அரசு ஊழியர்களின் போராட்டத்தைக் குறைசொல்லும் உங்களால்,மீடியாக்களின் தவறுகளை தைரியமாக குற்றம்சாட்ட முடியுமா?
5. உங்களை பொதுவானவராக காட்டிக்கொள்ள முயலும் நீங்கள் ஏன் ஒருகுறிப்பிட்ட கட்சியின் பிரதிநிதிபோல காட்டிக்கொள்கிறீர்கள்?
6.பட்டிமன்றத்தில் பேச்சாளர்களை உருவாக்கினீர்கள் ஒப்புக்கொள்கிறேன்..உங்கள் 15 ஆண்டு பணிக்காலத்தில்
பள்ளியில் எத்தனை மாணவர்களை உருவாக்கி உள்ளீர்கள்? என்பதையும் சொல்லுங்கள்?
7. ஒரே பாடத்திட்டம் கொடுங்கள், நீட் பின்பு கொடுங்கள் எனச் சொல்கிறீர்கள். தமிழக அரசின் பாடத்திட்டத்தைப் பயன்படுத்தி 1 முதல் 12 வரை படிக்கும் எல்லோரும் TNPSC தேர்வுகளில் வெற்றிபெறுவதில்லையே!
என்ன செய்யலாம்?வினாத்தாளை முன்கூட்டியே வழங்கச் சொல்லி போராடலாமா?
8.கலாம் அவர்கள் எப்பொழுதும் விளம்பரம்தேடியதில்லை..ஆனால் அவர் பெயரைச் சொல்லி கலாம் மகள் என உங்களுக்கு ஏன் இந்தவிளம்பரம்?
9.மாணவர்கள் தங்களுக்கு எதிரானதாக கருதும் தேர்வுக்களத்தில் நேரடியாக நிற்கிறார்கள்?ஆனால் நீங்கள் எதிர்க்க துணிவில்லாமல் ஊடகவெளிச்சம் ஏன் தேடுகிறீர்கள்?
10.நான் உட்பட எனக்குத்தெரிந்து எத்தனையோ ஆசிரியர்கள் உங்களைத் தொடர்புகொண்டு,ஆதரவு தெரிவித்தனர். ஆனால் நீங்கள் ஒருவர்கூட எனது செயலை ஏற்கவில்லை என அப்பட்டமாக பொய்யுரைப்பதன் காரணம் என்ன?
11.முதல் நாள் வாட்ஸ் அப் பில் வீடியோ அனுப்புகிறீர்கள். சகாயம் அய்யா,வரவில்லை. உதயச்சந்திரன் வரவில்லை எனச் சொன்ன நீங்கள், அய்யா சகாயம் அவர்களின் மக்கள்பாதை பெயரைச் சொல்லி இத்தனை நாள் உங்களை விளம்பரப் படுத்திக் கொண்டிருந்தீரே! அது ஏன்?
வாட்ஸ் அப்பில் வெளியிட்ட நீங்கள் மறு நாள் பள்ளிக்குள் உண்ணாவிரதம் செய்தீர்கள்! அதன் பத்திரிகைச் செய்திகளை நீங்களே மறுநாள் உங்கள் DP ஆக வைத்துக் கொண்டீர்கள். அதற்கு அடுத்த நாளே ராஜினாமா என்கிறீர்கள்..அன்று மாலையே நீங்கள் விளம்பரம் செய்யும் ஊடகத்தில் பேட்டி! தனி ஒருவன் படம் போல ஒரு இடத்தில் தயாரிக்கப்பட்ட திட்டத்தை சரியாக நீங்கள் அமல் செய்வதாகவே படுகிறது.
12.மாணவர் பிரச்சினைக்காக இதுவரை ஒருகோரிக்கை அரசிடம் கொடுத்ததில்லை…ஒரு பட்டிமன்றம் பேசியதில்லை…பள்ளிக்கூடம் சரியாக வரச்சொல்லும் உங்கள் தலைமை ஆசிரியரின் சொல்லையும், அதிகாரிகளையும் மதித்ததாக அறியவில்லை..ஆனாலும் நீங்கள் தியாகி..போராடும் ஒட்டுமொத்த அரசு ஊழியர்களும் சுய நலவாதிகளா?
13.எனது பள்ளி மேடையில் விருந்தினராய் வந்திருந்த நீங்கள் *எங்கள் மாணவி அனிதா விற்கு* மேடையிலேயே அறிவித்தீர்கள் எனது பட்டிமன்ற பேச்சாளாராக மாற்றுகிறேன், உருவாக்குகிறேன் என சொன்னநீங்கள் கடந்த ஒரு வருடமாக அவரைமாற்ற உங்களுக்கு நேரம் இல்லாமல் இருக்கலாம்.எனது அலைபேசி அழைப்பையாவது எடுத்து இருக்கலாம் அல்லவா? ஒருவிசயம் யோசித்துப் பாருங்கள் அனிதாவின் பெயரிலேயே மீண்டும் மீண்டும் விளம்பரம்!
14.நீங்கள் எப்படியோ விளம்பரம் தேடிக்கொள்ளுங்கள்.. நான் அதை செய்தேன் இதை செய்தேன், அப்படி செய்தேன்
இப்படி செய்தேன் என அதை வேண்டும் சொல்லிக்கொள்ளுங்கள்.. நான், நான், நான் எங்கு அதிகமிருக்கிறதோ அங்கு விருப்பம் இருக்காது…விளம்பரம்தான் இருக்கும்?
15.இது சரியான முன்னுதாரணமா?கலாம் போராடி வெற்றிபெற்றவர்… அவர் பெயரைச் சொல்லி சிறிதுகூட போராடாமல் instant coffee போல இப்படி ஒருசெயல்பாடு ஏன்?
நீங்கள் பொதுவெளியிலேயே பதில் சொல்லுங்கள்..நல்லவர்களின் நம்பிக்கை வீணாகி அல்ல,
வீணாக்கிவிடக்கூடாது.
விரைவில் உங்களை பெரிய திரை அழைக்கலாம்.. அதற்குரிய திறமை உங்களிடத்தில் இருக்கிறது….
நீங்கள் சொன்னதையே தான் சொல்கிறேன்..*சத்தியமே வெல்லும்*
தெ.நடனசிகாமணி
தலைமை ஆசிரியர்
விழுப்புரம்
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.