Bullet Train அகமதாபாத்தில் துவக்கப்பட்டிருக்கிறது, ஜப்பான் பிரதமரைக் கட்டித் தழுவி வரவேற்கிறார் நம் பிரதமர். வெளிநாட்டு பயணம் செல்கிறார் என கிண்டலடிக்கும் எதிர்க்கட்சிகள் அப்படி சென்று வந்த ஜப்பான் நாட்டினால் இந்தியா அடையும் பயனைப்பாருங்கள்.
Bullet Train மொத்த மதிப்பீடு 1 லட்சத்தி 8 ஆயிரம் கோடி (1,08,000 கோடி) இதில் 88,000 கோடி முதல் இதற்கு வட்டி (0.1%) மிகமிகக் குறைந்த வட்டி (இதே உலக வங்கியில் வாங்கியிருந்தா 5-7 % வட்டி) கடனை திருப்பி கொடுக்க வேண்டிய காலம் – 50 ஆண்டுகள் (உலக வாங்கி – 25 ஆண்டுகள்) கடனை திருப்பி அளிக்க 15 ஆண்டுகள் கழித்து ஆரம்பித்தால் போதும்.
இதில் ஈடுபட்டிருக்கும் தொழில் வல்லுநர்கள் 300 இந்திய பொறியாளர்கள் ஜப்பானில் சென்று பயிற்சி முடித்து இங்கு செயலாற்ற தயாராக இருக்கிறார்கள். ஜப்பானில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு 4000 பொறியாளர்களை புல்லட் ரயில் தொழில்நுட்பத்திற்காக பயிற்சி எடுக்கப் போகிறார்கள்.
ஆக எந்த விதத்திலும் தொழில் நுட்பத்திற்கு வெளிநாட்டுக்காரர்களை நம்ப தேவையில்லை. ஜப்பான் பல்கலைக்கழகத்தில் முழு நிதி உதவியோடு இந்த தொழில் நுட்பத்தில் 30 இந்தியர்களுக்கு உயர் தொழில்நுட்ப படிப்புக்கு ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது. உடனடியாக 20,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
வருங்காலத்தில் இத்தகைய ரயில் எல்லா மாநிலங்களுக்கும் வர வேண்டும் ஜப்பானைப் போன்ற " High Speed Train Training Institute". 2020 ல் அமைக்கப்பட்டு அதில் 4000 மேற்பட்டவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. இதன்முலம் நம் நாட்டிற்கான புல்லட் ரயில்கள் மட்டுமல்ல நம் நாட்டில் இருந்து தயாரித்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம்.
இந்த புல்லட் ரயில் அகமதாபாத்திலிருந்து மும்பை செல்வதற்கு 2 மணி நேரம் மட்டுமே ஆகும்.( இப்போது 8 மணி நேரம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி விரைவாக வரும்போது பிற மாநிலங்களுக்கு இடையான சுற்றுலாவும் மேம்படும்.
இந்தியாவிலேயே புல்லட் ரயில் தொழில் நுட்பம் வந்தடைய தொலைநோக்குடன் செயல்படும் பாரத பிரதமரை போற்றும். அடுத்த தேர்தலை பற்றி நினைத்துக்கொண்டிருக்கும் சாதாரண அரசியல் வாதிகள் மத்தியில் அடுத்த தலைமுறைக்காக தொழில் நுட்ப வளர்ச்சியினை ஜப்பானில் இருந்து கொண்டு வந்த மோடி அவர்களின் அரசை பாராட்டுவோம்.
Dr. தமிழிசை சௌந்தரராஜன்
தமிழக பாஜக தலைவர்
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
Leave a Reply
You must be logged in to post a comment.