மோடியின் ஆட்சியில் பொருளாதாரம் வீழ்ச்சியா?

நேற்று வரை யஸ்வந்த்சின்கா என்றால் யாரப்பா சிங்களத்து ஆளா என்று கேட்டவர்கள் எல்லாம் இன் று இதோ பாரப்பா சின்காவே சொல்லிட்டார் மோடி ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரத்தின் கதை முடிந்து விட்டது என்று அள்ளி விட்டு வருகிறார்கள். அவர்களுக்கு தெரிந்ததை அவர்கள் உளறுகிறார்கள் என்றால் அரசு ஊழியர்களும் ஆமாப்பா இந்தியாவி ன் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து விட்டது என்று சொல்வது தான் வேடிக்கையானது.

ஏனென்றால் இன்னொரு சின்கா கொடுத்த அறிக்கை யை வைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு கிட்டதட் ட ஒரு கோடி அரசு ஊழியர்கள் அதாவது 48 லட்சம் இந் நாள் அரசு ஊழியர்கள், 55 லட்சம் முன்னாள் அர சு ஊழி யர்கள் பலன் அடையும் வகையில் அவர்கள் வாங்கும் சம்பளத்தில் சுமார் 25% வரை உயர்த்தி மத் தி ய அரசு உத்தரவிட்டுள்ள பொழுது அந்த அரசு ஊ ழியர்கள் இந்தியா பொருளாதார வீழ்ச்சியில் உள்ள து என்று சொல்வதை கேட்கும் பொழுது சிரிப்பு தான் வருகிறது.

கம்யூனிசம் பேசும் கிரீஸ் நாடு இப்பொழுது பொரு ளாதார வீழ்ச்சியில் தான் உள்ளது.அங்கு அரசு ஊழி யர்களுக்கு சம்பளம் இல்லை பென்ஷன் கட். மொத்த த்தில் கிரீஸ் நாடே திவாலாகி விட்டது. நேற்று ஒலி ம்பிக் நடத்திய நாடு இன்று ஓட்டாண்டியாக நிற்க காரணம் கிரீஸ் நாட்டின் அரசு ஊழியர்களும் அந்த நாட்டின் கம்யூனிச பொருளாதார கொள்கையுமே ஆகும்.
.
ஆனால் இந்தியாவில் நேற்று வரை 1 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய மத்திய அரசு ஊழியர்கள் இனி ஒ ன்னே கால் லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண் டு மோடியின் ஆட்சியில் இந்தியாவின் பொருளாதா ரம் வீழ்ச்சியடை ந்து விட்டது என்று சொல்வதை நினைத்தால் அவர்களை மாதிரி சுயநலவாதிகள் யார் இருக்க முடியும்?

ஒருவேளை இந்தியா பொருளாதார வீழ்ச்சியில் இருக்கிறது என்றே வைத்துக்கொள்வோம்.இந்த நி லையிலும் எங்களுக்கு சம்பளத்தை உயர்த்தி கொ டுக்க வேண்டும் என்று போராடும் இவர்கள் எப்படி ஏழை மக்களை பற்றி சிந்திக்க முடியும்? இந்தியா விலும் ஒரு காலத்தில் பொருளாதார வீழ்ச்சி இரு ந்தது எப்பொழுது தெரியுமா?

விபி சிங் என்கிற கோமாளி இந்தியாவை 1990 ல் ஆண்ட பொழுது தான் இந்தியா பொருளாதார வீழ் ச்சியில் சிக்கியது.விபிசிங்கை வீட்டுக்கு அனுப்பி விட்டு 1991 ல் பிரதமராக இருந்த சந்திரசேகர் ஆட்சி யின் பொழுது உலகமே இந்தியா இப்பொழுது கிரீஸ் இருப்பது மாதிரி திவாலாகும் என்று எதிர்பார்த்தது.

ஏனென்றால் அந்த காலக்கட்டத்தில் அரசு ஊழியர்க ளு க்கே சம்பளம் கொடுக்க வழியில்லாமல் ரிசர்வ் வங்கி யில் இருந்த 67 டன் தங்கத்தை எடுத்துக்கொ ண்டு இங் கிலாந்துக்கும் சுவிட்சர்லாந்துக்கும் ஓடி க்கொண்டு இருந்தோம். எதற்கு தெரியுமா? அடகு வைக்க..

1991 ம் ஆண்டு .மே மாதம் 21 ம் தேதி அரசு ஊழியர் களுக்கு சம்பளம் போட வழியில்லாமல் 47 டன் தங் கத்தை பேங்க் ஆப் இங்கிலாந்திலும் 20 டன் தங்கத் தை யூனி யன் பேங்க் ஆப் சுவிட்சர்லாந்திலும் அடகு வைத்து அதன் மூலம் கிடைத்த 600 மில்லியன் டா லரை வைத்து ஊழியர்களுக்கு சம்பளம் போட்டு அர சு இயந்திரம் இயங்கவும் கச்சா எண்ணெயை இறக் குமதி செய்து மக்களின் இயந்திரங்கள் இயங்கவும் பார்த்துக் கொண் டது இந்தியா ஆனால் இன்றைய நிலைமை அப்படியா இருக்கிறது?

இன்றைய நாளில் இந்தியாவின் ரிசர்வ் வங்கயில் 559 டன் தங்கம் ரிசர்வாக இருக்கிறது. இன்றைய மதிப்பில் 26,176 கோடி ரூபாய் பதிப்பிலான பாரக்ஸ் அதாவது அந்நிய செலவாணி ரிசர்வ் வங்கியில் உள் ளது. இந்தி யாவின் பொருளாதார வரலாற்றில் பார க்சின் மதிப்பு அதிகமாக இருப்பது இதுவே முதல் முறையாகும்.

அடுத்தது இந்த ரிசர்வ் பேங்க் சமாச்சாரத்தை எல்லா ம் ஓரங்கட்டி விட்டு மக்களை பற்றி பார்ப்போம்.. டீ மானிட்டியசேஷன் மற்றும் ஜிஎஸ்டி போன்ற மக்க ளை தாக்கிய இரு பொருளாதார சீர்திருத்தங்களை கடந்து மக்கள் எப்படி வளமுடன் இருக்கிறார்கள் என் று சில விற்பனைகள் மூலமாக பார்ப்போம்..

கடந்த ஆகஸ்டு மாதம் மட்டும் இந்தியாவில் விற்ப னை யான கார்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரி யுமா? சுமார் 2 லட்சத்து 91 ஆயிரம் கார்கள் வரை விற்பனை ஆகியுள்ளது.இதே ஆகஸ்டு மாதத்தில் 2016 ம் ஆண்டில் 2 லட்சத்து 56 ஆயிரம் கார்கள் தான் விற்பனையாகி இருந்தது.

ஆக சென்ற வருடம் ஆகஸ்டு மாதத்தில் டீமானிட் டிசேஷன் மற்றும் ஜிஎஸ்டி வருவதற்கு முன்பு விற் ற கார்களின் எண்ணிக் கையை விட இந்த வருடம் ஆகஸ்டு மாதம் 45 ஆயிரம் கார்கள் அதிகமாக விற் றுள்ளது..

இந்த கார்களில் நடுத்தர மக்கள் விரும்பி வாங்கும் இந்திய தயாரிப்பான மாருதி கார்களே விற்பனை யில் முதல் இடத்தில் உள்ளது.கடந்த ஆண்டு ஆக ஸ்டு மாதத்தை விட இந்தாண்டு ஆகஸ்டு மாதம் 40 ஆயிரம் மாருதி கார்கள் அதிகமாக விற்பனை ஆகியு ள் ளது. இதில் இருந்து இந்தியாவில் பொருளாதார வீழ்ச்சி உள்ளதா என்று நீங்களே சொல்லுங்கள்..

அடுத்து கிராம மக்கள் முதல் நகர மாநகர மக்கள் பயன்படுத்தும் டூ வீலர்கள் சேல்ஸ் பற்றி பார்த்தால்
அதிலும் இந்த ஆண்டு விற்பனை அதிகரித்துள்ளதை காணலாம்.உங்களுக்கு ஒன்று தெரியுமா? டூ வீலர்
விற்பனையில் சீனாவை நாம் ஓவர் டேக் செய்து விட்டோம்.நம்முடைய நாட்டில் ஒரு நாளைக்கு
சராசரியாக 60 ஆயிரம் டூ வீலர்கள் விற்பனையாகி கொண்டிருக்கிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மட்டும் 6 லட்சத்து 67 ஆயிரத்து 8 ஆயிரத்து 7 நூற்றி தொன்னூற்று ஏழு அதாவது 678,797 ஹீரோ டூ வீலர்கள் மட்டும் விற்ப னையாகியுள்ளது.ஆனால் இதே ஹீரோகுரூப் டூவீல ர் கள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 616,424 வண்டிகள் தான் விற்பனையாகியுள்ளது.

ஆக கடந்த ஆண்டை விட இந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ஹீரோ வண்டிகள் மட்டும் சுமார் 50 ஆயிரம்
வண்டிகள் விற்பனையாகியுள்ளது.கடந்த மாதத்தில் மட்டும் 1,891,062 டூ வீலர்கள் இந்தியாவில் விற்ப னையாகியுள்ளது.

சென்ற ஆண்டு இதே ஆகஸ்டு மாதத்தி ல்1,648,843 டூ வீலர்கள் சேல்ஸ் ஆன பொழுது டீமானிட் டிசேஷ ன் மற்றும் ஜிஎஸ்டிக்கு பிறகு சுமார் 2.5 லட்சம் டூவீலர்கள் விற்பனையாகியுள்ளதை பார்த்தால் இந்தி யாவில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து விட்டது என்று சொல்வது பைத்தியக்காரத்தனமானது என்ப தை அறிந்து கொள்ளலாம்.

அடுத்து இந்தியாவின் பண மதிப்பை தீர்மானிக்கும் தங்கத்தை பற்றி பார்த்தால் கடந்த ஆகஸ்டு மாதத் தில் மட்டும் 11.64 பில்லியன் அமெரிக்க டாலர் மதி ப்பில் அதாவது சுமார் 760,913,784,000.ரூபாய் .ப்பா.. எழுதும் பொழுதே கை இடருதே.சரியாக சொன்னா ல் 76.ஆயிரத்து 91கோடியே 37 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய்க்கு நாம் தங்கத்தை இறக்குமதி செய்துள் ளோம்.

நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள்.ஒரு மாதத்திற்கு 77 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஆடம்பர பொருளான தங் கத்தை இறக்குமதி செய்யும் இந்தியாவில் பொருளா தாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்று சொன்னால் அ தை ஸ்கூல் பசங்கள் கூட நம்ப மாட்டார்கள்.

கடந்த ஆண்டு இதே ஆகஸ்டு மாதத்தில் இந்தியா இறக்குமதி செய்த தங்கத்தின் பண மதிப்பு எவ்வளவு
தெரியுமா 7.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என் றால் இந்திய மதிப்பில் 50 ஆயிரத்து 335 கோடியே 20 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு தங்கம் இறக்குமதி செய்துள் ளோம்

அதாவது கிட்டதட்ட 26 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சென்ற ஆண்டு ஆகஸ்டை விட இந்த ஆ ண்டு ஆகஸ்டில் அதிகமாக அதுவும் டீமானிட்டிசே ஷன் மற்றும் ஜிஎஸ்டிக்கு பிறகு இந்தியா இறக்கு மதி செய்துள்ளதை பார்த்துவிட்டு இந்தியா பொரு ளாதார வீழ்ச்சியில் உள்ளது என்று பைத்தியக்காரன் தான் சொல்வான்

இன்னொரு முக்கியமான விஷயம் என்ன தெரியு மா? இந்தியாவில் சராசரி தனி மனிதர் வருமானம் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ள து.கடந்த ஆண்டு 94,130 ரூபாயாக இருந்த தனிமனி தர் ஆண்டு வருமானம் இந்த ஆண்டு 1,03,219 ஆக அதிகரித்துள்ளது

அதாவது சுமார் 9 ஆயிரம் ரூபாய் அளவிற்கு தனி மனிதர் வருமானம் அதிகரித்துள்ள நிலையில்
இந்தியா பொருளாதார வீழ்ச்சியில் உள்ளது என்று சொன்னால் அதை கோமா நிலையில் இருப்பவர்கள்
விடும் குறட்டை என்றே எடுத்துக்கொள்ள வேண் டும். ஆமா கோமாவில் இருக்கும் பொழுது குறட்டை
வருமா என்பதை அப்போலோவில் இருந்து ஜெயல லிதாவின் முழுமையான உண்மையான மருத்துவ அறிக்கை வெளியானால் அறிந்து கொள்ளலாம்.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது அந்த நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை மக்கள் வாங் கும் தன்மையை சார்ந்து இருக்கும். உற்பத்தியாகும் பொருட்களை மக்கள் அதிகமாக வாங்கினால் அங் கே பொருளாதார வளர்ச்சி இருக்கிறது என்றே அர்த்தம்

நான் கொடுத்துள்ள காரும் டூவீலரும் தங்கமும் மக்களின் அத்தியாவசிய பொருட்கள் அல்ல .இருந் தாலும் மக்கள் வாங்குகிறார்கள் என்றால் அவர்களி ன் பொருளாதாரம் உயர்ந்துள்ளது என்பதே உண்மை யாகும் சில துறைகளின் வளர்ச்சியில் ஜிஎஸ்டி மூல ம் சிறு தடை கள் இருக்கலாம்.இது நாளடைவில் சரி யாகிவிடும்.

என்னை போன்ற சிலர் பண தட்டுப்பாட்டில் இருக்கி றார்கள் என்பது உண்மை தான் ஏனென்றா ல் நான் வேலை செய்யும் இடத்தில்எந்த ஒரு பில்கொடுத்தாலும் அதில் கட்டாயம் ஜிஎஸ்டிநம்பர் இருக்கவேண் டும் என்று கூறி விட்டார்கள்

நானும் .பிசினஸ் செய்கிறேன் என்று 20 வருஷ மா கம்பெனியை ரிஜிஸ்டர் செய்யாமலே வண்டி ஓட்டி வந்த நான்..இப்பொழுது ஜிஎஸ்டி எடுத்தால்தான் பில் கொடுக்க முடியும் என்கிற நிலைக்கு வந்து ஜூ லை மாதத்தில் இருந்து பணத்தையே கண்ணில் பார்க்காமல் காலம் தள்ளி இப்பொழுதுதான் பில் லையே கொடுத்துள்ளேன்.

ஆக எனக்கு ஏற்பட்டது பொருளாதார வீழ்ச்சி அல்ல பொருளாதாரா தடங்கல் ஆகும்.இதே நிலை தான் முறையாக தொழில் செய்யாதவர்களுக்கு ஏற்பட்டு ள்ளது இது நாளடைவில் சரியாகிவிடும்.இதை பொருளாதார வீழ்ச்சி என்று சொல்பவர்களுக்கு நிச்சயம் பொருளாதாரம் பற்றிய துளி அறிவு கூட இருக்காது என்றே நினைக்கிறேன்.

நன்றி: விஜயகுமார் அருணகிரி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...