பிரதமாக பதவியேற்ற மூன்றரை ஆண்டுகளில் முதன் முறையாக தனது சொந்த ஊரான குஜராத்மாநிலம் வாத்நகர் சென்ற பிரதமர் நரேந்திரமோடியை மக்கள் மேளதாளங்கள் முழங்க உற்சாகமாக வரவேற்றனர். பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்ப தற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி குஜராத் சென்றுள்ளார். நேற்று தேசியநெடுஞ்சாலை திட்டப்பணி ராஜ்கோட் பசுமை விமான நிலைய பணிகளுக்கு அடிகள் நாட்டியவர் இன்று தனது சொந்த ஊரான வாத் நகர் சென்றார்.
தனிவிமானம் மூலம் அங்கு சென்றவர், பின்னர் காரில் புறப்பட்டுச்சென்று வழி நெடுகிலும் மக்களை சந்தித்தார். பிரதமராக பதவியேற்ற பின்னர் இது வரை சொந்த ஊருக்கு செல்லாதமோடி தற்போது செல்வதால் அவரை வரவேற்பதற்காக சொந்த ஊர் திருவிழாக் கோலம் போன்று காணப்பட்டது. பிரதமர் மோடியைக் காண வழிநெடுக மக்கள் கூட்டம் திரண்டிருந்தது. காரில் கதவுகளை திறந்து நின்றபடி வந்த மோடியை மேளதாளங்கள் முழங்க, மலர்கள் தூவி மக்கள் வரவேற்றனர்.
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.