குஜராத்தில் திறமையான நிர்வாகம் அபாரமான வளர்ச்சி: அமெரிக்கா பாராட்டு

இந்தியாவை பொறுத்தவரை, சிறந்த திறமையான நிர்வாகதுக்கும், அபார வளர்ச்சிக்கும், நரேந்திரமோடி தலைமையிலான குஜராத் அரசே , சிறந்த முன் உதாரணமாக உள்ளது ‘ என்று ,அமெரிக்க பாராளுமன்ற எம்.பி_க்களை கொண்ட ஆய்வுக்குழு ஒன்று நரேந்திர மோடியை பாராட்டி உள்ளது

அந்த ஆய்வு குழு தனது அறிக்கையில் தெரிவிப்பதாவது ;

இந்திய மாநிலங்களில் , திறமையான நிர்வாகத்துக்கும், அபார வளர்ச்சிக்கும், சிறந்த முன் உதாரணமாக, குஜராத்மாநிலம் திகழ்கிறது. குஜராத் மாநில முதல்வரான நரேந்திர மோடி, மாநிலத்தின் வளர்ச்சிக்கு பயனுள்ள_திட்டங்களை தீட்டி, செயல்படுத்தினார். இதன்காரணமாக, குஜராத் பல்வேறு துறைகளிலும் சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளது .

பொருளாதார நடவடிகைகளை ஒழுங்கு படுத்தியது, சிகப்புநாடா முறையை ஒழித்தது, ஊழலை குறைத்தது ஆகிய நடவடிக்கைகள் மூலம், தேசிய பொருளாதார_வளர்ச்சிக்கு முக்கிய_காரணமாக மோடி விளங்குகிறார். மின்சார வசதி, சாலை மேம்பாடு போன்றவற்றுக்காக , பெரிய அளவில் முதலீடு செய்தார், இதன்காரணமாக, அந்த மாநிலத்தின் ஆண்டு பொருளாதாரவளர்ச்சி, 11 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.

சர்வதேச அளவில் சிறந்துவிளங்கும் ஜெனரல் மோட்டார்ஸ், மிட்சுபிஷி ஆகிய நிறுவனங்கள் அங்கு முதலீடு_செய்துள்ளன. இந்திய மக்கள் தொகையில் 5சதவீத மக்கள் மட்டுமே குஜராத்தில் இருக்கிறார்கள் . ஆனால், இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 20சதவீதம் (ஐந்தில் ஒரு பங்கு) குஜராத் மாநிலத்தை சார்ந்து இருக்கிறது.
என்று தெரிவித்துள்ளது ,

இதை பாரதிய ஜனதா கூறவில்லை அமெரிக்கவே கூறுகிறது, மோடி அமெரிக்காவில் நுழைய தடை அன்று! அமெரிக்காவின் பாராட்டு இன்று!….. காலம் நல்ல பதிலை சொன்னது! வாழ்க ! இந்தியாவின் இரும்பு தலைவர்.வருங்கால பிரதமர்.!

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் ஏற்பட்ட புயல் பாதி ...

தமிழகத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி 'பெஞ்சல்' புயல், தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து, ...

மக்கள் மன்றத்தில் வெற்றி பெற வே ...

மக்கள் மன்றத்தில் வெற்றி பெற வேண்டும் – அண்ணாமலை எந்த நீதிமன்றத்தில் வேண்டுமானாலும் தப்பித்தாலும், மக்கள் மன்றத்தில் வெற்றி ...

புதிய சட்டங்கள் மக்களை பாதுகாக ...

புதிய சட்டங்கள் மக்களை பாதுகாக்கும் – பிரதமர் மோடி பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்து பயன்படுத்தப்படும், ஐ.பி.சி., எனப்படும் ...

மூன்று குற்றவியல் சட்டங்களை நி ...

மூன்று குற்றவியல் சட்டங்களை நிறைவேற்றிய நீதிபதிகளுக்கு நன்றி – பிரதமர் மோடி 'புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்திய உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு ...

சாகசத்தை மட்டுமே பேசுகிறது வரல ...

சாகசத்தை மட்டுமே பேசுகிறது வரலாறு – அமைச்சர் ஜெய் சங்கர் ''அனைத்து சமூகத்திலும் வரலாறு என்பது சிக்கலானது. அன்றைய அரசியல் ...

தி சபர்மதி ரிப்போர்ட் படத்தை அம ...

தி சபர்மதி ரிப்போர்ட் படத்தை அமைச்சர்களுடன் பார்த்த பிரதமர் மோடி குஜராத்தின் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை மையமாக வைத்து ...

மருத்துவ செய்திகள்

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...