காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு, மொத்தவிற்பனை வருவாய்க்கும் லாபத்துக்கும் வேறுபாடு தெரியவில்லை என்று பாஜக தேசியதலைவர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா நடத்திவரும் தொழில் நிறுவனம், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த அபரிதமான வளர்ச்சி அடைந்துள்ளதாக ‘தி வையர்’ என்ற இணையஇதழ் செய்தி வெளியிட்டது.இப்புகாரால் சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு பதில் அளிக்கவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், ஜெய் நிறுவனத்தில் எந்த ஊழலும் நடைபெறவில்லை என்று அமித் ஷா கூறினார்.
இந்நிலையில் அகமதாபாத்தில் டி.விநிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமித் ஷா கூறும்போது, “ஜெய் ஷா சட்டத்துக்கு உட்பட்டு தொழில்செய்து வருகிறார். எனவேதான் செய்தி வெளியிட்ட இணைய இதழுக்கு எதிராக ரூ.100 கோடி இழப்பீடுகேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். ராகுல் காந்தி என்ன சொல்கிறார் என்பதுபற்றி நான் கவலைப்படவில்லை. அவர், மொத்த விற்பனை வருவாய்க்கும் லாபத்துக்கும் வேறுபாடு தெரியாதவர்.எனதுமகன் மீதான குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. எனவேதான் விசாரணை குறித்த கோரிக்கை எழுவதற்கு முன் அவர் நீதிமன்றம் சென்றுள்ளார்.
எனதுமகன் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் நஷ்டமும் ஏற்படலாம். கடனுக்கும் கடனுக்கான உத்தரவாதத்துக்கும் ராகுல் காந்திக்கு வேறுபாடு தெரியவில்லை. அனைத்து கடன்களும் அடைக்க பட்டுள்ளன. அரசுடன் எந்த வர்த்தகத்திலும் ஜெய்ஷா ஈடுபடவில்லை. எந்தஅரசு நிலத்தையும் அவர் கைப்பற்றவில்லை. ஒப்பந்த தாரர்களுடன் அவருக்கு எவ்வித தொடர்பும் இல்லை” என கூறினார்.
ஜெய்ஷாவுக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உதவியதில் எவ்வித தவறும் இல்லை என்றார் அமித் ஷா. இது தொடர்பாக அவர் கூறும் போது, “ஜெய்ஷாவுக்கு அமைச்சர் என்ற முறையில் பியூஷ் கோயல் உதவ வில்லை. பாஜக தலைவர் என்ற முறையில்தான் உதவினார். அவ்வாறு உதவியதில் பியூஷ் கோயல் என்ற குற்றம் செய்துவிட்டார்” என்றார்.
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.