காஷ்மீருக்கு கூடுதல்தன்னாட்சி வழங்கே வேண்டும் என கூறிய முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பர த்துக்கு பிரதமர் நரேந்திரமோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று சனிக் கிழமை செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் பேசுகையில், ஜம்முகாஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கவேண்டும். அதே வேலையில் அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவின் படி காஷ்மீருக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படவேண்டும் என்று கூறினார்.
ப.சிதம்பரத்தின் கருத்துக்கு பாஜக தலைவர்கள் அருண் ஜேட்லி, ஸ்மிருதி இரானி, சுப்பரமணிய சுவாமி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, சிதம்பரத்தின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துவரும் கருத்துக்கு அக்கட்சி பதில்அளிக்க வேண்டும். காஷ்மீருக்கு கூடுதல்தன்னாட்சி வழங்கவேண்டும் என்கிற காங்கிரஸ் தலைவர்களின் கருத்தை ஏற்கமுடியாது. மக்கள் எதிர்பார்க்க வில்லை. நாட்டின் பிரதான் கட்சியான காங்கிரஸ் கட்சியிடம் இருந்து இப்படியொரு கருத்தை நாட்டுமக்கள் எதிர்பார்க்க வில்லை.
காஷ்மீருக்கு தன்னாட்சிதேவை என காங்கிரஸ் தலைவர்கள் பேசுவது என்பது நமது துணிச்சலான ராணுவவீரர்களை அவமதிப்பதாகும். மக்களுக்கு எதிரானது. ராணுவத்தினரின் தியாகத்தின்மீது அரசியலை செய்யும் மக்கள் நாட்டின் நலனுக்காக பங்களிக்கமுடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
"முன்னாள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் இப்பொழுது இது போன்ற திடீர் திருப்பத்திற்கான அறிக்கைகளை கையில் எடுத்து கொள்கிறார்கள், அவர்களின் அத்தகைய அறிக்கைபோர்களை வெட்கமின்றி செய்கிறார்கள்" என்று கூறினார்.
நாட்டு மக்களின் உணர்வுக்கு விரோதமானதாக காங்கிரஸ் இருந்து வருகிறது. "தொடர்ச்சியான தோல்விக்கு பிறகு, காங்கிரஸில் உள்ள விவேக மானவர்கள் சரியானபாதையில் அதை கொண்டு வர முயற்சிப்பார்கள் என்று எதிர்பார்க்கப் பட்டது, ஆனால், நாம் அவர்களிடமிருந்து ஏமாற்றத்தையும், பொறுப்பற்ற நடத்தையைத்தான் பார்க்கவும் கேட்கவும் முடிகிறது," என்றும் காங்கிரஸ் கட்சி அதன் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள போவதில்லை என்று மேலும் தெரிவித்தார்.
டோக்லாம் விவகாரத்தின்போது காங்கிரஸ் கட்சியினர் பொய்யான தகவல்களை பரப்பிவிட்டனர். டோக்லாம் விவகாரத்தில் என்னநடந்தது என்பதை முழு உலகமும் கண்டது. சீனா எவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருந்தாலும், தனதுதிறமை, விடாமுயற்சி மற்றும் நிலைத்தன்மையும் டோக்லாமில் வெளிப்படுத்தியது இந்தியா என்று கூறினார்.
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
Leave a Reply
You must be logged in to post a comment.