உலக அமைதியின் தூது வராக இந்தியா திகழ்கிறது என மான்கீ பாத் உரையில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக் கிழமையும் மக்களிடையே ரேடியோ மூலமாக உரையாற்றி வருகிறார். அந்தவகையில் நண்பகலில் 'மான் கீ பாத்' உரை ஆற்றினார்.
இந்தியா எப்போதும் உலக அமைதிக்கும், ஒற்றுமை க்குமே ஆசைப்படுகிறது. இந்தியாவின் இராணுவப் படைக ளுக்கும் கூட இதைத் தான் விரும்புகின்றன. இதுவரை 7000க்கும் அதிகமான இந்திய அதிகாரிகள் ஐக்கிய நாடுகளின் சபையோடு இணைந்து பணியாற்றி வருகிறார்கள். உலகிலேயே ஐ.நா.,வில் அதிக அதிகாரிகள் பணியாற்றும் நாடுகளில் இந்தியாவிற்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.
இது வரை இந்திய இராணுவத்தினர் 85க்கும் அதிகமான நாட்டு இராணுவவீரர்களுக்கு அமைதிப் பாதுகாப்பு வழி, முறைகள் பற்றி பயிற்சி அளித்து இருக்கிறார்கள். அதோடு பலநாடுகளுக்கு நாம் மருத்துவ உதவியும் அளித்து இருக்கிறோம். இந்தியா எப்போதும் உலக அமைதிக்கான தூதுவராக இருந்துவருகிறது. 50க்கும் அதிகமான ஐநா.,வின் அமைதி பாதுகாப்பு நடவடிக்கைகளில் நமது நாட்டு இராணுவவீரர்கள் கலந்து கொண்டிருக் கிறார்கள். இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.
மேலும் இந்தியாவின் இறையாண்மையை மதிக்கும்பண்பு, காதி நிறுவனத்தின் வருமானத்தை அதிகப்படுத்தும் வழிமுறைகள், தூய்மை இந்தியா ஆகியவற்றையும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். அதோடு குழந்தைகள் சிறுவயதிலேயே சர்க்கரை நோய்க்கு ஆளாவதையும் அதைத்தடுக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடும் என்றும் உறுதியளித்தார். இந்தியாவில் நடக்கவிருக்கும் 17 வயதுக்குட் பட்டோருக்கான ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு வாழ்த்துகளையும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.