சமூக நீதியின் காவலன்

இந்திய துணைக்கண்டத்தின் 14 ஆவது பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள திரு. நரேந்திர தாமோதரதாஸ் மோதி அவர்கள் 17.09.1950 அன்று குஜராத் மாநிலம் மெஜானா மாவட்டத்தில், வாத் நகரில் மோத் காஞ்ச் தெல்லி என்கிற இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த திரு. தாமோதர தாஸ் மூல் சந்த் மோதி, திருமதி. ஹீராபென் மோதி தம்பதியினரின் 3ஆவது குழந்தையாகப் பிறந்தார்.

திரு. தாமோதரதாஸ் மூல் சந்த் மோதி வாத் நகர் ரயில்வே நிலையத்தில் தேநீர்கடை நடத்தி வந்தார். திரு. நரேந்திர மோதி பள்ளியில் படிக்கும் போது அவருக்குத் துணையாக தேநீர்கடையில் பணியாற்றி வந்தார். திரு. நரேந்திர மோதி 1967ஆம் ஆண்டு வாத்நகர் அரசு பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்தார். படிக்கும் போதே சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்துள்ளார். தன்னுடைய எட்டு வயதிலேயே தன்னை ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கத்தில் இணைத்துக் கொண்டு தவறாது பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டதன் விளைவாக “”பால ஸ்வயம்சேவக்காக” நியமிக்கப்பட்டார்.

1971 ஆம் ஆண்டு முதல் ஆர்.எஸ். எஸ் ன் முழு நேர ஊழியரானார் (பிரச்சாரக்). 1978ஆம் ஆண்டு பட்டப்படிப்பு இளங்கலையும், 1982 ஆம் ஆண்டு பட்ட முதுகலைப்படிப்பும் முடித்தார். 1985 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் இவரை குஜராத் மாநில பாரதிய ஜனதாக் கட்சிக்கு அனுப்பியது. 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற அகமதாபாத் நகர்மன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெருமளவில் வெற்றி பெற்று கால்பதித்தற்கு காரணம் திரு. நரேந்திர மோதியின் திட்டமிடுதலும், கடின உழைப்பும்தான் மூல காரணமாக அமைந்தது.

அதே ஆண்டு குஜராத் மாநில பா.ஜா.க வின் அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் 1990ஆம் ஆண்டு பா.ஜா.க வின் அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அதே ஆண்டு பா.ஜ.க வின் தேசிய செயற்குழு உறுப்பினரானார். 1995ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க வின் வெற்றிக்கு திரு.நரேந்திர மோதி சிறப்பாகப் பணியாற்றியதன் விளைவாக பா.ஜ.க வின் தேசிய செயலாளராகத் தேர்வானார்.

இமாசலப் பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு அங்கு பா.ஜ.க வின் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்தார். 1998ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கு திரு. நரேந்திர மோதி முழுப் பொறுப்பேற்று தேர்தலை முன்னின்று நடத்தி மகத்தான வெற்றியைக் குவித்தார். திரு. கேஜூபாய் பட்டேல் முதல்வராக பொறுப்பேற்றார். திரு. நரேந்திர மோதியின் மகத்தான சாதனையை பாராட்டும் வண்ணம் பா.ஜ.க வின் தேசிய அமைப்புச் செயலாளராக நியமனம் பெற்றார்.

திரு.கேஜூபாய் பட்டேல் உடல் நலம் குன்றியதாலும் அவர் தலைமையிலான அரசு பல ஊழல் குற்றச்சாட்டுக்களைச் சந்தித்தாலும் அப்போதைய பிரதமர் திரு. ஏ.பி. வாஜ்பாய் அவர்களின் ஆலோசனைப்படி 3.10.2001 அன்று திரு. நரேந்திர மோதி குஜராத் மாநில முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டு 7.10.2001 அன்று முதல்வராக பொறுப்பேற்றார். ராஜ்கோட் 2 சட்ட மன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்று 24.2.2002 அன்று குஜராத் சட்டமன்ற உறுப்பினரானார்.

திரு. நரேந்திர மோதி முதல்வரான பின்பு அவரின் கடின உழைப்பால் குஜராத் மாநிலம் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி பெற்று முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. அதுவும் குறிப்பாக வேளாண் துறையை பேணிக் காக்க நிலத்தடி நீர் சேமிப்பதற்கு, 2002ல் இருந்து 2008ம் ஆண்டு டிசம்பருக்குள் 1,13,738 தடுப்பணைகள், 5 லட்சம் ஏரிகள் கட்டப்பட்டுள்ளது. அதன் விளைவாக பருத்தி உற்பத்தியில் குஜராத் மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

2001 2010 ம் ஆண்டிற்குள் குஜராத் மாநிலம் விவசாயத்தில் 10.97% வளர்ச்சியை அடைந்துள்ளது. மேலும் மின் உற்பத்தியில் மின் மிகை மாநிலமாகத் திகழ்கிறது. அதே போல் பல்வேறு தொழிற்சாலைகள் துவங்கப்பட்டு பல இலட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளார்கள். திரு. நரேந்திர மோதி குஜராத் மாநில அரசியலிலிருந்து விலகி 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று 26.5.2014 அன்று இந்தியாவின் 14வது பிரதமராக பொறுப்பேற்றார். திரு. நரேந்திர மோதி அவர்கள் பிரதமராகப் பொறுபேற்றது முதல் இந்திய நாட்டில் வாழும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் பலவற்றை நிறைவேற்றியுள்ளார்.

இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் மிக முக்கியமான கோரிக்கை தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியலமைப்புச்சட்ட அந்தஸ்து தர வேண்டுமென்பது. இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள், பல மாநில முதல்வர்கள், பல்வேறு சமுதாயத் தலைவர்கள் கடந்த 24 ஆண்டுகாலமாக பல்வேறு பிரதமர்களைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள். யாரும் செவி சாய்க்காதபோது பிரதமர். திரு. நரேந்திர மோதி அவர்கள் விரைந்து நடவடிக்கையெடுத்து 23.3.2017 அன்று அமைச்சரவைக் கூட்டத்தில் அக்கோரிக்கையை அங்கீகரித்து 20 நாளில் அதற்கான சட்ட முன்வடிவு மக்களவையில் தாக்கல் செய்து அது நிறைவேறியது பாராட்டுதலுக்  குரியதாகும்.

மேலும் தேசிய அளவிலான பட்டியலில் உள்ள இதர பிற்படுத்தப் பட்டோர்களை உட்பிரிவு செய்ய வேண்டும் என்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 1993ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து கோரி வருகிறது. இந்திய உச்ச நீதிமன்றமும் பல வழக்குகளில் இக்கருத்தை வலியுறுத்தியுள்ளது. தற்பொழுது பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோதி தலைமையிலான அரசு இதற்கு அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 340ன் படி ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திருமதி. ஜி. ரோகிணி தலைமையில் 2.10.2017 அன்று தனி ஆணையம் அமைத்து 90 நாட்களுக்குள் அறிக்கை அளிக்கும்படி அறிவுறுதியுள்ளது.

 

பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோதி அவர்கள் இதர பிற்படுத்தப்பட்டோர்களுக்கு மட்டுமன்றி தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கும் வேண்டிய அனைத்து நற்பணிகளையும் செய்து வருகிறார். இந்திய நாட்டில் வாழும் “”விமுக்த சாதியினர் சீர் மரபினர்” என அழைக்கப்படும் “Denotified, Nomadic and Semi Namadic Tribes”  மக்களை அடையாளம் காணவும், அவர்களின் மேம்பாட்டிற்கான திட்டங்களை முன்மொழியவும் 09.01.2015 அன்று பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோதி தலைமையிலான அரசு திரு.பிக்குராம் இதாத்தே அவர்கள் தலைமையில் “National
Commission for Denotified, Nomadic and Semi Nomadic Tribes Commission” ஐ அமைத்துள்ளது. அந்த ஆணையம் நாடு முழுவதும் சென்று சீர்மரபினரை அடையாளம் கண்டு தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கும், இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து பிரித்தெடுத்து தனிப் பட்டியலிட்டு அவர்களின் மேம்பாட்டிற்கான திட்டங்களையும் சிபாரிசு செய்து 25.06.2017 அன்று தன் அறிக்கையை சமூக நீதி மற்றும் அமலாக்கத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது.

நீண்டகாலம் நிலுவைலிருந்த இந்த கோரிக்கை திரு.நரேந்திர மோதி அவர்களின் நற்செயலால் நிறைவேறியுள்ளது. மத்தியரசு ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலையறிக்கையில் சமூக நீதி மற்றும் அமலாக்கத்துறை அமைச்சகத்திற்கு நிதி ஒதுக்கும். அதில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு நிதி ஒதுக்குவதில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு மட்டும் என்னென்ன திட்டங்களுக்கு எவ்வளவு நிதியென்று உப பட்டியலிட்டு (Sub Plan) நிதி ஒதுக்கும். இதர பிற்படுத்தப்பட்டோர் நலத்திற்கு மிகவும் குறைவான தொகையே ஒதுக்குவதுடன் எவ்வித உபதிட்டங்களுக்கு எவ்வளவு தொகையென்று தலைப்பிட்டு ஒதுக்குவதில்லை.

திட்டக்கமிஷனிடம், மத்திய நிதி அமைச்சகத்திலும் இந்த குறையை களையும்படி பலரும் பலமுறை வற்புறுத்தியும் வந்தனர். ஆனால் எவ்வித பலனுமில்லை. முதன் முறையாக பிரதமர் திரு. நரேந்திரமோதி தலையிலான அரசின் “”நிதி அயோக்” 28.9.2017 அன்று அதன் முதன்மை ஆலோசகர் திரு. ரத்தன் P. வாட்டல் தலைமையில் மத்தியரசின் சமூக நீதி மற்றும் அமலாக்கத்துறை அமைச்சகத்தின் 1. தாழ்த்தப்பட்டோர்,2. பழங்குடியினர், 3. இதர பிற்படுத்தப்பட்டோர், 4. சிறுபான்மையினர், 5. ஊனமுற்றோர், 6. மூத்த குடிமக்கள் ஆகியோர்கள் நிலை குறித்தும் அவர்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் சமூகநீதி மற்றும் “”அமலாக்கத் துறை அமைச்சகத்திற்கான செயல்குழு 75” (Working Group of India @ 75 for Social Justice and Empowerment Division) ஆலோசனைக்கூட்டம் ஒன்றை நடத்தியது. அதில் பல்வேறு துறைகளைச் சார்ந்த 11 நிபுணர்கள் அடங்கிய குழுவினரும், 21 துறை அலுவலர்களும் பங்கேற்றனர்.

இதர பிற்படுத்தப்பட்டோர் சார்பில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி திரு. வி. ஈஸ்வரய்யா அவர்களும் கலந்து கொண்டார். அவர் இதர பிற்படுத்தப் பட்டோருக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார். நிதி ஒதுக்கீட்டில் தாழ்த்தப் பட்டோருக்கும் பழங்குடியினருக்கும் நிதி ஒதுக்குவது போல் இதர பிற்படுத்தப் பட்டோருக்கும் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டுமென்பதையும், உப திட்டம் (Sub plan) வாயிலாக ஒவ்வொரு நலத் திட்டத்திற்கும் தனியாக நிதி ஒதுக்க வேண்டுமென்பதையும் கேட்டுக்கொண்டார்.

சமூக நீதி மற்றும் அமலாக்கத் துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு. ஆ.ஃ.மீனா அவர்கள் மத்தியரசின் நிதிநிலை அறிக்கையில் இதர பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தினார். முதன் முறையாக இதர பிற்படுத்தப்பட்டோர் துறை குறித்து மத்தியரசு நிதி அயோக்கில் ஆய்வுக்கெடுத்துக்கொண்டது வரவேற்கத்தக்கதாகும். பாரதப் பிரதமர் நரேந்திரமோதி அவர்கள் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு மட்டுமன்றி தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் மீதும் மிகுந்த அக்கறை யுடையவராகத் திகழ்கிறார்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் கான்பூர் மாவட்டத்தில் பாரூக் என்கிற குக்கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் ஒரு சிறு விவசாயக் குடும்பத்தில் பிறந்த திரு.ராம்நாத் கோவிந்த் அவர்களை பாரதத் திருநாட்டின் 14ஆவது குடியரசுத் தலைவராக்கியது பிரதமர் திரு.நரேந்திர மோதியின் வரலாற்றுச் சாதனையாகும். மறைந்த பாரத் ரத்னா அம்பேத்கார் அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு உலகமே வியக்கும் வண்ணம் பல சிறப்புக்களைச் செய்துள்ளது. அண்ணல் அம்பேத்கார் அவர்களின் நினைவு நாளான 6.12.2015 அன்று திரு. அம்பேத்கார் அவர்கள் உருவம் பொறித்த ரூ.10, ரூ. 125ற்கான நாணயங்களை புது டெல்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோதி வெளியிட்டார்.

திரு. அம்பேத்கார் அவர்கள் 1921-1922 ஆண்டுகளில் லண்டனில் தங்கிப்படித்த கிங் ஹென்றி சாலையில் உள்ள ரூ.4 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான இல்லத்தை மஹாராஷ்ட்ரா அரசால் விலைக்கு வாங்கி புதுப்பித்து ” Dr. Bhimarao Ramji Ambedkar , Indian Crusader for Social Justice”  என்ற அற்புத வாசகங்கள் பொறித்த நினைவகத்தை பிரதமர் திரு. நரேந்திர மொதி 13.11.2015 அன்று திறந்து வைத்தார்.

லண்டனில் நடந்த இவ்விழாவில் மஹாராஷ்ட்டிர மாநில முதல்வர் திரு. தேவேந்திர பட்நவிஸ், மத்திய அமைச்சர் திரு. ராமதாஸ் அத்தாவாலே M.P ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அண்ணல் அம்பேத்கார் இறுதிநாட்களில் வாழ்ந்து 6.12.1956 அன்று மறைந்த டெல்லி அலிப்பூர் சாலை 26ஆம் எண் இல்லத்தை பெரும் பொருட்செலவில் தேசிய நினைவுச் சின்னமாக மாற்றுவதற்காக பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோதி 21.3.16 அன்று அடிக்கல் நாட்டினார்.

திரு. அம்பேத்கார் பிறந்த ஊரான மோவிலும், கல்வி பயின்ற தீக்சா பூமியான நாக்பூரிலும், சைதன்ய பூமியாக மும்பையிலும் பிரம்மாண்டமான முறையில் நினைவகங்கள் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து நிதி ஒதுக்கியுள்ளது. இந்த ஐந்து நினைவிடங்களுக்கும் மத்திய அரசு ” கஅNஇஏகூஉஉகீகூஏ” எனப் பெயரிட்டுள்ளது. புது டெல்லியில் ஜன்பத் சாலை 15ஆம் எண் இல்லத்தில் அம்பேத்கார் சர்வதேச மையம் அமைக்க பிரதமர் திரு.நரேந்திர மோதி 30.9.2015 அன்று அடிக்கல் நாட்டினார். 14.4.2015 அன்று அம்பேத்கர் அவர்களின் 125வது பிறந்தநாள் விழா மத்தியரசால் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அம்பேத்கர் 125வது பிறந்தநாளை முன்னிட்டு தாழ்த்தப்பட்ட  சமுதாயத்தைச் சேர்ந்த 100 தாழ்த்தப்பட்ட மாணர்வகள் அம்பேத்கார் பயின்ற லண்டன் பொருளாதார பல்கலைகழகத்திற்கும் மற்றும் அமெரிக்க நாட்டில் உள்ள கொலம்பியா பல்கலை கழகத்திற்கும் பயிற்சிக்காக அம்பேத்கார் பவுண்டேஷன் அனுப்பி வைத்தது.

பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோதி அவர்கள் கட்சிப் பாகுபாடின்றி சமூக நீதிக்குப் போராடிய தலைவர்களை போற்றிக் கௌரவித்து வருகிறார். கேரள மாநில முன்னாள் முதல்வர் திரு. ஆர். சங்கர், ஸ்ரீநாராயணகுரு தர்ம பரிபாலன சபையின் தலைவராகப் பணியாற்றியவர். ஸ்ரீ நாராயண குரு டிரஸ்ட் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் ஏழை, எளிய பின்தங்கிய சமுதாய மாணவர்களுக்கு முழுக்கல்வி உதவித்தொகை வழங்கி வந்தார். தன் வாழ்நாளையே இதர பிற்படுத்தப் பட்டோருக்காக அர்ப்பணித்த அவரைப் போற்றும் வண்ணம் அவரின் முழு உருவச் சிலையை அவரின் சொந்த ஊரான கொல்லத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோதி அவர்கள் 14.12.2015 அன்று திறந்து வைத்து அவருக்கு புகழஞ்சலி செலுத்தினார்.

அவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் 22.9.1962 முதல் 10.9.1964 வøர கேரள மாநில முதல்வராக மிகச் சிறப்பாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக நீதிக்காகப் போராடிய பெரியார் திரு. ஈ.வெ.ரா அவர்களின் பிறந்தநாளை முதல்முறையாக மத்திய அரசின் எண்ணெய் எரிவாயு கழகத்தின் (ONGC) மூலமாக 17.9.2016 அன்று மிகச்சிறப்பாக நாடு முழுவதிலும் அனைத்து ONGC கிளைகளிலும் கொண்டாடுவதற்கு ஆணை பிறப்பித்து தேவையான நிதியும் ஒதுக்கி உரிய நடவடிக்கை எடுத்ததுடன் இந்த ஆண்டும் கூடுதல் நிதி ஒதுக்கி பெரியார் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட நடவடிக்கை எடுத்ததும் பாராட்டுதலுக்குரியதாகும். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து பின்தங்கிய சமுதாயத்தினரின் மேம்பாட்டிற்காக தன்னை அர்பணித்துக் கொண்டுள்ள பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோதி சமூக நீதி காக்கும் பிரதமராகத் திகழ்கிறார் என்றால் அது மிகையாகாது.

நன்றி; S.K கார்வேந்தன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...