டீமானிட்டியசேஷன் என்ன சாதித்தது?

சென்ற வருடம் இதேநாள் டீமானிட்டியசேஷன் என்கிற 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை
செல்லாதாக்கிய நடவடிக்கை ஆரம்பமானது. அத னால் என்ன விளைவுகள் இந்திய பொருளாதாரத்தில் நிகழ ஆரம்பித்தது என்று மத்திய நிதி அமைச்சகம் தந்துள்ள அறிக்கையின் சுருக்கம்-

இந்திய ரிசர்வ் வங்கி அதன் வருடாந்திர கணக்குக ளை முன்வைக்கும் போது, 30.06.2017 அன்று வரை ரூ.15.28 லட்சம் கோடி மதிப்புடைய குறிப்பிட்ட வகை ப்பட்ட வங்கி நோட்டுகள் மீண்டும் வங்கியில் செலுத் த ப் பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தது. வெளியில் சுற்றுக்கு விடப்பட்டிருந்த குறிப்பிட்ட வகை வங்கி நோட்டுகளின் மதிப்பு 2016, நவம்பர் 8-ஆம் தேதியன்று ரூ.15.44 லட்சம் கோடி ஆகும்

ஆக டீமானிட்டியசேஷன் கொண்டு வந்ததன் முக்கிய நோக்கமான கருப்பு பணம் அரசின் கஜானாவிற்கு வருதல் நிகழ்ந்து விட்டது என்றே சொல்லலாம்.

இப்பொழுது புழக்கத்தில் உள்ள பண நோட்டுகள் மதிப்பு இந்த ஆண்டுசெப்டம்பர் வரையிலான அரை யாண்டு காலத்தில் ரூ. 15.89 லட்சம் கோடி ஆகும். ஆண்டுக்கு ஆண்டு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஏற்ப டும் மாற்றங்களின்படி இது ரூ.(-)1.39 லட்சம் கோடி ஆகும். சென்ற ஆண்டில் இதே காலக்கட்டத்தில் ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தின் போது இது ரூ.(+)2.50 லட்சம் கோடியாக இருந்தது.

அதாவது இப்பொழுது புழக்கத்தில் உள்ள பண நோட் டுக்களின் மதிப்பு ரூ.3.89 லட்சம் கோடி அளவுக்குக் குறைந்து டிஜிட்டல் பரிவர்த்தனை உயர்ந்துள்ளது

டீமானிட்டியசேஷன் அமலாக்கப்பட்டபோது பொரு ளா தாரத்தில் ரொக்கப் பணம் வைத்திருப்பவர்க ளி ன் அடையாளத்தைக் கண்டறிவது அதன் நோக்கங் க ளில் ஒன்றாக இருந் தது. முறைப்படுத்தப்பட்ட வங்கி அமைப்பிற் குள் ரூ.15.28 லட்சம் கோடி பணம் திரும்பி வந்ததும் ரொக் கப் பணம் வைத்திருப்பவர்க ளின் முகவரி முழு வதும் பதிவாகியுள்ளது.

இவ்வாறு உள்ளே வந்த பணத்திலிருந்து பல்வேறு மதிப்பீடுகளின்படி ரூ.1.6 லட்சம் கோடியிலிருந்து ரூ.1.7 லட்சம் கோடி வரையிலான சந்தேகத்திற் கிட மான பரிவர்த்தனைகள் என்ற வகையில் கண்ட றியப் பட்டுள்ளன. சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைக ளின் மீது நடவடிக்கை எடுப்பதற்காக இந்தப் புள்ளிவி வரங் கள் தற்போது வருமான வரி நிர்வாகம் மற்றும் இதர அமலாக்கப் பிரிவுகளிடம் உள்ளன.

2015-16 நிதியாண்டில் சந்தேகத்திற்குரிய பரிவர்த்த னைகள் என வங்கிகள் பதிவு செய்திருந்த அறிக்கை கள் 61,361 எனில் இது 2016-17 நிதியாண்டி ல் 3,61,214-ஆக உயர்ந்துள்ளது. இதேபோன்ற நிதிசார் நிறுவனங் களின் அறிக்கை என்பது 40,333-லிருந்து 94,836-ஆகவு ம், செபி அமைப்பில் பதிவு செய்துள்ள துணை நிறுவ னங்களின் எண்ணிக்கை 4,579-லிருந்து 16,953-ஆகவும் உயர்ந்துள்ளது

இந்தப் பெஆய்வின் அடிப்படையில், 2015-16ஆம் ஆண்டை ஒப்பிடும் போது வருமானவரித் துறை கைப்பற்றியுள்ள பணத் தின் மதிப்பு 2016-17இல் இரண்டு மடங்காகி யுள்ளது. வருமான வரித்துறை மேற்கொண்ட சோத னை மற்றும் கைப்பற்றல் நடவடிக்கைகளின் மூலம் கணக்கில் கொண்டு வரப்படாத ரூ.15,497 கோடி ஒப்புக் கொள்ளப்பட்டது. இது 2015-16இல் மேற்கொள்ளப் பட்ட சோதனைகளின் தொகையை விட 38% அதிகம் ஆகும்

2016-17ஆம் ஆண்டில் ஆய்வுகளின்போது கண்டுபிடி க் கப்பட்ட தெரிவிக்கப்படாத வருமானத்தின் மதிப்பு ரூ.13,716 கோடி. இது 2015-16இல் கண்டுபிடிக்கப்பட் டதை விட 41% அதிகமாகும்

வருமானம் குறித்த படிவத்தைப் பதிவு செய்பவர்கள் இவ்வாறு பதிவு செய்வதற்குக் கடைசி நாளான 2017, ஆகஸ்ட் 5 வரை முதல்முறையாக இவ்வாறு பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 56 லட்சமாக இருந்தது. கடந்த ஆண்டில் இவ்வாறு முதன்முறை யா க பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை சுமார் 22 லட்சம் மட்டு மே.

ஏப்ரல் 1 முதல் ஆகஸ்ட் 5, 2017 வரை நிறுவனமல் லா த வரி செலுத்துவோர் செலுத்திய சுய மதிப்பு வரி (வருமான வரி குறித்த படிவத்தைப் பதிவு செய்யும் போது தானாகவே முன்வந்து வரி செலுத்துவது), 2016-இல் இதே காலப்பகுதியில் செலுத்தப்பட்ட தொகையை விட 34.25% அதிகமாகும்.

வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு-

முறைப்படுத்தப்பட்ட பொருளாதாரத்திற்குள் கணக்கில் இல்லாத வருமானத்தைக் கொண்டு வருவது ஆகியவற்றின் விளைவாக நடப்பாண்டில் பெருநிறுவனம் அல்லாதவர்கள் செலுத்திய முன்கூட்டிய வரியின் அளவும் ஏப்ரல் 1 முதல் ஆகஸ்ட் 5 வரையில் சுமார் 42% அதிகரித்திருந்தது.

டீமானிட்டியசேஷன் நடவடிக்கையின்போது சேகரிக் க ப் பட்ட புள்ளிவிவரங்கள் சந்தேகத்திற்கிடமான 2.97 லட்சம் போலி நிறுவனங்களைக் கண்டறிய வழிவகு த்துள்ளது. இந்த நிறுவனங்களுக்கு சட்டப்படியான அறிவிப்புகள் கொடுக்கப்பட்ட பிறகு முறையான நடவடிக்கைகளுக்குப் பிறகு நிறுவனங்களின் பதிவா ளர் அலுவலகப் பதிவேடுகளில் இருந்து 2.24 லட்சம் நிறுவனங்களின் பதிவுகள் ரத்து செய்யப்பட்டன.

சட்டப்படி இவ்வாறு பதிவு ரத்து செய்யப்பட்ட நிறுவ ன ங்களின் வங்கிக் கணக்குகளை அவர்கள் செயல்ப டுத்துவதை நிறுத்தவும், இந்தக் கணக்குகளை முடக் கி வைப்பதற்கும் இந்த நிறுவனங்களில் செயல்பட்டு வந்த இயக்குநர்கள் வேறு எந்த நிறுவனத்தின் இயக் கு நர் குழுவிலும் சேரத் தகுதியற்றவர்கள் என்று அறிவி க்கவும் என பல்வேறு மேல் நடவடிக்கைக ளும் எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு நிறுவனப் பதிவாளரின் பதிவேடுகளில் இருந்து நீக்கப்பட்ட 2.97 லட்சம் நிறுவனங்களில் 28,088 நிறுவனங்கள் 2016, நவம்பர் 9 முதல் பதிவேடு களில் இருந்து நீக்கப்பட்ட காலம் வரையில் அவற்றி ன் 49,910 வங்கிக் கணக்குகளின் மூலம் ரூ.10,200 கோடியை வங்கியில் செலுத்தியும், எடுத்தும் பரிவர் த் தனைகளை மேற்கொண்டிருந்தன.

இவற்றில் சில நிறுவனங்கள் 100-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருந்தன; ஒரு நிறுவன த்தின் வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை 2.314 என்ற அளவிற்கு இருந்தது.அதே நேரத்தில் வருமா ன வரித்துறை 1,150 போலி நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுத்தது. ரூ.13,300 கோடிக்கும் மேற்ப ட்ட கணக்கில் வராத (கருப்பு) பணத்தை 22,000 பேர் மூலமாக வெள்ளைப் பணமாக கணக்கில் கொண் டுவர இந்த நிறுவனங்கள் உதவி புரிந்துள்ளன

டீமானிட்டியசேஷன் நடவடிக்கையானது நிதிசார்ந்த சேமிப்புகளில் முதலீடு செய்வது அதிகரிக்க வழிவகு த்துள்ளது. அதற்கு இணையாக ஜி.எஸ்.டி. அறிமுகத் தின் மூலம் சமீப காலத்தில் பொருளாதாரத்தை மேலு ம் முறைப்படுத்துவதற்கான முனைப்பும் துவங்கியு ள்ளது.

ரொக்கப் பணமில்லா பொருளாதாரத்தை நோக்கிய நகர்வைத் தொடர்ந்து 2016-17ஆம் ஆண்டில் டிஜிட்டல் முறையிலான பணம் செலுத்துவதில் இந்தியா பெரு ம் முன்னேற்றத்தைக் கண்டது.

கடன் அட்டைகளின் மூலமாக 110 கோடி பரிவர்த்த னைகள் ரூ.3.3 லட்சம் கோடி மதிப்பிற்கும், வங்கிக ளின் சேமிப்பு அட்டைகளின் மூலமாக 240 கோடி பரிவர்த்தனைகள் ரூ.3.3 லட்சம் கோடி மதிப்பிற்கும் செய்யப்பட்டுள்ளன. 2015-16இல் பரிமாற்ற அட் டை களின் முறையே ரூ.1.6 லட்சம் கோடி, ரூ.2.4 லட்சம் கோடி அளவிற்கு பரிவர்த்தனை செய்யப்பட் டிருந்த து.

2015-16ஆம் ஆண்டில் முன்கூட்டியே பணம் செலுத் து ம் முறையில் செய்யப்பட்ட பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு ரூ.48,800 கோடி என்பதில் இருந்து 2016-17ஆம் ஆண்டில் ரூ.83,800 கோடியாக உயர்ந் தது. முன்கூட்டியே பணம் செலுத்தும் முறையில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளின் எண்ணி க்கையும் முறையே 75 கோடியிலிருந்து 196 கோடி யாக அதிகரித்துள்ளது.

2016-17ஆம் ஆண்டில் தேசிய மின்னணு நிதி பரிவர்த் தனை (நெஃப்ட்) ரூ.120 லட்சம் கோடி மதிப்புடைய 160 கோடி பரிவர்த்தனைகளை கையாண்டது. அதற் கு முந்தைய ஆண்டில் இது ரூ.83 லட்சம் கோடி மதிப்புள்ள 130 லட்சம் கோடி பரிவர்த்தனைகளாக இருந்தது.

பொருளாதாரமானது உயரிய அளவில் ஒழுங்கப் படுத்தப்பட்ட நிலையில், தொழிலாளர் ஈட்டுறுதி நிதி பங்களிப்பு, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக வசதிகளில் இணைந்து கொள்வது, தங்கள் வங்கிக் கணக்குகளிலேயே ஊதியத்தைப் பெறுவது போன்ற சமூகப் பாதுகாப்பு வசதிகள் மறுக்கப்பட்டிருந்த தொழிலாளர்கள் இதன் மூலம் பயன்பெற முடிந்த து.
>
பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு தொழிலா ளர் களுக்கான வங்கிக் கணக்குகளை துவக்குவது, தொழிலாளர் ஈட்டுறுதி நிதி, தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக வசதிகளில் சேர்வது ஆகியவற்றா ல் பயனடைந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை தற்போது இவற்றில் பயனடைந்து வரும் தொழிலா ளர்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 30% ஆகும்.

ஊதியத்தை அவர்களின் வங்கி கணக்கிலேயே பெறும் வகையில் சுமார் 50 லட்சம் தொழிலாள ர்களுக்கு புதிய வங்கிக் கணக்குகள் துவக்கப்பட்டன. இதனை நடைமுறைப்படுத்த உதவும் வகையில் ஊதியம் வழங்குவது குறித்த சட்டத்தில் தேவையா ன திருத்த ங்கள் செய்யப்பட்டன.

இப்பொழுது தானே நேர்மையான நிர்வாகத்திற்கு இந்தியா நுழைந்துள்ளது..இனிப் போக போக டீமானி ட்டியசேஷன் கொண்டு வரப்பட்டதின் முழு வெற்றியையும் நாடு உணரும்.

நன்றி; விஜெயகுமார் அருணகிரி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...