பிலிப்பைன்ஸ் தலைநகர் மணி லாவில் 25-வது இந்தியா – ஏசியான் மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகள் மாநாடு வரும் 14-ம்தேதி நடைபெற உள்ளது.
இந்தமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதற்காக, வரும் 12-ம் தேதி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் பிலிப்பைன்ஸ் தலை நகர் மணிலா செல்கிறார். அங்கு நடைபெறும் ஏசியான் மற்றும் கிழக்கு ஆசியநாடுகளின் மாநாட்டில் உரை நிகழ்த்துகிறார்.
அப்போது கிழக்கு ஆசிய நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சு வார்த்தை நடத்துகிறார். கிழக்கு ஆசிய நாடுகள் மத்தியில் அமெரிக்காவும், சீனாவும் தங்களது வர்த்தகத்தையும், ஆதிக்கத்தையும் செலுத்தி வருகிறது. அதற்கு இணையாக இந்தியாவும் தனது நல்லுறவை பலப்படுத்தி வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
பிரதமர் மோடி 36 ஆண்டுகளுக்குப் பிறகு பிலிப்பைன்ஸ் செல்லும் இந்தியபிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1981-ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் சென்றிருந்தார். அதன்பிறகு எந்தபிரதமரும் அங்கு செல்லவில்லை.
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.