ஜூனியர் உலககோப்பை கால்பந்து (17 வயதுக்குட் பட்டோர்) கால்பந்துபோட்டி கடந்த மாதம் இந்தியாவில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதில் இந்திய அணி மூன்று ஆட்டங்களிலும் தோற்று முதல் சுற்றுடன் வெளியேறியது. உலககோப்பை கால்பந்து தொடர் ஒன்றில் இந்திய அணி பங்கேற்றது இதுதான் முதல்முறையாகும்.
இந்த நிலையில் இந்திய ஜூனியர் கால்பந்து வீரர்கள் டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்ட வீரர்களிடம், தோல்வியால் துவண்டு போய் விடக்கூடாது, இதை கற்றுக்கொள்வதற்கு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் ஊக்கப்படுத்தினார்.
பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
மேலும் இந்திய இளைஞர்கள் இடையே கால்பந்து மிகவும் பிரபலமாகி வருவதை பார்க்கிறேன். ஜூனியர் உலககோப்பை கால்பந்து (17 வயதுக்குட்பட்டோர்) கால்பந்து போட்டியில் உங்கள் எல்லோரிடமும் சாதிக்கவேண்டும் என்ற உத்வேகம் இருப்பதை பார்க்கிறேன். களத்தில் செயல்பட்ட விதத்தைவைத்து உங்களை மக்கள் தெரிந்துகொள்ள ஆரம்பித்து விட்டார்கள். எனவே உங்களுக்கு இனி மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது.
இவ்வாறு பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியுள்ளார்.
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.