குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் திட்டப்பணிகள் நடந்து முடியவேண்டும்

பிரதமர் நரேந்திர மோடி, சாலைகள், ரெயில்வே, விமானநிலையங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு துறைகள் தொடர்பாக நேற்று ஆய்வுகூட்டம் ஒன்றை நடத்தினார். அவர், அதிகாரிகளுடன் திட்டப் பணிகள் குறித்து விவாதித்தார்.

அப்போது அவர் கிராமப் புறங்களில் சாலைகளை அமைக்கிறபோது, அவையும், அவற்றின் தரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குகிற போது, அவற்றில் புதிய தொழில் நுட்பங்களை புகுத்துவதில், உலகதரத்தை நிதி ஆயோக் அமைப்பு பரிசீலிக்கவேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

இந்தகூட்டம் தொடர்பாக அதிகாரபூர்வ அறிக்கை ஒன்று வெளியிடப் பட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

நிலக்கரி துறையை பொறுத்த வரையில், கடந்த ஆண்டு நிலக்கரி இறக்குமதி குறைந்து விட்டது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். மேலும் நிலக்கரி இறக்குமதிக்கு மாற்று உருவாக்கவும், எரி வாயு தொழில் நுட்பம் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன் படுத்தவும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அளித்தவிளக்கத்தில், பல்வேறு பகுதிகளிலும், உள்கட்டமைப்பு துறைகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

சாலை, ரெயில்வேதுறை தொடர்பாக பரந்த ஆய்வுக்குபின்னர், தற்போதைய திட்டங்களில் ஒருங்கிணைந்த அணுகு முறை வேண்டும் , குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் திட்டப்பணிகள் நடந்து முடியவேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

இது வரை இல்லாத வகையில், பிரதம மந்திரி கிராம சதக்யோஜனா திட்டத்தின் கீழ் கிராமப் புறங்களில் தினந்தோறும் சராசரியாக 130 கி.மீ. தொலைவிலான சாலைகள் அமைத்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 2016-17 நிதி ஆண்டில் பிரதம மந்திரி கிராமசதக் யோஜனா திட்டத்தின்கீழ் கூடுதலாக 47 ஆயிரத்து 400 கி.மீ. சாலைகள் சேருகின்றன.

11 ஆயிரத்து 641 குடியிருப்புகளுக்கு சாலை இணைப்புகள் கிடைத் துள்ளன. சாலை இணைப்பு கிடைக்காத குடியிருப்பு களுக்கும் கூடியவிரைவில் அவை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

இதே காலகட்டத்தில் 26 ஆயிரம் கிமீ. தொலைவில் 4 அல்லது 6 வழி தேசிய நெடுஞ் சாலைகள் போடப்பட்டுள்ளன.

ரெயில்வே துறையை பொறுத்தமட்டில், மேலே குறிப்பிட்ட காலத்தில் 400 கிமீ. என்ற இலக்கை கடந்து 953 கி.மீ. தொலைவுக்கு புதியரெயில் தடங்கள் அமைக்கப் பட்டுள்ளன. 2 ஆயிரம் கி.மீ. தொலைவிலான பாதை மின்மயமாக்கப் பட்டுள்ளது. ஆயிரம் கி.மீ. தொலைவிலான மீட்டர் ரெயில் பாதை, அகல ரெயில் பாதையாக மாற்றம் பெற்றுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக் ...

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர் –  மோடி  'பார்லியில் மக்களுக்காக என்றுமே காங்., பேசியதில்லை. அதிகாரப் பசி ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக் ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – மோடி “நாட்டில் குறைந்து வரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள் – பிரதமர் மோடி அழைப்பு  'என்.சி.சி.,யில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும். வளர்ந்த இந்தியாவை ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

மருத்துவ செய்திகள்

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...