அயோத்தியில் ராமர்கோயில் கம்பீரமாக கட்டப்படும்

அயோத்தியில் ராமர்கோயில் கம்பீரமாக கட்டப்படும். அங்கு வேறு எதுவும்கட்ட அனுமதிக்க முடியாது. இந்த விவகாரத்தில் பேச்சு வார்த்தை என்ற பேச்சுகே இடமில்லை என ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம், உடுப்பியில் விஷ்வ இந்து பரிஷத், ஆர்எஸ்எஸ் ஆகிய அமைப்புகளின் சார்பில் ‘தர்ம சான்ஸத்’ (இந்து மத) என்ற பெயரில் மாபெரும் மாநாடு நடைபெற்றுவருகிறது. பெஜாவர் மடாதிபதி விசுவேஸ்வர தீர்த்தசுவாமி தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டின் 2-ம் நாளான நேற்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத், விஷ்வ இந்துபரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீண் தொகாடியா, கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா உட்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மடாதிபதிகள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன்பாகவத் பேசியதாவது:

இந்த மாநாட்டின் முக்கியநோக்கம் அயோத்தியில் ராமர்கோயிலை கம்பீரமாக மீண்டும் கட்டுவது தான். இதற்காக ஏற்கெனவே திட்டம் வகுக்கப்பட்டு, அடுத்த கட்டபணிகள் நடந்துவருகிறது. முன்பே சேகரிக்கப்பட்ட கற்களை கொண்டுதான் ராமர் கோயில் கட்டப்படும். அங்கு வேறு எதுவும் கட்ட அனுமதிக்கமுடியாது. ஏனென்றால் அது ராமர் கோயில் இருந்த இடம்.

இந்த சூழலில் ஒருவர்  ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்கப்பட வேண்டும் என்றும் அதனை தானேமுன்னின்று நடத்துவதாகவும் சொல்லி இருக்கிறார். என்னைப் பொறுத்தவரை ராமர்கோயில் கட்டும் விவகாரத்தில் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை. அந்த நபரின் பேச்சுக்கும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் அறிவிப்புக்கும் எந்ததொடர்பும் இல்லை என வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

இந்து மதசுவாமிகள் சுய விளம்பரத்துக்காக எதையும் செய்யக் கூடாது. நாட்டு மக்களின் மனதை அறிந்து அறிவிக்க வேண்டும். அயோத்தியில் கம்பீரமாக ராமர் கோயிலைக்கட்ட அனைவரும் விரும்புகின்றனர். இதற்கு எந்த எதிர்ப்பும்வராது. எனவே ராமர் கோயில் கட்டுவதை தவிர, தற்போது வேறு எதுவும் முக்கியமான வேலை இல்லை.

இதே கருத்தை ஆமோதித்த விஷ்வ இந்துபரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீண் தொகாடியா, “அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவதில் விஷ்வஇந்து பரிஷத்தின் சர்வதேச உறுப்பினர்கள் அனைவரும் உறுதியாக இருக்கி ன்றனர். இந்த விவகாரத்தில் பேச்சு வார்த்தை நடத்தலாம் என ரவிசங்கர் குரு பேசியது அவரது தனிப்பட்ட கருத்தாகும். பெஜாவர் மடாதிபதி விஸ்வேஸ்வர தீர்த்தசுவாமி தலைமையில் ராமர் கோயிலை கட்டும் பணியை நானே முன்னின்று மேற்கொள்வேன்''என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...