குஜராத் , ஹிமாச்சல் இரண்டிலும் ஆட்சியை பிடித்தது பிஜேபி. தமிழக மக்களுக்கு பிஜேபி ஆதரவாளர்கள் சார்பாக நீங்கள் சொல்லவிரும்புவது என்ன?
தமிழக மாணவர்கள் , இளைஞர்கள் விட பெற்றோர்கள் சில விவரங்களை புரிந்து கொள்ளவேண்டும்.
மத்திய தொழிலாளர் மற்றும் பணிநியமனத் துறை (Ministry of Labour and Employment) அமைச்சகம் வருடம் வருடம் வெளியிடும் புள்ளிவிவரங்களை பாருங்கள் விவரம் அப்பட்டமாக தெரியும். அதன் படி 1000நபர்களில் திரிபுரா -197 பேருக்கும் , கேரளாவில் – 125பேருக்கும் வேலைவாய்ப்பு கிடையாது. இந்தியாவில் முதல் இரண்டு இடங்களை பெற்ற இந்த இரண்டு மாநிலங்களுமே கம்யூனிஸ்ட் மாநிலங்கள். ஆனால் குஜராத் மாநிலத்தில் 1000நபர்களில் வெறும் 15 நபர்கள் தான் வேலை வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறார்கள்.
இதில் தெரியவில்லையா எளிமையாக யார் நல்ல நிர்வாகி என்று! கம்யூநிஸ்ட, இடதுசாரி சிந்தனை எங்கே இருக்கிறதோ அந்த மாநிலம் பெரும் பொருளாதார பின்னடைவை ஏன் சந்திக்கின்றன? காரணம்?????
அந்த காரணத்தை தெரிந்து கொள்ளும் முன்பு இன்னொரு அடிப்படை விவரத்தை பாருங்கள் – சென்ற மாதம் தமிழகத்தில் வி.ஏ.ஓ தேர்வுக்கு விண்ணப்பம் செய்தவர்கள் சுமார் 12லட்சம் இளைஞர்கள். மற்றொரு நேரம் குரூப் 4 க்கு விண்ணப்பித்தவர்கள் 15லட்சம் இளைஞர்கள். எவ்வளவு இடத்திற்கு இந்த போட்டி???? வெறும் 494 காலியிடங்கள் மட்டும் தான் VAO பதவிக்கு. அதற்கு 12லட்சம் விண்ணப்பம் என்றால் தவறு என்ன என்று உங்களுக்கு தெரியவில்லையா?
10000 பேரில் வெறும் 4பேர் மட்டுமே தேர்வு ஆவர். இது ஆக மோசமான நிலை… இந்த நிலைக்கு இது காரணம்???
எந்நேரமும் முதலாளிகள் என்றால் தவறு , பணக்காரர்கள் என்றால் தவறானவர்கள் , கார்ப்பரேட் என்றால் மோசம் , பெரிய முதலாளிகள் மக்களை அடித்து சாப்பிடுகிறார்கள், பெரும் பன்னாட்டு நிறுவனம் என்றால் நாசம் தான் செய்யும். இப்படி ஒரு சினிமா தனமான உலகத்தை நீங்கள் உருவாக்கி கொண்டது உங்களுக்கு புரியவில்லையா? நானும் பெரிய தொழில் அதிபராக வருவேன் , பெரிய பெரிய தொழில்சாலைகளை தொடங்குவேன் என்று எண்ணம் எத்தனை மாணவர்களிடம் உண்டு?
எளிமையாக கூறினால் – மாணவர்களுக்கு இளைஞர்களுக்கு வியாபராம் என்றால் என்ன – எப்படி தொழில் தொடங்குவது – எப்படி உற்பத்தி செய்வது – நானும் ஒரு தொழில் தொடங்க வேண்டும் இப்படி ஆர்வமே இல்லாமல் போய்விட்ட சமூகத்தை உருவாக்குகிறோம். இன்னும் சொல்வதானால் வேலை எப்படி தேடுவது என்று தெரியாத ஒரு குருட்டு சமூகம் வெறும் பட்டம் மட்டம் படித்துவிட்டு வேலை தேட கிளம்புகிறது இங்கே.
இந்த விதம் குஜராத் வேறுவிதமாக உள்ளது. அங்கே தொழில் தொடங்க ஆர்வம் மாணவர்களிடம் அதிகம் உள்ளது. இன்னும் சொல்வதானால் அதிகம் நன்கு படிக்கும் மாணவர்கள் தமிழகத்தில் கேரளாவில் இருந்தாலும் கூட தொழில் செய்யும் ஆர்வம்?- ஆரோக்கியமாக பணம் தேடும் சிந்தனை? அது நமது மாணவர்களிடம் தொடர்ந்து குறைந்து வருகிறது.எல்லாருமே படிச்சு வேலை தேடினா இப்படி தான் VAO 494இடத்திற்கு 12லட்சம் போட்டியிடுவர். கார்ப்பரேட் எதிப்பு என்று கார்பரேட் வாசலில் சென்று வேலை தேடுவர்.. JIO சிம் போட்டு ரிலைன்ஸ் நிறுவனத்தை திட்டுவார்.
தொடர்ந்து மாணவர்களிடம் தொழில் சார்ந்த சிந்தனை குறைவது மிக பெரிய ஆபத்து என்று எச்சரிக்கிறேன்.
இது எதனால் ஏற்படுகிறது என்று நினைகிரீர்???
இது இந்த மாணவர்கள் , இளைஞர்கள் தவறு கிடையாது.
சினிமாவில் 100கோடிக்கு படம் எடுக்கும் ஒரு நடிகர் சம்பளம் 15கோடி – ஆனால் பேசும் வசனம் ? "நீ சாப்பிட மிச்சம் இருக்கும் இட்லி உன்னோடது இல்லை- அது தான் கம்யூனிசம்" என்று கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் இங்கே மக்கள் உணர்வுகளை தூண்டி ஆதாயம் தேடும் வேலை நடக்கிறது.இது எம்ஜிஆர் காலத்தில் இருந்தே இதான் வேலை இங்கே. உங்கள் அரசு நூலகங்கள் செல்லுங்கள் அங்கே இருக்கும் பெரும்பாலான புத்தகங்கள் – திராவிட கொள்கை , கம்யூநிஸ்ட கொள்கை , பெரியாரிய கொள்கை என்று எல்லாமே முழுக்க முழுக்க இவர்கள் புத்தகங்கம் மட்டுமே இருக்கும். எனக்கு தெரிந்து சுமார் 20நபர்களுக்கு மேல் வேறு வேறு விதமாக ஒரே திராவிட கதையை எழுதி எழுதி விருது வாங்கி அந்த புத்தகம் அனைத்து நூலகத்திலும் இருக்கும்.
ஆனால் தொழில் தொடங்கவோ , பொருளாதாரம் புரிந்துகொள்ளவோ எந்த சூழலும் இங்கே கிடையாது. அதனால் உங்கள் மனதில் போராட்டம் , புரட்சி , கார்ப்பரேட் எதிர்ப்பு என்று தான் அதிகம் உணர்வு பூர்வமான விசயங்களே இருக்கின்றனவே தவிர – தொழில் தொடங்கவேண்டும் , நன்கு சம்பாரிக்க வேண்டும் என்ற தேடல் மிக மிக குறைவு.வேலை தேடுவது தான் வேலை என்று படித்து முடித்ததும் கார்ப்பரேட் வாசலில் சென்று நிற்க காரணம் – நீங்கள் அல்ல உங்களை தவறாக வழிநடத்தும் அரசியல் , சினிமா உலகம்.
ஒரு சூழ்நிலை கைதியாக வாழும் இந்த கல்லூரி மாணவர்களுக்கு இயற்கையாக புரட்சியும் , பொதுவுடைமை என்ற மடத்தனமும் , கம்யூனிசமும் உண்மையில் உலகத்தில் இருக்கிறதா என்று தேடி சரி தவறு என்று சிந்திக்கவிடாமல் செய்கிறது புறசூழல். {சீனா கூட 80%நிறுவனங்கள் இன்று தனியார் தான். மாவோ காலம் எல்லாம் மலையேறி போச்சு. இங்கே கம்யூனிஸ்ட் பொருளாதராம் பெரிய முட்டாள்தனம் என்று உணராமல் திரிபவன் தான் அதிகம்.}
பிஜேபி வெற்றிக்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம்???
பிஜேபி ஒரு வலதுசாரி இயக்கம். கொஞ்சம் வலதுசாரிகள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள். வோட்டு யாருக்கு வேண்டுமானாலும் போடுங்கள் ஆனால் கொஞ்சம் பொருளாதார அறிவுடன் செயல்படுங்கள். பிஜேபி ஆதரவாளர்கள் என்ன கூறுகிறோம் என்றால் : உங்கள் வீட்டு குழந்தைகள் எப்படி சிந்திக்க வேண்டும் என்றால் 10,000ரூபாய் வைத்து அதை 12,000ரூபாயாக ஒருவாரத்தில் பெருக்க என்ன வியாபாரம் செய்யலாம் என்று சிந்திக்க பழக்குங்கள்.அதாவது அனைவரையுமே வியாபாரம் செய்ய கூறவில்லை. ஆனால் வியாபாரம் செய்யவும் காசு தேடவும் கொஞ்சம் சிறுவயதில் இருந்தே சிந்தியுங்கள். உங்கள் கடமை உங்கள் வீட்டின் அடிப்படை பொருளாதாரத்தை உயர்த்துவது தான்.
சும்மா நான் புரட்சியாளன் போராளி என்று காலத்தை வீணடிக்க வேண்டாம். அதனால் எந்த நலனும் ஆகாது. அப்படி உங்கள் குழந்தையை தூண்டுபவன் தான் இந்த சமூகத்திம் மிக மோசமான அயோக்கியன் என்று புரிந்து கொள்ளுங்கள்.சொல்லுங்கள் எந்த கம்யூனிஸ்ட் இந்த நாட்டில் 100பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்து பொதுவுடைமை நிறுவனம் நடத்த்க்கிறான்???? எவனாது ஒருவனை காட்டுங்கள்..
கார்ப்பரேட் என்றால் என்ன என்று நினைக்கிறீர்????
ரிலைன்ஸ் நிறுவனம் JIO கொடுத்த ஆபர் மூலமாக தான் உங்களுக்கு 4G மிக குறைந்த விலையில் கிடைத்தது. அந்த நிறுவனத்தை ஆரம்பிக்க அவருக்கு சுமார் 1.5லட்சம் கோடி தேவை. அது எப்படி அவ்வளவு தொகை அவரிடம் வந்தது???? அரசு கொடுத்ததோ! இல்லை அவர் வீட்டு சொந்த பணமோ கிடையாது.
மக்கள் பணம்…. மக்கள் அவருடைய நிறுவனத்தில் முதலீடு செய்கிறார்கள். நீங்கள் வங்கிகளில் முதலீடு செய்வது போல – கொஞ்சம் அதிகம் லாபம் கிடைக்க ரிலைன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய….. Non-Institution shares மட்டும் 1,04,23,99,585. இந்த 7,06,802 கோடி மதிப்பிலான ரிலைன்ஸ் நிறுவனத்தில் மக்கள் நேரடி முதலீடு மட்டும் சுமார் 1.20லட்சம் கோடி. மறைமுகமாக Mutual Funds அப்டி இப்டின்னு வரும் முதலீடுகள் மட்டும் 2.47லட்சம் கோடி…
இந்த அளவுக்கு முதலீடுகளை மக்கள் தரும் போது அவர் தொழில் நடத்தி வரும் லாபத்தை தன்னை நம்பி முதலீடு செய்தவர்களுடன் பிரித்து கொள்வது மட்டும் அல்ல சுமார் 2,50,000 பேருக்கு வேலைவாய்ப்பு தருகிறார். கடந்த பத்துவருடத்தில் ரிலைன்ஸ் நிறுவனம் நாட்டுக்கு கட்டிய வரி மட்டும் 2,88,000 கோடி… கடந்த 5வருடத்தில் அவர் முதலீடுகள் செந்த அளவின் மதிப்பு மட்டும் 3,30,000கோடி.
என்றாவது 10பேருக்கு வேலை கொடுத்து ஒரு வியாபாரம் நடத்தி பார் அதன் கடினம் புரியும். உன்னை நம்பி 1லட்சம் யார் தருவார்??? உன் மீது நம்பிக்கை வரும் நபர் மட்டுமே. அதே போல ரிலைன்ஸ் தனது தொழில் நடவடிக்கை மூலம் வாங்கிய நல்ல லாபகரமான நிறுவனம் என்ற பெயரால் மக்கள் அவர்களிடம் பணம் கொடுக்க அதை கொண்டு அவர்கள் வியாபாரம் செய்ய – என்றாவது நாமும் அது போல பெரிய தொழில் அதிபர்களாக வரவேண்டும் என்று சிந்திப்பது தானே ஆரோக்கியம்????
கார்ப்பரேட் எதிர்ப்பு, பன்னாட்டு முதலாளிகள் எதிர்ப்பு என்று கண்மூடித்தனமாக ஒரு குருட்டு சமூகத்தை கடந்த 60வருடமாக உருவாக்கியதன் வினை தான் இன்று 490காலியிடங்களுக்கு சுமார் 12லட்சம் பேர் விண்ணப்பம் செய்கிறார்கள்.தனியார் என்றாலே தவறு என்று நமக்கு ஒரு psychological பாதிப்பு உருவாக்கியது இந்த சமூகம். இதை உடைத்து மாற்று பொருளாதார சிந்தனையை சிந்திக்கவேண்டும். இறுதியாக :
இன்னும் 30வருடம் சென்று திமுக கனிமொழி மகன் வந்து திமுக தலைமையில் ஆட்சி செய்தாலும் அன்றும் தமிழகத்தின் அனைத்து பிரச்சனைக்கும் மத்திய அரசு தான் காரணம் என்பர் இந்த திராவிட கட்சியினர். இந்த தந்திர அரசியல் மாறபோவது இல்லை. ஆனால்
நான் மாரிதாஸ் கேட்டுகொள்வது எல்லாம்
1.இந்துத்துவா {இந்து புத்தம் சீக்கியம் சமணம் என்று இந்த நாட்டில் உருவான பழமையான மதங்களை காப்பாற்றவும். மதம் மொழி இனம் மறந்து இந்தியனாக ஒன்றுபடவும் உருவாக்கபட்ட இந்த இந்துத்துவாவை தேடி புரிந்து கொள்ளுங்கள். இந்த நாட்டின் ஆன்மவியல் காப்பாற்ற இது முக்கியமான ஒன்று.}
2.வலதுசாரி பொருளாதார கொள்கை{கண்மூடித்தனமாக கார்ப்பரேட் எதிப்பு என்ற கோசத்தை நிறுத்தி – என்ன தான் BSE NSE Share market , வியாபாரம் , தொழில் , உற்பத்தி என்று தேடி தெரிந்து கொள்ள சிந்திக்கவும் – ரிசர்வ் பேங்க், ராணுவம் முதல் பாராளுமன்றம் வரை அனைத்தின் நிர்வாக விவரத்தை குறைந்த பட்சமாது தெரிந்து கொண்டு பின் தெளிவாக பேச வேண்டும் என்ற பக்குவத்தையும் கொடுக்கும் வலதுசாரி சிந்தனையை கொஞ்சமாது ஏற்றுகொள்ளுங்கள்.}
இந்த இரண்டையும் மட்டும் தயவு கூர்ந்து தெரிந்து கொள்ளுங்கள். இல்லை என்றால் அனைத்து பள்ளி கூடமும் அரசுடமை ஆக்குவேன் , அனைவருக்கும் அரசு வேலை தருவேன் , விவசாயம் அரசு வேலை ஆக்குவேன் , படிக்கவில்லை என்றாலும் அரசு வேலை உண்டு, அந்த இஸ்ரோ ராக்கெட் போகுது என் விவசாயி வயுறு எரியுது- அனைவருக்கும் டீவி மிட்சி மட்டும் அல்ல வீடும் இலவசம் – பஸ் இலவசம் – என்று 1%பொருளாதரா நிர்வாக அறிவு இல்லாதவன் எல்லாம் நாட்டில் தலைவனாக வரும் அளவுக்கு முட்டாள் ஆக்காபடுவீர்.
{குஜராத் , ஹிமாச்சல் பிரதேஷ் இரு மாநில தேர்தல் வெற்றிக்கு பிஜேபி கட்சி தலைவர்கள், தொண்டர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.}
-மாரிதாஸ்…
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.