முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் தனது 93ஆவது பிறந்த நாளை திங்கள் கிழமை கொண்டாடினார்.
இதையொட்டி, குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 93ஆவது பிறந்த நாள் திங்கள் கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தில்லியிலுள்ள வாஜ்பாய் இல்லத்துக்கு சென்று, அவருக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்துத்தெரிவித்தார்.
இதுகுறித்து சுட்டுரையில் அவர் வெளியிட்டிருந்த பதிவில், "வாஜ்பாயின் இல்லத்துக்கு நேரில்சென்று வாழ்த்துத் தெரிவித்தேன்; அவரது குடும்பத்தினருடன் சிறிதுநேரம் உரையாடினேன்' எனத் தெரிவித்துள்ளார்.
மற்றொரு பதிவில், "வாஜ்பாயின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமையினால், உலகளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்தது; அவர் பூரண உடல் நலத்துடன் வாழ கடவுளை பிரார்த்தி க்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, சுட்டுரையில் திங்கள்கிழமை வெளியிட்டபதிவில், நாட்டு மக்கள் ஒற்றுமையாகவும், கடினமான நேரங்களிலும் நம்பிக்கையுடன் இருக்கவேண்டும் என்று வலியுறுத்தி வாஜ்பாய் ஹிந்தியில் எழுதிய கவிதையை வெளியிட்டிருந்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா ஆகியோரும், வாஜ்பாய் இல்லத்துக்குச் சென்று, அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர்பிரசாத், அருண் ஜேட்லி, ஸ்மிருதி இரானி, நிர்மலா சீதாராமன் ஆகியோரும் வாஜ்பாய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் முதல்வரும், மக்கள் ஜனநாயகக்கட்சி தலைவருமான மெஹபூபா முஃப்தி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், "வாஜ்பாயிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்; ஜம்மு-காஷ்மீரின் அமைதி, அபிவிருத்தி, வளர்ச்சி மீது நம்பிக்கைக்கொண்ட தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் அவர்' என தெரிவித்துள்ளார்.
பிகார் முதல்வரும், ஐக்கியஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமார் வெளியிட்ட பதிவில், "வாஜ்பாயின் பிறந்தநாளையொட்டி, அவர் நீடித்த, ஆரோக்கியமான மற்றும் சிறப்பான வாழ்க்கை வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலம், குவாலியரில் கடந்த 1924ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி பிறந்த வாஜ்பாய், 1942ஆம் ஆண்டில் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் மூலம் அரசியலுக்குவந்தார். ஐ.நா. சபையில் ஹிந்தியில் உரையாற்றிய முதலாவது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர் ஆவார்.
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌ மக்களவைத் தொகுதியில் இருந்து 1991, 1996, 1998, 1999, 2004ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக எம்.பி.யாக தேர்வுசெய்யப்பட்டார்.
பிரதமராக முழு பதவிக்காலத்தையும் வகித்த காங்கிரஸ் அல்லாத பிற கட்சியைச் சேர்ந்த முதல்தலைவரும் வாஜ்பாய் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.