வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் வரும் பிப்ரவரிமாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. ஆளும் காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியைகைப்பற்ற பா.ஜ.க தீவிரம்காட்டி வருகின்றது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் 5 பேர் உள்பட 8 எம்.எல்.ஏ.க்கள் இன்று திடீரென தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
60 பேர் கொண்ட சட்ட சபையில் 29 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸில் இருந்து தற்போது 5 பேர் ராஜினாமா செய்தாலும், சுயேட்சைகள் மற்றும் உதிரிகட்சி எம்.எல்.ஏ.க்கள் உதவியுடன் முகுல் சங்மா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை தக்கவைத்துள்ளது.
ராஜினாமா செய்த 8 உறுப்பினர்களும் பா.ஜ.க தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேதியமக்கள் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தேர்தல்நேரத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளதால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது.
அதே, நேரத்தில் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பா.ஜ.கவை ஆதரிக்க அவர்கள் தயாராகிவிட்டார்கள் என்று அம்மாநில பா.ஜ.க கருத்து தெரிவித்துள்ளது.
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.