ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய குற்றவாளி கைது செய்யப் பட்டுள்ளார். சென்னையில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் கடந்த 1993ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 11 பேர் கொல்லப் பட்டனர். இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாக முஷ்டாக் அகமது என்பவன் அறிவிக்கப்பட்டான். இந்நிலையில் தலைமறைவாக இருந்த முஷ்டாக் அகமது 24 ஆண்டுகள் தேடுதலுக்குப்பிறகு தற்போது கைது செய்யப்பட்டுள்ளான்.
குண்டை வெடிக்கச்செய்தது மற்றுமொரு குற்றவாளிக்கு இடமளித்தது என முஷ்டாக்மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து தலை மறைவான முஷ்டாக் குறித்து தகவல் அளிப்போருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பக 18 பேர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்தவழக்கில் கடந்த 2007ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.
குண்டுவெடிப்பு தொடர்பாக 11 பேருக்கு தண்டனை அறிவிக்கப் பட்டது. இதில் 3 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது 4 பேர் வழக்கில் இருந்துவிடுதலை செய்யப்பட்டனர்.
மதுரையில் போலீஸ் கஸ்டடியில் இருந்து தப்பிய இமாம்அலி என்பவர் கடந்த 2002ஆம் ஆண்டு பெங்களுரில் என்கவுன்டர் செய்யப்பட்டார். மற்றொரு குற்றவாளியான பலானி பாபா கொல்லப்பட்டார் .
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.