பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் முதல் இந்தியப் பிரதமர்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புகவுன்சிலின் ஆகஸ்ட்டு மாதத்துக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதனால், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் முதல் இந்தியப்பிரதமர் என்ற பெருமையைப் நரேந்திர மோடி பெறவுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செயல்படும் ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாக 2 ஆண்டுகாலம் செயல்படும். இதில் இந்தியா தற்காலிக உறுப்பினராக கடந்த ஜனவரிமாதத்தில் பொறுப்பேற்றது.

பாதுகாப்பு சபையின் தலைமைப் பொறுப்பை சுழற்சிமுறையில் உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொள்ளும். இதன்படி, ஆகஸ்ட் மாதத்துக்கான பொறுப்பை இந்தியா ஞாயிற்றுக் கிழமை ஏற்றுக் கொண்டது.

75ஆவது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாட உள்ள நிலையில், தலைமைபொறுப்பை ஏற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக ஐ.நா. சபையின் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரபிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி பெருமிதம் தெரிவித்துள்ளார். இதில், கடல்சார் பாதுகாப்பு, அமைதிகாப்பு உள்ளிட்டவை தொடர்பான முக்கிய ஆலோசனைகளும், சிரியா உள்ளிட்ட நாடுகளின்விவகாரங்கள் குறித்த ஆலோசனைகளும் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஒரு மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் சிரிங்லா ஆகியோர் தலைமையில் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து ஆலோசனைக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. கடந்த 1992ஆம் ஆண்டில் ஐ.நா. பாதுகாப்பு சபைகூட்டத்தில் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் கலந்துகொண்டார். எனினும், முதல் முறையாக பாதுகாப்பு சபையின் கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் இந்திய பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெற இருப்பதாக ஐ.நா.வுக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் சையது அக்பருதீன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்பு சபை தலைவர் டி.எஸ்.திருமூர்த்தி, கூறுகையில், “ஆகஸ்ட் மாதத்தில் ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு தலைமைஏற்கும் இந்தியா, கடல்சார் பாதுகாப்பு, அமைதிகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகிய 3 விவகாரங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தஉள்ளது. அமைதிகாப்புப் படையினரின் நினைவாக நிகழ்ச்சி ஒன்றையும் நடத்த உள்ளது. சிரியா, ஈராக், சோமாலியா, ஏமன், மத்தியகிழக்கு நாடுகள் தொடர்பான குறித்தும் முக்கிய ஆலோசனை கூட்டங்கள் நடைபெற உள்ளன.” என்று தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பாதுகாப்புசபைக்கு முதன்முறையாக 1950ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்தியா தலைமைவகித்தது. இதனை தொடர்ந்து, 10ஆவது முறையாக இந்தியா தலைமை வகிக்கிறது. இதற்குமுன்னதாக 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா தலைமையில் ஐ.நா. பாதுகாப்புசபை இயங்கியது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை பிரதமர் ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம் – பிரதமர் மோடி மகிழ்ச்சி செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்கள் ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது சம்பள கமிஷன் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 வது சம்பள கமிஷன் ...

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

மருத்துவ செய்திகள்

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.