பேசியது தேச விரோத செயல் பாஜக எதிர்ப்பு பாதிரி கைது

 

பேசியது தேச விரோத செயல் பாதிரியார் ஜார்ஜ் பொண்ணையாவை, கைது செய்ய வேண்டும் என்ற பாஜகவின் அழுத்தத்தை தொடர்ந்து அவர்மீது வழக்கு தொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் அறிக்கை விவரம் வருமாறு

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் மத ஜாதி மோதல்களை உருவாக்கும் வகையில் சட்டவிரோதமாக பேசியுள்ள ஜார்ஜ் பொன்னையா என்பவரை கைது செய்திட வலியுறுத்தி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பாஜக மாவட்ட தலைவர்கள் தலைமையில் தமிழக அரசை வலியுறுத்தி இன்று சனிக்கிழமை 24.07.2021 கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கக்கூடிய முக்கிய நிர்வாகிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொள்வார்கள். தேச ஒற்றுமைக்கு எதிராகவும் உயர்பதவியில் இருக்கக்கூடிய தலைவர்களை மிக மிக மோசமான வார்த்தைகளை பிரயோகித்து பேசியிருப்பது மனசாட்சி உள்ள எவரும் மன்னிக்க முடியாதது.

சமூக ஊடங்களில் சிறிய பதிவுகளை போடுபவர்களை கூட கைது செய்து சிறையில் அடைக்கக் கூடிய தமிழக அரசு பொன்னையா மீது 7 பிரிவுகளில் வழக்கு தொடர்ந்த பிறகும் கைது செய்யாமல் இருப்பது மிகவும் வேடிக்கையானது.

ஏற்கனவே பொன்னையா மீது பல்வேறு இடங்களில் வழக்குகள் இருப்பது தெரிய வந்திருக்கிறது. பொது அமைதிக்கும் மக்களிடையே இருக்கக்கூடிய சமூக, சமத்துவ ஒற்றுமைக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் கூட்டத்தில் பேசுகிறேன் என்று சொல்லி விஷத்தை கக்கி இருக்கிற பொன்னையாவை கண்டித்தும்,

அவரை கைது செய்ய தமிழக அரசை வலியுறுத்தியும் நாளை தமிழக பாஜக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும். பேசியது தேச விரோத செயல் என்று தெரிந்தும் கைது செய்யவில்லை என்றால் இவரை பேச வைத்தது திமுக தான் என்ற முடிவுக்கு வரவேண்டியது இருக்கும்.

நன்றி அண்ணாமலை
பாஜக மாநில தலைவர்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டு ...

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டுரையாக பகிர்ந்த பிரதமர் மோடி நீதி, கண்ணியம், தற்சார்பு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் தொடக்ககால ...

காசி செழுமை அடைகிறது

காசி செழுமை அடைகிறது "தற்போது காசி பழமையின் அடையாளமாக மட்டுமின்றி, முன்னேற்றத்தின் கலங்கரை ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அ ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அகற்றம் நாடு முழுவதும் சுகாதாரக் கழிவு மேலாண்மை ஒரு பெரிய ...

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு கடந்த நிதியாண்டில் (2024-25) ஏப்ரல்-மார்ச்) நாட்டின் ஏற்றுமதி, முந்தைய ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வா ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வாருங்கள் ; சீமானுக்கு நயினார் நாகேந்திரன் அழைப்பு ''தி.மு.க.,வை வீழ்த்த கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில ச ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில சுயாட்சி திமுக என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்திதான். தொடக்கம் ...

மருத்துவ செய்திகள்

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...