கீழே இருப்பவர் கோடி! நினைத்துப்பார்த்து நிம்மதிநாடு!”

   ”தொழிற்சங்கங்களில் பெரும்பாலானவை கன்யூனிஸ்ட் தொழிற்சங்களாகத்தான் இருக்கும்! கம்யூனிஸ்ட் அல்லாத சங்கங்கள் கூட சற்றேனும் கயூனிச சிந்தனை சார்புடையதாகத்தான் இருக்கும்!

    கன்யூனிச சிந்தனை என்னவென்றால், முதலாளி சாகவேண்டும், அவன் வாழக்கூடாது! அதாவது முதலாளி ஒழியவேண்டும்! என்பதுதான்! ’முதலாளி ஒழிக’ என்றுதான் அவர்கள் கோசமிடுவார்கள்! முதலாளி ஒழிந்தால் தொழிற்சாலை மூடப்பட்டு தொழிலாளி நடுத்தெருவில் நிர்ப்பான் அல்லவா, இதுதான் கம்யூனிஸ்டுகளின் எதிர்பார்ப்பு!

     வேலையில் தரத்தை பார்க்கக்கூடாது, தொழிற்சங்கங்கள் கேட்கும் ஊதியத்தை தரவேண்டும்! அதில் ஒரு பங்கினை பங்கிட்டுக்கொள்வது சங்கங்களின் கடமை! சங்க நிர்வாகிகள் வேலைக்கு செல்லமாட்டார்கள்! அவர்கள் ‘சைனா’ ’ரஸ்யா’ ’கொரியா’ போன்ற கம்யூனிச நாடுகளின் எடுபிடி வேலைகளை செய்தாலும்கூட நிர்வாகங்கள் ஏனென்று கேட்கக்கூடாது! இந்திய அரசுக்கு எதிராக செயல்படுவார்கள்! சங்க நிவாகிகளை யாரும் கேள்விகேட்கக்கூடாது! இத்தகையதுதான் கம்யூனிச சங்க சிந்தனைகள்!

    கம்யூனிஸ்டுகள் ஆட்சிசெய்யும் நாடுகளில் இந்த சங்கங்கள் செயல்படாது! அங்கு தொழிலாளிகள் ஒரு அடிமையாக இருக்கவேண்டும்! அவனுக்கு வாய் இருக்கக்கூடாது! வயிற்றைப்பற்றி பேசக்கூடாது! மனைவி மக்கள் குடும்பம் என்றெல்லாம் கம்யூனிச நாட்டில் தொழிலாளி பேசவேக்கூடாது! பேசினால் மறணம்தான் தண்டனை! கம்யூனிச நாடுகளில் இங்கு இருப்பதைப்போல கம்யூனிச சங்கமும் கிடையாது, போராட்டமும் கிடையாது!

     28 ஆண்டுகளுக்கு முன்பு கம்யூனிச சைனாவில் மாணவர்கள் ஜனநாயகம் வேண்டி போராட்டம் நடத்தினர்! அப்போது 10,000 மாணவர்களை சுட்டும் கத்தியால் குத்தியும் வெட்டியும் கொன்றது கம்யூனிச அரசு! அங்கு நியாயத்தையோ, உரிமையையோ கோரினாலோ, போராடினாலோ மரண தண்டனைதான்! ரசியாவிலும் இதே நிலைதான்!

     ரசிய சைன எடுபிடிகளான கம்யூனிஸ்டுகள், இந்தியா உருப்படக்கூடாது என்பதற்காக, தொழிலாளர்களை தவறாக வழிநடத்துகிறார்கள்! காரணம் இந்தியாவில் ஜனநாயகம் இருப்பதுதான்! ஜனநாயகம் என்பது கம்யூனிசத்திற்கு எதிரானதாகும்! ஜனநாயகத்தை அழித்து கம்யூனிச பாசிச கோள்கையை கொண்டுவர கம்யூனிஸ்டுகள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள்!

     ஜனநாயக நாட்டை அழிக்கும் நோக்கத்தில்தான் கம்யூனிஸ்டுகள் இந்தியாவில் கட்சியையும் தொழிற்சங்கங்களையும் நடத்துகிறார்கள்!”

–    மேலே நாம் சொல்லியிருப்பது சற்று கடுமையாக பச்சை விமர்சனமாக இருந்தாலும், உண்மைக்கும் இந்த விமர்சனத்திற்கும் வெகு தொலைவு இல்லை!

     தமிழகத்தில் போக்குவரத்து பஸ்களை நிறுத்தி திடீரென போராட்டம் நடத்தி இனிமேல் நாங்கள் பஸ்களை இயக்கமாட்டோம்! என்கிறார்கள்! பல இடங்களில் பயணத்தை தொடர்ந்துக்கொண்டிருந்த மக்களை நடுவழியில் இறக்கிவிட்டு, வேலை நிறுத்தம் என்று சொல்லியுள்ளனர்! டிக்கட்போட்டபடி குறிப்பிட்ட இடத்தில் எங்களை இறக்கிவிட்டுவிட்டு உங்கள் வேலை நிறுத்தத்தை துவங்குங்கள் என சொன்னால் கம்யூனிஸ்ட் சங்கத்தினர் ஏற்கவில்லை!

     பயணிகளாகிய நீங்கள் எப்படிவேண்டுமானாலும் அவதிப்படுங்கள், என்ன வேண்டுமானாலும் ஆகுங்கள. எங்களுக்கு மேலிட உத்தரவு வந்துள்ளது, நாங்கள் வேலை நிறுத்தம் செய்கிறோம்! என்று சொல்லியுள்ளனர்! ஊழியர்களை தவறாக சமுதாயத்திற்கு எதிராக வழிநடத்துவதுதான் கம்யூனிஸ்டுகளின் நோக்கம்!

     இதற்கு காரணமாக ஊழியர்களின் சம்பள உயர்வினை சொல்வார்கள்! ஊழியர்களின் சம்பள உயர்வின்மீது கம்யூனிஸ்ட்டுகளுக்கு எவ்வித அக்கரையும் இருக்காது! நாட்டில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்த ஊதியத்தை உயர்த்தி வாங்கித்தருகிறோம் என்பதை ஒரு காரணமாக வைத்துக்கொள்வார்கள் கம்யூனிஸ்டுகள்!

      “ஐயோ பாவம்! இந்த குறைந்த அளவான 5000 ரூபாய் சம்பளத்தில் நீங்கள் எப்படி வாழ்க்கை நடத்தமுடியும் எங்கள் சங்கத்தில் சேர்ந்து சந்தா கட்டுங்கள் நாங்கள் வேலைநிறுத்தம் செய்து முதலாளியை ஒரு வழி செய்து பிடுங்கி உங்களுக்கு தருவோம் நீங்களாபார்த்து ஏதாவது எங்களுக்கு கொடுங்கள் என்பார்கள்! அதே வேளையில், “ஐயோ பாவம் இந்த 50,000 ரூபாய் சம்பளத்தில் நீங்கள் எப்படி குடும்பம் நட்த்துகிறீர்கள் எங்கள் சங்கத்தில் சேருங்கள் நாங்கள் உங்கள் சம்பளத்தை 50,000 த்திலிருந்து 60,000 த்திற்கு உயர்த்தி வாங்கித்தருகிறோம்” என்பார்கள்!

     5000 சம்பளத்தை உயர்த்த பாடுபடும் அதேவேளையில், 50,000 சம்பளம் போதுமானதுதான் என்னும் சமுதாய பார்வை கம்யூனிஸ்டுகளிடம் இருக்காது! இவர்களின் நோக்கம் தொழிலாளர் நலனோ சமுதாய நலனோ அல்ல, இவர்களின் நோக்கம் சமுதாயத்தில் ஒரு குழப்பத்தையும், தொழிலாளர்கள் மத்தியில் ஒரு அதிருப்தியையும் ஏற்படுத்தி நாட்டுக்கு எதிரான சமுதாயத்திற்கு எதிரான சிந்தனையை வளர்ப்பதுதான்! மொத்தத்தில் கம்யூனிஸ்டுகள் தேசத்தின் விரோதிகள்! ஊதிய உயர்வு வாங்கித்தருகிறோம் என்று அவர்கள் சொல்வது, தேசத்திற்கும் சமுதாயத்திற்கும் எதிராக மக்களை திசைத்திருப்பும் மர்மமாகும்!

     தேச விரோத சிந்தனையில் கம்யூனிஸ்டுகள் செயல்படும்போது, நாம் தவறாக அதை புரிந்துக்கொண்டு, இந்த குறிப்பிட்ட கட்சி ஆட்சி செய்யும் இந்த வேளையில் இப்படி ஒரு போராட்டம் நடந்து அரசுக்கு கெட்டப்பெயர் வருவது நல்லதுதான் என்னும் நோக்கத்தில் நம்மில் பலர் போராட்டத்தை ஆதரிக்கிறோம், அரசியல் தலைவர்களும் அதே நோக்கத்தில்தான் அறிக்கை விடுவார்கள்! இப்போதைய அரசியல் தலைவர்களில் 99 சதவிகிதத்தவர்களுக்கு சமுதாய அக்கரையோ நாட்டின்மீது பற்றுதலோ இல்லை! அவர்களின் நோக்கமெல்லாம் அரசியல் நோக்கமும், பண நோக்கமும்தான்! எனவேதான் அவர்கள் தொழிலாளர்களை ஆதரிப்பதுபோன்ற பாவனையில் போராட்டத்தை ஆதரிப்பார்கள்! ஆனால் இந்த போராட்டத்தால் அவதிப்படும் பொதுமக்களுக்காக கவலைப்படமாட்டார்கள்!

     பஸ் டிறைவர் கண்டக்டர்களை விட ஏழ்மை நிலையில் இருக்கும் பொதுமக்களை நாம் நினைத்துப் பார்க்கவேண்டாமா? திடீரென மாலை 4 மணியளவில் பஸ் போக்குவரத்தை எவ்வித முனறிவிப்பும் இல்லாமல் நிறுத்திவிட்டார்கள்! பஸ் ஏற மட்டும் காசு வைத்துக்கொண்டு வேலைக்கோ, வேறு வேலைகளுக்கோ வெளியில் வந்த பெரியவர்கள், பெண்கள், மற்ற பலதரப்பு மக்களின் நிலமை என்ன ஆகியிருக்கும் யோசித்துப்பாருங்கள்! பஸ் போக்குவரத்தை வைத்துதானே வீட்டின் மாத செலவீனத்தை கணக்கிட்டு வாழ்கிறார்கள் திடீரென சிலதினங்கள் பஸ் இல்லையென்றால், அந்த குடும்பத்தின் அதிக செலவீனத்தால் ஏற்படும் நஸ்டத்தை யார் சரிக்கட்டுவது? பணம் இல்லாத ஏழைக் குடும்பங்கள் என்ன செய்யும்? இந்த குடும்பங்களுக்காக யார் போராடுவது? போராட்டம்தான் வாழ்கையா?

    கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்கள் சொல்வதுபோல், போராட்டம் என்பது வாழ்கையின் தீர்வல்ல! தர்மமே வாழ்கையின் தீர்வு! இது போதும் என்னும் மனநிலை வேண்டும்! “தனக்கும் கீழே இருப்பவர் கோடி! நினைத்துப்பார்த்து நிம்மதிநாடு!” என்னும் வரிகளை கம்யூனிஸ்டுகளின் வழிநடக்கும் தொழிலாளர்கள் எண்ணிப்பார்க்கவேண்டும்! போராட்டங்களை கைவிட்டு பேச்சுவார்த்தைகளில் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளும் அதே வேளையில் தங்களின் பணிக்கு எவ்வித சுணக்கமும் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்!

     ஒழுங்காக வேலை செய்யும் தொழிலாளிக்குதான் ஊதிய உயர்வு கேட்கும் உரிமை உண்டு! ஊதிய உயர்வை வலியுறுத்துவதற்காக வேலையை நிறுத்துவது தர்மமல்ல!

–    குமரிகிருஷ்ணன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...