ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், 29 வகையான கைவினை பொருட்களுக்கு, 12 – 18 சதவீதமாக உள்ளவரியை, முழுமையாக நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தவிர, 49 வகையான பொருட்கள் மற்றும் 53 வகையான சேவைகளுக்கான வரி விகிதம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது," என, மத்திய நிதி அமைச்சர், அருண்ஜெட்லி தெரிவித்தார்.
ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவைவரி விதிப்பு முறை, கடந்தாண்டு ஜூலை, 1 முதல், நாடுமுழுதும் அமல்படுத்தப்பட்டது. ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு தொடர்பான சட்டம், வரிவிகிதங்கள் குறித்து, ஜி.எஸ்.டி., கவுன்சில் ஆய்வுசெய்கிறது. மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண்ஜெட்லி தலைமையிலான இந்த கவுன்சிலில், மாநில நிதி அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.கவுன்சிலின், 25வது கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அருண்ஜெட்லி கூறியதாவது:இந்தகூட்டத்தில், 29 வகையான கைவினைப் பொருட்களுக்கு, 12 – 18 சதவீதமாக உள்ள வரியை, முழுமையாக நீக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதைத் தவிர, 49 வகையான பொருட்கள் மற்றும் 53 வகையான சேவைகளுக்கான வரிவிகிதம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது; இது, வரும், 25 முதல் நடைமுறைக்கு வருகிறது.பெட்ரோல், டீசல், ரியல் எஸ்டேட் போன்ற விலக்கு அளிக்கப் பட்டவற்றையும்,
ஜி.எஸ்.டி.,யின் கீழ் கொண்டுவருவது குறித்து அடுத்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். மாநிலங்களுக்கு இடையே பொருட்களை எடுத்து செல்லும்போது, 'இ – வே பில்' கொண்டுசெல்வது, வரும் பிப்., 1 முதல் கட்டாயமாகிறது. இதன் மூலம், வரி ஏய்ப்பு செய்வது தடுக்கப்படும்.
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.