போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இந்திய எல்லையில் பாக்., தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்திவருகிறது. எல்லை கட்டுப்பாட்டு பகுதி அருகே உள்ள ரஜவுரி மாவட்டத்தில், குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாக்., ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளது.
பாக்.,கின் இந்த தொடர் தாக்குதல்கள் குறித்து சட்டீஸ்கரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், 3, 4 நாட்களுக்கு முன்பு பாக்., அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையின் போது, இனி எல்லை தாண்டிய தாக்குதல் நடக்காது என நமது எல்லை பாதுகாப்புபடை டிஜி.,யிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் அதை மீறி மீண்டும் தாக்குதல் நடத்திவருகின்றனர். நான் அது பற்றிய அதிகம் பேசவில்லை. ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன். எங்களின் அமைதிக்கும், கண்ணியத்திற்கும் ஒருஎல்லை உண்டு. நாங்கள் அனைவருடனும் நல்லுறவை பேண விரும்புகிறோம். அதற்காக எங்களின் கண்ணியத்தை தவறாக புரிந்துகொள்ள வேண்டாம்.
இந்தியா ஒருபோதும் பலவீனமான நாடல்ல. இந்தியா தற்போது பலமான நாடாக உருவாகி உள்ளது. இதற்கு முன் இருந்ததை விட தற்போது காஷ்மீரில் இயல்பு நிலை வந்துள்ளது. நமது பாதுகாப்புப்படையும், ராணுவமும் அதற்காக தீவிரமாக பணியாற்றி வருகின்றன. காஷ்மீர் நம்முடையது. எப்போதும் காஷ்மீரும், அதன் மக்களும் நம்முடையவர்கள் என்றார்.
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
Leave a Reply
You must be logged in to post a comment.