எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்னும் இடம் பார்க்கவில்லையா? : தமிழக அரசுக்கு மத்திய அரசு குட்டு!

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதுகுறித்து விரைந்து முடிவெடுக்குமாறு தமிழக அரசுக்கு பிரதமர் அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ள தகவல் வெளியாகி யுள்ளது.

கடந்த 2015-ல் தமிழகம், பஞ்சாப், ஜம்முகாஷ்மீர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இவற்றில் தமிழகம் தவிர மற்றமாநிலங்களில் மருத்துவனை அமைப்பதற்கான இடம் தேர்வு, கட்டுமானம் உள்ளிட்ட முதல்கட்ட பணிகள் எப்பொழுதோ துவங்கிவிட்டன.

அதேபோல் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மதுரை, புதுக் கோட்டை, ஈரோடு, தஞ்சை, மற்றும் காஞ்சிபுரம் ஆகிய ஐந்து இடங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்குமாறு மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரைசெய்தது. அதன் தொடர்ச்சியாக 2015 ஏப்ரலில் மத்தியகுழு ஒன்று தமிழகம் வந்து ஆய்வு நடத்தியது. ஆனால் அதன் பின்பும் மருத்துவமனை அமையப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்தவழக்கில் மருத்துவமனை அமையும் இடத்தை விரைவில் அறிவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தர விட்டது. அப்படியும் எந்தவிதமான பதிலும் இல்லாத காரணத்தால் நீதிமன்ற உத்தரவு முறையாகப் பின்பற்றப் படவில்லை என்று கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரமேஷ் என்பவர் நீதிமன்ற அவமதிப்புவழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்து வமனை அமைவது குறித்து விரைந்து முடிவெடுக்குமாறு தமிழக அரசின் சுகாதாரத் துறைக்கு பிரதமர் அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தகடிதத்தின் நகல் ஒன்று உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்த ரமேசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...