ஒவ்வொரு கோவில் செல்வங்கள் கொள்ளை போனதற்கும் பெரும் வரலாறு இருக்கு.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த தீவிபத்து – ஆங்காங்கே இந்து கோவில்களில் ஏற்படும் தீவிபத்துகள். என்ன தான் நடக்கிறது???? என்ன தீர்வு காணவேண்டும்???? {கேள்வி:சக்தி , கணேஷ்… இன்னும் சிலர்}

 

சில குட்டி தகவல்களைச் சொல்லிவிட்டு நான் கேட்க வந்ததைக் கேட்கிறேன்: 10 ஆம் நூற்றாண்டில் பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கு ராஜா ராஜா சோழன் 17வகை வைரங்கள் முத்துகளை மட்டும் அல்லாமல் பல கோடி மதிப்பிலான தங்க ஆபரணங்களை அளித்தான். திருவெற்றியூர் கோவிலுக்கு தங்கத்தால் ஆணா கதவுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது அத்துடன் பூஜைக்கு தேவையான பாத்திரங்கள் அனைத்தும் தங்கத்தால் ஆனவை.

 

நான் படித்தவரை எனக்குத் தெரிந்து இந்து கோவில்களின் பெரும்பாலான பெரும் கோவில்கள் (தமிழகத்தில் மட்டும் சுமார் 35,000க்கும் மேல் இருக்கும் நிர்வாக ரீதியாகப் பெரிய கோவில்கள்) அனைத்துக்கும் தங்கத்தால் ஆணா பூஜை சாமான்கள் தான் இருந்தன. திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்த நன்கொடைகளுக்கு ஆதாரங்கள் தேடினால் தலை சுற்றுகிறது. முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் 1250களில் கொடுத்த நன்கொடைகள் மட்டுமே சில ஆயிரம் கோடி பெறுமானம் ஆகும். 

 

உங்களுக்குத் தெரியுமா தெரியவில்லை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை அலாவுதீன் கில்ஜி  தளபதியாக இருந்த மாலிக் கபூர் தாக்கி அதில் இருந்த பல ஆயிரம் செல்வங்களை கொள்ளை அடிக்க – அவனை விரட்டி அடித்து மீண்டும் நமது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கட்டி எழுப்பியது நாயக்கர்கள் தான். நன்கு புரிய வேண்டும் வைணவமும் சைவமும் இரண்டும் சமமாக நிற்கும் இடம் சங்கம் வளர்த்த மதுரையைச் சுற்றி கோவில்பட்டி வரை மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி நிற்கின்றன இந்து ஆலயங்கள். மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இந்து கொண்டாட்டங்கள் தொட்டும் அனைத்துமே மக்களை ஒன்றிணைக்கும் ஒரு நிகழ்வாக அமைத்துவிட்டுச் சென்றனர் நமது முன்னோர்கள். 

 

கிருண தேவராயர் காலத்தில் மீனாட்சி அம்மன் , ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் , மதுரை கள்ளழகர் என்று இந்த மூன்று கோவிலுக்கு அவர் வழங்கிய பல ஆயிரம் கோடி சொத்துக்கள் ஆபரணங்களுக்குக் குறிப்பு மட்டும் தான் அதை இப்போது எங்கே இறுக்கு என்று தெரியாது ராமேஸ்வரம் கோவிலுக்கு கிருஷ்ணதேவராயர் மூன்று முறை அவர் எடைக்கு நிகராக தங்கம் வழங்கியதாகத் தகவல். 

 

அய்யா இந்த பத்மநாபன் கோவிலில் கண்டிபிடிக்கபட்ட 1லட்சம் கோடி மதிப்பிலான தங்கள் புதையல் எல்லாம் வெறும் 0.001% கூட கிடையாது இந்த நாட்டில் இந்து கோவில்களின் செல்வச் செழிப்பில். இந்த பத்மநாபன் கோவில் இன்று தான் கேரளாவில் இருக்கலாம். அன்று நிர்வாகம் இங்கே இருந்து தான் இருந்தது. அந்தச் சின்ன கோவிலுக்கே 1லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளை நாம் தங்க வைர நகைகளாகக் கண்டெடுக்க முடிகிறது என்றால் எங்கள் மதுரை மீனாட்சிக்கு மதுரையே சொத்து தானே. 

 

சிவனடியார்களுக்கு 12 ஜோதிலிங்க தளங்களில் முதலாவதாக இருந்த சோமநாதர் ஆலயத்தை தாக்கி அதைத் தொடர்ந்து சூறையாடி அதில் இருந்த பல லட்சம் கோடி பதிப்பிலான செல்வங்களை 17முறை கொள்ளை அடித்தான் கஜினி முகமது. அவன் ஒன்றும் நாடு பிடிக்கவோ இல்லை எதிரிகளுடன் சண்டை போடவோ இங்கே வரவில்லை. கொள்ளை அடிக்கத் தான் வந்தான் அடித்தான். {ஆனால் வெக்கமே இல்லாமல் நாம் வரலாற்று அவனை மாவீரன் என்று படித்தோம். இதில் படத்தின் தலைப்பு வேறு கஜினி.} ஒவ்வொரு முறையும் பல லட்சம் கோடி செல்வங்களைக் கொள்ளை 

 

இதை ஏன் கூறுகிறேன் என்றால் : கஜினி ஒரே ஒரு முறை மட்டும் அடித்த கொள்ளையின் மதிப்பில் வெறும் தங்கத்தை மட்டும் கணக்கிட்டாலே சுமார் 3000கிலோ தங்கம் என்று குறிப்புகள் கூறுகின்றன. அப்போது மற்றவை மதிப்பு???? அப்போது 17முறை எவ்வளவு கொண்டு போயிருப்பன????இது ஒரு சேம்பில்… அடுத்து வந்தது ஆங்கிலேயர் ஆட்சியில் தந்திரமாக கொள்ளை அடிக்கும் வேலைத் தொடர்ந்தது. 

 

இப்படி இங்கே ஒவ்வொரு கோவில் செல்வங்கள் கொள்ளை போனதற்கும் பெரும் வரலாறு இருக்கு.

நிறுத்துங்கள் போதும் இப்படி ஒவ்வொரு கோவிலுக்கும் பல ஆயிரம் கோடி சொத்து இருக்கு. இப்போது அதுக்கென்ன?

 

ஏறக்குறைய 36,488 கோயில்கள், 56 மடங்கள் மற்றும் மடங்களுடன் இணைந்த கோயில்கள் 58 உள்ளன இவை அனைத்தையும் இந்து அறநிலை துறை என்ற பெயரில் அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டனர். காரணம் அந்தச் சொத்துக்கள் சில தனி நபர் குடும்பங்கள் மட்டும் சாப்பிட்டு அனுபவித்து வருவதாக வந்த பிரச்சனை. (இந்து கோவில்களின் வருமானம் மட்டும் அரசு கஜானாவை நோக்கி திருப்பினர்.) ஆண்டு வருவாய் சராசரியாக 55 கோடி என்று கணக்கு காட்டுகிறது நமது தமிழ் நாடு இந்து அறநிலை துறை. 

 

இதைப் படிக்கும் உங்கள் அனைவரையும் நான் நியாயமாக ஒரு கேள்வி கேட்கிறேன்.. கொஞ்சம் மனசாட்சிக்கு கட்டுபட்டு பதில் கூறுங்கள் திருமலை திருப்பதிக்கு ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா சுமார் 1000கோடி. ஆனால் தமிழகத்தில் 36,488 கோயில்கள் மொத்த வருமானம் 58கோடி தானா???? இதை நம்பினால் ஒன்று நான் மனநிலை சரி இல்லாதவன்- இல்லை நம்மை பைத்தியக்காரனாக இந்த இந்து அறநிலையத்துறை அரசு அதிகாரிகள் நினைக்கிறார்கள் என்று அர்த்தம். 

 

மதுரை அருகே மடப்புறம் காளியம்மன் கோவில் இறுக்கு – அங்கே நீங்களே போங்க ஒரு சர்வே எடுங்கள் அந்தச் சின்ன கோவிலுக்கு மட்டும் தாராளமாக வாரம் சில லட்சம் வருமானம் உண்டு. அப்படி என்றால் மொத்த இந்தியாவையும் கவர்ந்து இழுக்கும் ராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் வருமானம் ????? 

 

அதாவது இவனுக காட்டுற கணக்குபடி பார்த்தால் ஒரு கோவிலின் ஆண்டு வருமானம் 13703ரூபாய். அதாவது தினமும் ஒரு கோவிலின் வருமானம் 37ரூபாய். 

 

சத்தியமா நம்புங்கள் ஒரு கோவிலுக்கு 37ரூபாய் தான் தினமும் வருமானம் வருகிறது. மீண்டும் கூறுகிறேன் 37ரூபாய்!!!! 

 

நீங்களும் நானும் பைத்தியக்காரன் – இந்தக் கணக்கு காட்டும் அறநிலையத்துறை என்ற கழகத்தின் உடன்பிறப்புகளின் வீட்டு நாய்க்குட்டியாக செயல்படும் அதிகாரிகள் எல்லாரும் புத்திசாலிகள்?????

ஒரு சின்ன கணக்கு மட்டும் கேளுங்கள் : 

 

ஒரு கோவிலுக்கு இன்றைய மதிப்பில் சராசரியாக 5லட்சம் வருமானம் என்று வைத்தால் கூட ஆண்டுக்கு 1824,40,00,000… அதாவது சுமார் 1824கோடி வருமானம் பத்தர்கள் காணிக்கை மூலமே காட்டமுடியுமே. இது தவிர கோவில் சொத்துக்கள் உண்டு. அதை வாடகைக்கு விடுவது முதல் ஒத்திக்கு விடுவது வரை அதன் மூலம் வருமானம் என்றாலும் கட்டாயம் இந்து கோவில்கள் மூலம் ஆண்டுக்கு சுமார் 10,000கோடி வருமானம் மிக எளிதில் ஈட்டலாம். மீனாட்சி அம்மன் கோவில் சுற்றி இருக்கும் பல ஆயிரம் கடைகளை முறையாக வழூல் சேந்தாலே 1000கோடி வருமானம் எல்லாம் மிக சாதாரணம். 

 

எனவே இந்த வருமானங்கள் மட்டும் அல்லாமல் மடங்களுடைய சொத்துக்கள்????? 

 

இந்தச் சொத்து வருமானத்தைக் கொண்டு எத்தனைப் பள்ளிகள் நடத்தலாம் ! எத்தனை ஏழை இந்து குழந்தைகளுக்கு உதவலாம்???? எத்தனை ஆலயங்கள் கட்டலாம்???? கொஞ்சம் சிந்தியுங்கள். ஒரு கிருஸ்தவ மக்களுக்கும் , ஒரு இஸ்லாமிய மக்களுக்கும் இருக்கும் உரிமை தானே இது????? அட வருமானத்தை எடுத்து சமய பள்ளிக்கூடங்கள் ஆரம்பித்து அனைத்துக் குழந்தைகளுக்கும் வேதங்கள் சொல்லிக்கொடுக்கும் வேத பள்ளிகள் ஆரம்பிக்கலாமே!!! 

 

இது என்ன நியாயம்???? குறைந்த பட்ச நியாயம் கூட கிடையாது இது. முழுக்க திட்டமிட்டு கொள்ளை நடக்கிறது. இந்தியாவில் நடக்கும் கொள்ளைகளில் மிக மிக பெரிய கொள்ளை இது என்று தாராளமாக கூறலாம்.

இதில் கொஞ்சம் கூடச் சகித்து கொள்ள முடியாத இன்னொரு அநியாயம் வெகுஜன மக்களுக்குப் புரியாமல் இருக்கலாம் ஆனால் மாணவர்களுக்குப் புரியும் என்று நம்புகிறேன். அது 

 

உலகத்தில் உள்ள அனைத்துப் பாரம்பரியம் மிக்க புராணகாலத்து வழிபாட்டுத் தளங்கள் எல்லாமே முறையாகப் பராமரிக்க வேண்டும். ஏன் என்றால் அதன் வயது 1500 முதல் 2000வருடம் மேல் பழையவை. ஆகையால் தீவிரமாக அதன் கட்டிட அமைப்பைக் கண்காணிக்க வேண்டும். சரிதானே. 

 

SCTNH – saudi commission for tourism and national Heritage மூலம் சென்ற ஆண்டு சவுதி அரசு வரலாற்று முக்கியமான 8 மசூதிகளை மீண்டும் சீரனமைகும் பணியை அறிவித்தது. இது போல் உலக நாடுகள் அனைத்துமே அவர்கள் முன்னோர் வழிபாட்டுத் தளங்கள் அனைத்தையும் restore செய்யும் வேலையை ஆக முக்கியமான பணியாக செய்வர். 

 

காரணம் அவை தான் அவர்கள் வரலாறு – அவை தான் அவர்களின் முன்னோர் ஆன்மவியல் வெளிப்பாடு. {ஆயிரம் குறைகள் சமூகத்தில் இருந்தாலும் அது அனைவருக்குமான சொத்து} அதை அதே உணர்வை வெளிப்படுத்தும் விதமாக – அதன் ஆன்மாவை அப்படியே மீண்டும் உயிர்பெறச் செய்யும் வேலை தான் Restoration. 

 

இதற்கு உங்களுக்கு வரலாறு மட்டும் அல்ல archaeology , anthropology,paleontology,art என்று துறை சார்ந்த அறிவு மட்டும் அல்ல – அதையும் தான் அந்தப் புனிதமான பழமையான கட்டிடங்களை , பழமையாகப் பொருட்கள் குறிப்புகளைக் காதலிக்கும் குணம் வேண்டும். 

 

நன்றி 

-மாரிதாஸ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...