திரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜக ஆட்சி அமைக்கிறது

திரிபுராவில் பிப்., 18 ம் தேதியும் , நாகாலாந்து மற்றும் மேகால யாவில் பிப்.,27 ம் தேதியும் சட்ட சபை தேர்தல் நடைபெற்றது. திரிபுராவில் 59 இடங்களுக்கும், நாகாலாந்தில் 60 இடங்களுக்கும், மேகால யாவில் 59 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான ஓட்டுக்கள் இன்றுகாலை 8 மணிக்கு முதல் எண்ணப்பட்டு வருகின்றன. மேகாலயாவில் கடந்த 10 ஆண்டுகளாக காங்., நடைபெற்று வருகிறது. திரிபுராவில் இடதுசாரிகட்சி ஆட்சியும், நாகாலாந்தில் நாகா மக்கள் முன்னணி கட்சி ஆட்சியும் நடந்து வருகிறது.

திரிபுரா மற்றும் நாகாலாந்தில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பா.ஜ., தேர்தலை சந்தித்துள்ளது. மேகாலயாவில் தனித்து போட்டியிட்டது. திரிபுரா, நாகாலாந்தில் பா.ஜ., ஆட்சியை பிடிக்கும் எனவும், மேகாலயாவில் தொங்கு சட்டசபை அமையும் எனவும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புக்கள் தெரிவித்தன.

திரிபுராவில் 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆட்சிநடந்து வருகிறது. மாணிக் சர்க்கார் முதல்மந்திரியாக இருந்து வருகிறார். கடந்த தேர்தலில் 49 இடங்களைக் கைப்பற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு இன்று காலை தொடங்கிய ஓட்டு எண்ணிக்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் பாஜக வேட்பாளர்களும் மாறிமாறி முன்னிலையில் இருந்தனர். தொடக்கத்தில் ஆட்சி அமைக்க தேவையான 30 இடங்களை தாண்டி முன்னணி வகித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு பாஜக நெருக்குதல் கொடுத்து பின்னுக்கு தள்ளியது. தொடர்ந்து முன்னிலை வகித்த பாஜக 40 இடங்களைபிடித்து வெற்றி அடைந்துள்ளது. திரிபுரா சட்ட சபையில் கடந்த முறை ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாத பாஜக இந்த முறை ஆட்சி அமைக்கிறது.

மேகாலயாவில் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி நடந்துவருகிறது. இங்கு முகுல் சங்மா முதல்-மந்திரி பதவிவகித்து வருகிறார். இந்நிலையில் தற்போதைய தேர்தலில் தேசிய மக்கள் கட்சி 18 இடங்களிலும், காங்கிரஸ் 20 இடங்களிலும், ஐக்கிய குடியரசு கட்சி 6 இடங்களிலும், மக்கள் குடியரசு முன்னணி 4 இடங்களிலும், சுயேட்சைகள் 3 இடங்களிலும், பா.ஜ.க. 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

 
இங்கு ஆட்சியை கைப்பற்ற 31 இடங்களை பெற்றாக வேண்டும் என்னும் நிலையில், தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு உள்ளது.

 

நாகலாந்தில் நாகா மக்கள்முன்னணி கட்சி ஆட்சி நடந்துவருகிறது. இந்த தேர்தலில் பாஜக 32 இடங்களை பிடித்துள்ளது. இங்கும் பா.ஜனதா  ஆட்சியை பிடிக்கிறது. மேகாலயாவில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ள நிலையில், திரிபுராவிலும், நாகலாந்திலும் பாஜக ஆட்சியை பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திரிபுரா, நாகலாந்தில் பாஜக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...