திரிபுரா, நாகாலாந்து ஆகிய இரண்டு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி இன்று மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. உலகமெல்லாம் தோல்வி முகத்தை சந்தித்துக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்டு கொள்கைகள் இந்தியாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒட்டிக் கொண்டிருந்தன் தற்போது அந்த ஒன்றிரண்டு இடங்களையும் ஒரே வெற்றித்துள்ளலில் பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றிருக்கிறது.
திரிபுராவை கம்யூனிஸ்டுகள் கட்சி இழந்தது மட்டுமல்லாமல், அங்கு காங்கிரஸ் பூஜ்ய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஏதோ இடைத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற ஒன்றிரண்டு வெற்றிகளை வைத்து காங்கிரஸ் மீண்டும் எழுச்சி பெற்று விடுமென்று பேசி வந்தனர். ஆனால் இன்று இந்த இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ{க்கு பூஜ்யமே கிடைத்துள்ளது.
இந்தியா முழுமையும் 19 மாநிலங்களில் ஆட்சி செய்து வரும் பாரதிய ஜனதா கட்சி இந்த 2 வெற்றியோடு சேர்த்து 21 மாநிலங்களில் ஆட்சி செய்யும். இது சாதாரண சாதனை அல்ல, இது வரலாற்றுச் சாதனையாகும் இதற்காக கடுமையாக உழைத்த நமது பாரதப்பிரதமர் அவர்களுக்கும், அகில பாரத தேசியத் தலைவர் அவர்களுக்கும் மற்றும் தொண்டர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.
இனி வரக்கூடிய அனைத்து மாநில தேர்தல்களிலும் இந்த வெற்றியானது நிச்சயம் எதிரொலிக்கும். மேற்கு வங்கத்தில் ஆண்டு கொண்டிருந்த கம்யூனிஸ்டு கட்சி 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது போன்ற வெற்றிகள் மூலம் பாரதிய ஜனதா கட்சி மக்களுக்கான கட்சி என்பதனை நிரூபித்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்த வரை எதிர்கட்சி இல்லாத அளவில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும் உருவெடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் இதே போன்ற மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக தமிழ் தாமரை யாத்திரையில் தொண்டர்கள் உற்சாகமாக பங்கெடுத்து வருகிறார்கள். இந்த யாத்திரையின் நடுவில் தூத்துக்குடியிலிருந்து தான் இந்த வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
இவ்விரு மாநிலங்களில் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் விதமாக நமது தொண்டர்கள் நாளை மாநிலம் முழுவதும் மண்டல்ஃகிளை அளவில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி வெற்றியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
பாரதிய ஜனதா கட்சியின் இந்த வெற்றி இனிவரும் காலங்களில் தொடர்ந்து கொண்டேயிருக்கும் என்பது வரலாற்றுப் பதிவாக இருக்க போகிறது. தாமரையும் எல்லாவிடங்களிலும் மலர்ந்து கொண்டே இருக்கும் தமிழகம் உள்பட!
நன்றி. வணக்கம்.
என்றும் மக்கள்;; பணியில்
(Dr. தமிழிசை சௌந்தரராஜன்)
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
Leave a Reply
You must be logged in to post a comment.