மாண்புமிகு மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்களின் பத்திரிக்கை செய்தி
திரிபுரா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் சிலை உடைப்பு மற்றும் அதை சார்ந்த கருத்துக்கள் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் திரு. அமித் ஷா அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் பா.ஜ.க.வின் கொள்கை ரீதியான மிக தெளிவான கருத்தும், வழிகாட்டுதலும் ஆகும். பா.ஜ.க.வுடன் கொள்கை ரீதியாக வேறுபாடுகள் இருந்தால் ஜனநாயக முறைப்படி கொள்கை ரீதியாக பா.ஜ.க. அதனை சந்திக்க தயாராகுமே தவிர்த்து, ஜனநாயக முறைக்கு மாறாக எக்காரணம் கொண்டும் செயல்படாது என்பது பா.ஜ.க. தோன்றிய காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு, நிரூபிக்கப்பட்ட ஒன்று. பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் திரு. அமித் ஷா அவர்களின் இக்கருத்து திரிபுரா, தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் இருக்கும் அனைத்து பா.ஜ.க. தொண்டர்களுக்கும் ஒரு வழிகாட்டுதலாக அமையும்.
பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் திரு. அமித் ஷா அவர்களின் கொள்கை ரீதியான வழிகாட்டுதலின் அடிப்படையில் தான் இந்தியாவில் 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பா.ஜ.க. ஆளும் கட்சியாக உள்ளது என்பதை பா.ஜ.க.வின் ஒவ்வொரு தொண்டனும் பெருமையோடு நினைவு கொள்ள வேண்டும் என்பதை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
– பொன். இராதாகிருஷ்ணன்
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.