தொடர்ந்து தாமரை மலராமல் என்ன செய்யும்?

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில், பாஜக.,வும், அதன் கூட்டணி கட்சியினரும் பெற்றுள்ள வெற்றி இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய மைல்கள்  என்றுதான் கூறவேண்டும். அதாவது திரிபுராவில் 2013ஆம் ஆண்டு வெறும் 1.5% வாக்குகளுடன் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற்றிடாத பாஜக இன்று 43% வாக்குகளுடன், 35 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

நாகலாந்தில் 1.75% வாக்குவங்கியுடன் இருந்த பாஜக இன்று 14.4% வாக்குவங்கியுடன் 12 தொகுதிகளில் வென்று  தேசிய ஜனநாயக முன்னேற்ற கட்சியுடன் (17 தொகுதி) கூட்டணி அமைத்து  மொத்தம் 29 தொகுதிகளில் வென்று ஆட்சி அமைக்கிறது.

மேகாலயாவிலும் 1.27% வாக்குவங்கியுடன் இருந்த பாஜக இன்று 9% வாக்குவங்கியுடன் 2 தொகுதிகளில் வென்று கான்ராட் சங்மாவின் என்பிபி கட்சியுடன்  கூட்டணி ஆட்சியை நிறுவியுள்ளது.  

இதில் முறையே 75%, 90%  கிறிஸ்த்தவ வாக்காளர்களை கொண்ட மேகாலயாவும், நாகலாந்தும், 25ந்து வருடமாக கம்யூனிஸ்ட்களின் பிடியில் இருந்த திரிபுராவும் பாஜக.,வை ஆதரித்துள்ளன. இந்த வெற்றி பாஜக சிறுபான்மையினரின் மனதையும் வென்றுள்ளது, கம்யூனிசம் போன்ற மாற்று சித்தாந்தத்தையும் வேரருத்துள்ளது என்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

மேலும் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியின் மீது பலதரப்பட்ட மக்களுக்கு ஏற்ப்பட்டுள்ள நம்பிக்கையையும் இது காட்டுகிறது. இந்த நம்பிக்கை சாதாரணமாகவும் வந்துவிட வில்லை. அனுபவபூர்வமாகவே அவர்கள் பெற்றது.

2014ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற உடனேயே வடகிழக்கு கொள்கையை வகுத்தார். ரயில்வே, சாலைப் போக்குவரத்து, மின்சாரம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும்  இந்த பிராந்தியதுடன்  இணைக்கப்பட வேண்டும் என்று திட்டம் வகுத்தார்.

அகல ரயில்பாதை திட்டத்தின் மூலம் திரிபுராவை நாட்டின் பல பகுதிகளுடன் இணைத்தார் கிட்டத்தட்ட 900கிலோ மீட்டர் தூரம் அகல ரயில் பாதையாக மாற்றப் பட்டுள்ளது. ரயில்வே மற்றும் சாலைப் போக்குவரத்தின் மூலம் வடகிழக்கு மாநிலங்களின் முக்கிய நகரங்களை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே வரைப்படத்தில் அனைத்து பகுதிகளையும் இடம் பெறச்செய்வது இலக்காக கொள்ளப் பட்டுள்ளது. 

போக்குவரத்தை விஸ்தரிப்பதன் மூலமே வடகிழக்கு பிராந்தியத்தில் மாற்றத்தை கொண்டுவர முடியும் என்ற கொள்கையுடன். கடந்த மூன்று வருடத்தில் மட்டும் 3800கிமீ., நீள தேசிய நெடுஞ்சாலையை அமைக்க 34000 கோடி ஒதுக்கப்பட்டு அதில் 1200 கிமீ நீள சாலை பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும் போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்த 60000 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது. இதேபோன்று விமான போக்குவரத்தை விஸ்தரிக்க 3200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மிசோராமில் மின் தேவையை பூர்த்தி செய்ய 60 மெகாவாட் திறனுடைய நீர் மின் திட்டத்தை நரேந்திர மோடி சென்ற வருடம்தான் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதன் மூலம் மின் மிகை மாநிலமாக  திரிபுரா, நாகலாந் வரிசையில் மிசோராமும் இடம் பிடித்தது. இது வருடத்துக்கு 251 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.

வடகிழக்கு மாநிலங்களை ஆசியான் நாடுகளுடன் இணைக்கும் முகமாக 1300கி.மீ நீளமுடைய இந்தியா, மியான்மர், தாய்லாந்து வழியாக மிகப்பெரிய சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது 2020ம் ஆண்டு நிறைவு பெரும்.  இது வடகிழக்கு மாநிலங்களுக்கு மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுத்தரும்.

எனவே வடகிழக்கில் பாஜக பெற்றுவரும் வெற்றியானது மக்கள் மீது மோடி கொண்ட உண்மையான நேச திட்டங்களின் வெளிப்பாடு. இதற்கு முன்பு மற்ற மாநிலங்களுடனே சரியான தொடர்பு இல்லாமல் இருந்த மாநிலங்கள். இன்று ஆசியான் நாடுகளுடனே தொடர்பை ஏற்ப்படுத்த போகிறது. இப்படி இருக்க தொடர்ந்து தாமரை மலராமல் என்ன செய்யும்?.

நன்றி; தமிழ்த் தாமரை VM வெங்கடேஷ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...