நேற்று முழுவதும் வட இந்திய டிவிக்கள் சமாஜ்வாடி கட்சியில் இருந்து பிஜேபிக்கு வந்த நரேஷ் அகர்வால் பற்றித்தான் உளறிக்கொண்டு இருந்தன.ஒவ்வொரு செயலையும் திட்டமிட்டு செய்து வரும் அமித்ஷா நரேஷ் அகர்வாலை பிஜேபிக்கு கொண்டு வர முக்கிய காரணம் உத்தர பிரதேசத்தில் வர இருக்கும் ராஜ்ய சபா தேர்தல் தான் .
வரும் 23 ம் தேதி் 16 மாநிலங்களில் அடுத்த மாதம் காலியாக இருக்கும் 58 ராஜ்ய சபை இடங்களுக்கு தேர்தல் நடை பெற உள்ளது. இதில் 10 இடங்கள் உத்தர பிரதேசத்தில் இருக்கிறது. 404 எம்எல்ஏக்கள் உடைய உத்தரபிரதேச சட்டமன்றத்தில் ஒரு ராஜ்ய சபை எம்பியை தேர்ந்தெடுக்க 37 எம்எல்ஏ க்கள் வேண்டும்
உபி சட்டமன்றத்தில் பிஜேபிக்கு 311 எம்எல்ஏ க்களும் அதன் கூட்டணி கட்சிகளான அப்னா தளத்திற்கு 9 எம்எல்ஏ க்களும் சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சிக்கு 4 எம்எல்ஏக்களும் ஆக மொத்தம் 324 எம்எல்ஏ க்கள் இருக்கிறார்கள்.
இந்த 324 எம்எல்ஏ க்கள் மூலமாக 37 எம்எல்ஏ க்களுக்கு 1 ராஜ்ய சபை எம்பி என்கிற கணக்கில் பிஜேபிக்கு 8 எம்பிக்கள் கிடைத்து விடுவார்கள். இதற்கு்296 எம்எல்ஏக்கள் மட்டும் போதும்.எஞ்சிய
28 எம்எல்ஏ க்கள் ஓட்டுக்களை வேஸ்ட செய்ய அமித் ஷா விட்டு விடுவாரா?
இதனால் தான் நரேஷ் அகர்வாலை பிஜேபிக்கு கொண்டு வந்துள்ளார் அமித்ஷா.உபி சட்டசபையில் சமாஜ்வாடிக்கு 47 எம்எல்ஏ க்களும் பகுஜன் சமாஜ் பார்ட்டி க்கு 19 எம்எல்ஏ க்களும் காங்கிரஸ் கட்சிக்கு 7 எம்எல்ஏ க்களும் இருக்கிறார்கள்.ஆக மொத்த மாக பிஜேபி எதிர்ப்பு அணியில் 70 எம்எல்ஏ க்கள் இருக்கிறார் கள்.இது போக 3 சுயேச்சை களும் லாலுவின் ஆர்ஜேடிக்கு ஒரு எம்எல்ஏ வும் நிசாத் பார்ட்டிக்கு ஒரு எம்எல்ஏ வும் நிர்பல் இந்தியன் சோஷித் ஹமாரா ஆம் தள் என்கிற கட்சிக்கு 1 எம்எல்ஏவும் இருக்கிறார் கள்.ஆக மொத்த ம் பிஜேபிக்கு எதிராக 76 எம்எல்ஏ க்கள் இருக்கிறார் கள்
இந்த 76 எம்எல்ஏக்களை நினைத்து சமாஜ்வாடியும் பகுஜன் சமாஜ் கட்சியும் ஆளுக்கொரு ஒரு வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார்கள் இதில் சமாஜ் வாடி வேட்பாளரான ஜெயா பச்சனுக்கு 37 எம்எல்ஏ க்கள் ஓட்டு போட்ட பிறகு எஞ்சிய 10 எம்எல்ஏ க்கள் பகுஜன் சமாஜின் 19 எம்எல்ஏ க்கள் காங்கிரஸ் கட்சியின் 7 எம்எல்ஏ க்கள் ஆக மொத்த ம் 36 எம்எல்ஏ க்கள் ஆதரவோடு லாலு கட்சியோ இல்லை நிசாத் பார்ட்டியோ ஆதரவு கொடுத்தாலே பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் பீம்ராவ் அம்பேத்கர் வெற்றி பெறுவது எளிது என்கிற நிலைமையே இருந்தது.
இந்த நிலையில் தான் அமித்ஷா சமாஜ்வாடி யின் இப்போதைய ராஜ்ய சபை எம்பியும் சமாஜ் வாடியின் முன்னணி தலைவரான நரேஷ் அகர்வாலை பிஜேபிக்கு கொண்டு வந்துள்ளார். கூடவே அவர் பையன் நிதின் அகர்வாலும் பிஜேபிக்கு வந்து விட்டார். நிதின் அகர்வால் இப்பொழுது சமாஜ்வாடி எம்எல்ஏ வாக இருக்கிறார் .
இதனால் சமாஜ்வாடி க்கு ஒரு எம்எல்ஏ அவுட். எனவே இதனால் பகு ஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்க்கு விழ வேண்டிய முதல் முன்னுரிமை ஓட்டு குறைந்து விட்டது. இதனால் பிஜேபிக்கு எட்டு எம்பிக்களும் எதிர்கட்சி களுக்கு இரண்டு எம்பிக்களும் கிடைக்கும் இருந்த நிலை மாறி பிஜேபிக்கு 9 எம்பிக்கள் உறுதி யாகி விட்டது.
பிஜேபி இன்னொரு விளையாட்டை விளை யாடு. கிறது.மொத்தம் உள்ள 10 ராஜ்ய சபை சீட்டுகளுக்கு 11 வேட்பாளர் களை களத்தில் இறக்கியுள்ளது்.இது தான் அமித்ஷா வின் அரசியல் மேஜிக் என்று சொல்ல லாம்.இப்பொழுது சமாஜ் வாடியின் 46 எம்எல்ஏ க்களில் ஒரு பத்து எம்எல்ஏ க்களை நரேஷ் அகர்வால் பிஜேபியின் 10 வது வேட்பாளர் பக்கம் தள்ளி விட்டாலே போதும் ் சமாஜ் வாடி வேட்பாளர் அவுட்.
ஏனெனில் முதல் முன்னுரிமை வாக்குகளில் 37 வாக்குகள் கிடைத்தால் தான் சமாஜ் வாடியின் ஜெயாபச்சன் ஜெயிக்க முடியும். 36 ஓட்டுக்களை வாங்கினாலும் ஜெயா பச்சன் ஜெயிக்க முடியாது.
ஏனெனில் அதற்கு பிறகு வெற்றி தோல்வி களை தீர்மானிப்பது எம்எல்ஏ க்களின் இரண்டாம் முன்னுரிமை மற்றும் மூன்றாம் முன்னுரிமை வாக்குகள் தான்.
இந்த அடிப்படை யில் வாக்குகள் எண்ணப்படும் பொழுது பிஜேபி யின்10 வது வேட்பாளரோ இல்லை 11 வது வேட்பாளரோ வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில் முதல் ரவுண்டில் ஜெயா பச்சன் 37 வாக்குகளை வாங்க வில்லை என்றால் அடுத்து வரும் ரவுண்ட் களில் 324 பிஜேபி எம்எல்ஏக்களின் இரண்டாவது மூன்றாவது முன்னுரிமை வாக்கு களின் அடிப்படை யில் பிஜேபி சுலபமாக வெற்றி பெற்று விடும்.
ஆக நரேஷ் அகர்வால் பிஜேபி யில் இணைந்ததால் உத்தர பிரதேசத்தில் காலியாகும் 10 ராஜ்ய சபை சீட்டுகளையும் கைப்பற்ற நினைக்கும் அமித்ஷா வின் எண்ணம் நிறைவேற வாய்ப்புள்ளது.
நன்றி விஜெயகுமார் அருணகிரி
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.