ராமராஜ்ய ரத யாத்திரை தமிழகத்திற்குள் இன்று அமைதியாக நுழைந்தது.

அயோத்தியில் பிப்., 13ம் தேதி துவங்கிய விஸ்வ இந்துபரிஷத் அமைப்பின் ராமராஜ்ய ரத யாத்திரை, கேரளா, கர்நாடகா உட்பட ஐந்து மாநிலங்களை கடந்து தமிழகத்திற்குள் இன்று அமைதியாக நுழைந்தது.

முஸ்லிம் அமைப்பு களுடன் இணைந்து தி.மு.க., உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் மற்றும் சில அமைப்புகள், யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழகத்தில் ரதயாத்திரை செல்லும் வழியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், ராம ராஜ்ய ரதயாத்திரை உ.பி.,யில் பிப்., 13ம் தேதி துவங்கியது. உ.பி., ம.பி., மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகம் என ஆறு மாநிலங்களில் இந்தயாத்திரை செல்லும் என அறிவிக்கப்பட்டது. கடைசியாக ராமேஸ்வரத்தில் யாத்திரை முடியவேண்டும்.

இந்த யாத்திரைக்கு மற்ற ஐந்து மாநிலங்களில் எந்த எதிர்ப்பும் இல்லை. குறிப்பாக, காங்., ஆட்சிநடக்கும் கர்நாடகா மற்றும் இடதுசாரி ஆட்சி நடக்கும் கேரளாவில் இந்த யாத்திரைக்கு, அந்த மாநில அரசுகள் எந்த தடையும் விதிக்க வில்லை. நேற்று(மார்ச் 19) இரவு, கேரளா புனலுாரில் யாத்திரைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, இன்று காலை, நெல்லை மாவட்டம், கோட்டை வாசலுக்கு வந்த ரதயாத்திரைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. செங்கோட்டை, தென்காசி, கடையநல்லுார், வாசுதேவநல்லுார் வழியாக, இன்று மதியம் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சென்று, இரவு மதுரையை அடைகிறது. வரும் 25ம் தேதி ராமேஸ்வரத்தில் நிறைவு பெறுகிறது. ரத யாத்திரைவரும் வழியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ரத யாத்திரைக்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எதிர்ப்பாளர்களை கைதுசெய்யும் வகையில், நேற்று இரவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முஸ்லிம் மக்களின் ஆதரவை பெறுவதற்காக, தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு மற்றும் சீமான் உள்ளிட்ட சிலர் எதிர்ப்புதெரிவித்து வருகின்றனர்.

இதன் காரணமாக, நேற்று மாலை, 6:00 மணியில் இருந்து, 23ம் தேதி காலைவரை, நெல்லை மாவட்டத்தில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடையைமீறி போராட்டம் நடந்த சென்ற  திருமாவளவன், ஜவாஹிருல்லா மற்றும் சிலரையும், செங்கோட்டையின் வாஞ்சிநாதன் சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...