எல்லோரும் தமிழக அரசியலில் பரபரப்பாக இருக்க, சப்தமேயில்லாமல் உச்ச நீதிமன்றம் அதிமுக்கியமான ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
#வழக்கு எண் Criminal appeal 416/2018 தீர்ப்பு நாள் 20.03.2018
தாழ்த்தப்பட்டோர்களுக்கெதிராகச் செயல்படுவோர் மீது Scheduled Castes and the Scheduled Tribes (Prevention of Atrocities) Act 1989 …என்ற சட்டத்தின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் சில நெறிமுறைகளை வகுத்திருக்கிறது.
இதன்படி, இச்சட்டப் பிரிவுகளின்கீழ் எவரையும் உடனடியாகக் கைது செய்துவிடமுடியாது.
குற்றம் சாட்டப்படுபவர் அரசு ஊழியர் என்றால், அவரது நியமன அதிகாரியின் எழுத்துபூர்வ அனுமதி இருந்தால் மட்டுமே அவர்களைக் கைது செய்ய முடியும்.
குற்றம் சாட்டப்படுபவர் பொதுமக்கள் என்றால், அந்த மாவட்டத்தின் மிக மூத்த காவல்துறை கண்காணிப்பாளரின் (Senior SP) எழுத்து பூர்வ அனுமதிக் கடிதம் பெற்றால் மட்டுமே கைது செய்ய முடியும்.
மேலும் இப்பிரிவுகளின் கீழ் குற்றஞ்சாட்டப்படுவோருக்கு முன் ஜாமீன் வழங்க எவ்விதத் தடையும் இல்லை எனவும் கீழமை நீதிமன்றங்களுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது உச்ச நீதி மன்றம்.
இந்த உத்தரவை மீறுவோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நாடு முழுவதும் இது போன்று பதியப்பட்ட பல்வேறு புகார்கள் ஜோடிக்கப்பட்டவை என்று கண்டறியப்பட்டதால் உச்ச நீதிமன்றம் இவ்வுத்தரவைப் பிறப்பித்திருக்கிறது
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.