ஒரு மனிதன் தனது வாழ்வை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும், எப்படி அன்பினால் பகைவனையும் வெல்லாம் என்பதற்கு ஸ்ரீ ராமரின் வாழ்க்கையே சாட்சி. தனிமனித ஒழுக்கத்தை போதனையோடு நில்லாமல் , மக்களுள் ஒருவராக வாழ்ந்து, உணர்த்திய ஒப்பற்ற அவதாரம் ஸ்ரீ ராம அவதாரம். பங்குனிமாதம் புனர்பூச நட்சத்திரத்தில், கிருஷ்ணபட்ச நவமி திதியில் நிகழ்ந்த ராம அவதாரமே ஸ்ரீ ராம நவமியாக கொண்டாடப்படுகிறது.
அஷ்டமி, நவமி திதிகள் ஒரு நாள் இறைவனிடம் சென்று, "மக்கள் எங்களை ஒதுக்குகின்றனரே., நாங்கள் என்னபாவம் செய்தோம்?'' என்று வருந்தியது. இறைவன் அவர்களுக்கு மனமிரங்கி "உங்களுக்கும் ஏற்றம் தருகிறேன். அனைத்து மக்களும் உங்கள் இருவரையும் கொண்டாடச் செய்கிறேன்'' என்று வாக்களித்தாராம்.
பகவான் தான் கொடுத்த வாக்கின்படியே நவமி திதியில் ராமனாகவும், அஷ்டமி திதியில் கிருஷ்ணனாகவும் அவதரித்து, மக்கள் அவ்விரு திதிகளையும் கொண்டாட அருள் புரிந்தார்.
வட மாநிலங்களில் பத்து நாள் திருவிழாவாக ஸ்ரீராம நவமியை மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். தென் பகுதியிலும் வைணவ ஷேத்திரங்களில் ராம நவமி உற்சவமாகவே கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
ராம நவமி அன்று காலை எழுந்து நீராடி, வீடுகளில் மாவிலை கட்டி மாக்கோலம் போடுவதில் ஆரம்பிக்கிறது ராமநவமி கொண்டாட்டம்.
பூஜை அறையை சுத்தம்செய்து அலங்கரித்து, ராமர் பட்டாபிஷேக படத்திற்கு பூச்சூடி, பொட்டு வைத்து பூஜைகள் செய்யப்படும். நைவேத்தியங்கள் படைத்து ராம நாமம் சொல்லி பூஜிக்க வேண்டும். நம் முன்னோர்கள் பின்பற்றும் வழி முறைகளில் காரண காரியத்தை ஆராய்ந்து பார்த்தால் அதில்,ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும்.
மனிதகுல திலகமான ஸ்ரீராமர் பிறந்தது அனல் சுட்டெரிக்கும் வெய்யில் காலத்தில் என்பதால் தான் ஸ்ரீராமநவமியன்று பானகம், நீர்மோர், வடை பருப்பு, விசிறி போன்றவற்றைத் தானமாகக் கொடுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
ராம நாமம் எல்லையற்ற ஆன்மசக்தியை நமக்கு வழங்க கூடியது. அதனால் ஸ்ரீ ராமநவமியன்று, "ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமா' என்று 108 முறை உடலும் மனமும் ஒன்றி சொன்னால் எல்லையற்ற மன நிம்மதியும், புண்ணியமும் கிட்டும்.மேலும் ராமநவமியில் விரதமிருப்பதால் திருமாலின் துணைவியான லட்சுமியின் கடாட்சம், நாட்பட்ட வியாதிகள் நீங்குதல்,நம்மை எதிர்த்து நிற்கும் பகைவரும் நண்பராதல், தொலைந்த பொருட்கள் கிடைத்தல், பிள்ளைப்பேறு போன்ற எல்லா ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
ராமநவமி அன்று,ஸ்ரீராம நாமம் ஜெபிப்பதும்,ராமநாம சங்கீர்த்தனத்தில் கலந்துக் கொள்வதும், , ஸ்ரீராமபிரானுடைய திரு நாமத்தை எழுவதும் மிகுந்த புண்ணியத்தைக் கொடுக்கும். குறிப்பாக அன்று ஸ்ரீ ராமஜயம் எழுதுவது, மற்றும் உபவாசம் இருப்பது இரண்டும், மிக மிக விசேஷம் என்கிறார்கள் ஆன்மீகப் பெரியோர். ராம நவமி அன்று செய்யும் பூஜை புனஸ்காரங்களின் புண்ணியம் , 24 ஏகாதசி அன்று பூஜை செய்தால் கிடைக்கும் புண்னியத்திற்கு சமம்.
ராம நவமி அன்று விரதம் இருந்து, பஜனைகள், ராமாயண சொற்பொழிவுகளில் கலந்து கொள்ளலாம்.இயலுமானால் பஜனைகளில் கலந்துக்கொள்ள வரும் பக்தர்களுக்கு பானகம், நீர்மோர், சுண்டல், விசிறி முதலியவைகளை வழங்கலாம்.
ராமர் என்றதும் ஆஞ்சநேயர் நினைவிற்கு வராமல் இருப்பாரா?. ஹனுமான் இல்லாமல் ராமாயணமா?.இரத்தின காவியமான ராமாயணத்தை படிக்கும் இடத்தில் ஆஞ்சநேயர் அருவமாக எழுந்தருளுவார் என்பது ஐதீகம். இதனால் தான் பொதுவாக ராமாயண காலசேட்ப இறுதியில் ஆஞ்சநேய உற்சவத்துடன் பூர்த்தி செய்வதை சம்பிரதாயமாக வைத்துள்ளனர். ஸ்ரீராம நவமிக்கு பத்து தினங்களுக்கு முன்பே, ராமாயணம் படிக்கத்துவங்கி ஸ்ரீராம நவமி அன்று, ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்துடன் நிறைவு செய்ய வேண்டும்.
ஜெய் ஸ்ரீ ராம்!
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.