மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய கருத்துகளை, முன்னுக்குப் பின் முரணாக மாற்றிக்கூறி, தி.மு.க., அரசு மக்கள் மத்தியில் பிரிவினையை துாண்டி வருகிறது. ஹிந்தி திணிப்பு என்ற தங்களின் கூட்டு நாடகம் பெரும் தோல்வி அடைந்து விட்டதன் விளைவாக, அனைத்து அறிவாலய தலைவர்களும், உச்சக்கட்ட பதற்றத்தில் இருப்பதாக தெரிகிறது.
அதனால்தான், கையில் கிடைக்கும் ஏதாவது ஒரு விஷயத்தை திரித்து, கட்டுக்கதை கட்டி மக்களை திசை திருப்பி, தங்கள் அரியணையை காப்பாற்றிக் கொள்ள அரும்பாடு படுகின்றனர்.
அதிலும் குறிப்பாக, பிஎம் ஸ்ரீ பள்ளிகளை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட விரும்புவதாக, தி.மு.க., அரசு கடிதம் எழுதியதை, மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தி விட்டார் என்ற அச்சத்தில் தான், மத்திய அமைச்சர் குறித்த பொய்யான வதந்தியை பரப்ப, போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று உடனுக்குடன் முழங்கிக் கொண்டிருக்கின்றனர்.
தி.மு.க., அரசு என்னதான் தகிடுதத்தம் செய்தாலும், அவர்களின் வெறுப்பு அரசியலை மக்கள் இனி சகித்துக் கொள்ள மாட்டார்கள்.
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |