நிச்சயம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் படும் என்ற நம்பிக்கை இருப்பதாக ராஜ்ய சபா எம்பி இல.கணேசன் கூறியுள்ளார்.

டெல்லியில் அமைச்சர் நிதின்கட்கரியை பாஜகவின் 3 பேர் கொண்ட காவிரிக்குழு சந்தித்தது. காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்னை தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து, இந்தப்பிரச்னையை சுமூகமாகத் தீர்க்க தமிழக பாஜக சார்பில் 3பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் எம்.பி தலைமையில்  கருப்பு முருகானந்தம்,பொன்.விஜயராகவன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவினர் இன்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உதவியுடன் மத்திய அமைச்சர் நிதின்கட்கரியை டெல்லியில் சந்தித்தனர். இந்த சந்திப்பிற்கு பின்னர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது : நான் தஞ்சாவூரை சேர்ந்தவன். அப்போதெல்லாம் 3 போகம் விளைந்தபூமியில் தற்போது 1 போகத்திற்கே தண்ணீர் கிடைக்கவில்லை.
 
ஆகவே கிடைத்த தண்ணீரை வைத்து விவசாயம் செய்கிறார்கள். காவிரி நீரின் அளவை குறைத்தது சரியல்ல என்று நாங்கள் தீர்ப்புவந்த அன்றே கூறினோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தவே நாங்கள் டெல்லிவந்தோம். மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உதவியுடன் அமைச்சர் நிதின்கட்கரியை சந்தித்தோம். பாஜகவின் சார்பில் நாங்கள் 3 பேர் கொண்ட குழுவினர் அமைச்சர் நிதின்கட்கரியை சந்தித்தோம்.
 
இந்த சந்திப்பு திருப்திகரமாக இருந்தது, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே தீரவேண்டும் என்று வலியுறுத்தினோம். இந்த விஷயத்தில் மத்திய அரசும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன்னரே மத்திய அரசு இதற்கான நடவடிக்கைகளை தொடங்கி விட்டது. காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமைக்கப்படும் ஆனால் எந்த கால கட்டத்திற்குள் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. அமைச்சர் நிதின்கட்காரி சொல்வதைச் செய்பவர் எனவே நிச்சயம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்றும் இல. கணேசன் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...