மாநிலங்களவை முன்னவராக மீண்டும் நிதிய மைச்சர் அருண் ஜெட்லி நியமிக்கப் பட்டார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட 41 புதிய எம்பிக்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். மக்களவை பாஜ தலைவராக பிரதமர் மோடி உள்ளார். மாநிலங்களவை முன்னவராக நிதியமைச்சர் அருண்ஜெட்லி 2014 ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார்.
அவரது பதவிக் காலம் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதையடுத்து மீண்டும் அவரை மாநிலங்களவை முன்னவராக நியமித்து பிரதமர் மோடி உத்தரவிட்டார். இந்த உத்தரவு கடிதம் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அனந்த் குமார் வழியாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவிடம் ஒப்படைக்கப் பட்டது. இதை வெங்கையா நாயுடு ஏற்றுக் கொண்டு முறைப்படி அதை அறிவித்தார்.
41 எம்பிக்கள் பதவி ஏற்பு: மாநிலங்களவையில் காலியான 58 இடங்களுக்கு சமீபத்தில் தேர்தல்நடந்தது. இதில் புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பட்டனர். இதில் 41 பேர் எம்பிக்களாக நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். குஜராத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட சுகாதாரத் துறை அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டா, மத்தியப் பிரதேசத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பீகாரில் இருந்து தேர்வு செய்யப்பட்ட சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மகாராஷ்டிராவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் ஆகியோர் நேற்று எம்பிக்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
புதிதாக பதவி ஏற்ற 41 எம்பிக்களையும் அவைதலைவர் வெங்கையா நாயுடு கைகுலுக்கி வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநிலங்களவை எதிர்க் கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத் ஆகியோரும் கலந்து கொண்டனர். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, சமாஜ்வாடி எம்பி ஜெயா பச்சன் ஆகியோர் நேற்று பதவி ஏற்கவில்லை. பாஜ எம்பி சரோஜ் பாண்டேவுக்கு காலில் அடிபட்டு இருந்ததால் அவர் இருக்கையில் இருந்தே பதவிப் பிரமாணம் எடுத்தார்.
மக்களவை நேற்று தொடங்கியதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக எம்பிக்கள் அனைவரும் அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தெலுங்குதேசம், ராஷ்டிரிய ஜனதாதளம் எம்பிக்கள் இருக்கையில் இருந்து எழுந்து நின்று மத்திய அரசுக்கு எதிரான நம்பிக் கையில்லா தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும்படி வலியுறுத்தினர். அதிமுக அமளியால் அவையை நடத்த முடியவில்லை என்று கூறியமக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன் நாள் முழுவதும் அவையை ஒத்திவைத்தார். இதனால் மக்களவை 19வது நாளாக முடங்கியது. இதே போல், மாநிலங்களவையும் முடங்கியது.
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.