புதுச்சேரியில் சட்டப் பேரவையைத் தொடர்ந்து எம்.பி. பதவியையும் பாஜக கைப்பற்றியுள்ளது. புதுச்சேரியில் முதல்பாஜக எம்.பி.யாகிறார் செல்வகணபதி.
பிரெஞ்சு ஆட்சியில் இருந்துவிடுபட்ட புதுவையில் 1963 முதல் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து வருகிறது. தேர்தலில்பலமுறை பாஜக போட்டியிட்டுள்ளது. ஆனால், முதல் முறையாகக் கடந்த 2001-ம் ஆண்டு ரெட்டியார் பாளையம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு கிருஷ்ணமூர்த்தி வெற்றிபெற்றார். அப்போதுதான் முதல் முறையாக பாஜக சட்டப்பேரவையில் நுழைந்தது.
அதன்பிறகு தேர்தலில் பாஜக வெல்லவில்லை. கடந்த 2016-ம் ஆண்டு 3 நியமன எம்எல்ஏக்கள் பாஜக சார்பில் மத்தியஅரசால் நியமிக்கப்பட்டனர். அப்போது பாஜக மாநிலத்தலைவர் சாமிநாதன், சங்கர், செல்வ கணபதி ஆகியோர் பாஜக நியமன எம்எல்ஏக்.,களாக இருந்தனர்.
கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் 9 இடங்களில் போட்டியிட்ட பாஜக, 6 இடங்களில் வெற்றிபெற்றது. என்ஆர்.காங்கிரஸுடன் கூட்டணி ஆட்சியில் சட்டப்பேரவைத் தலைவர், 2 அமைச்சர்கள், முதல்வரின் நாடாளுமன்ற செயலர் ஆகியபதவிகளை பாஜக பெற்றது. இதுதவிர பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கப் பட்டுள்ளனர். இதனால் 33 எம்எல்ஏக்கள் கொண்ட சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏக்கள் 9 பேர் உள்ளனர்.
புதுச்சேரியில் மக்களவை, மாநிலங்களவை தேர்தல்களில் பாஜகவை சேர்ந்தவர்கள் இதுவரை வெற்றிபெற்றதில்லை. ஆனால், பல முறை நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக போட்டியிட்டுள்ளது. புதுவை அரசியல்வரலாற்றில் முதல் முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக பாஜகவை சேர்ந்தவர் தேர்வாகிறார். இதன் மூலம் செல்வகணபதி புதுவையின் முதல் பாஜக எம்.பி.யாகிறார்.
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |