11 உறுப்பினர்களுடன் தொடங்கி 11 கோடி உறுப்பினர்களுடன் உயர்ந்துள்ளோம்

பா.ஜ.க., தொடங்கப்பட்ட 38-வது ஆண்டுதினத்தை பா.ஜ.க. இன்று நாடு முழுவதும் கொண்டாடி வருகிறது. 1951-ம் ஆண்டு ஜன சங்கம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட அமைப்பு, 1980-ம் ஆண்டு முதல் பாஜக. என்று பெயர்மாற்றம் பெற்று அரசியல் கட்சியாக உருவெடுத்தது. 

 

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநில பா.ஜ.க. கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் அம்மாநில முதல்மந்திரி யோகி ஆதித்யாநாத் கலந்துகொண்டார்.

அங்கு கூடியிருந்த தொண்டர்களிடையே பேசியவர்,  கடந்த 1951-ம் ஆண்டு வெறும் 11 உறுப்பினர்களுடன் தொடங்கப் பட்ட ஜன சங்கம் , தற்போது பா.ஜ.க.வாக மாறி 11 கோடி உறுப்பினர்களுடன் உலகில் மாபெரும் கட்சியாக மாறியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திரமோடி, நாட்டுமக்களுக்கு பெரியளவில் உதவும் வகையில் குறைந்தது 50 முடிவுகளையாவது எடுத்துள்ளார்.

பிரதமரால் தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் திட்டமானது நாட்டில் சுமார் 50 கோடி பேருக்கு மருத்துவ வசதிஅளிக்க உதவியதோடு நாட்டின் வளர்ச்சிக்கும் உதவியுள்ளது, என யோகி ஆதித்யாநாத் பேசினார்.

மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மத்தியில் பதவி ஏற்ற 2014-ம் ஆண்டு மே 26-ம் தேதி வரலாற்றுசிறப்புமிக்க நாள் எனவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...