நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு போன்ற எரிபொருள்களுக்கு பற்றாக்குறை நிலவுவதால் மின் உற்பத்தி துறையில் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிற்கான முதலீடுகள் முடங்கிப் போயுள்ளதாக தெரிகிறது.
நிலக்கரி பற்றாக்குறையால் சுமார் 25,000 மெகா வாட் உற்பத்தி திறன் உள்ள பல்வேறு அனல்மின் திட்டங்கள் பாதிப்புக்குள்ளாகி
உள்ளன. நிறுவப்பட்ட இந்த மின் திட்டங்களில் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகள் முடங்கியுள்ளன என்று ஃபிக்கி அமைப்பு தெரிவித்துள்ளது.
நடப்பு பதினோராவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2007-2012) 78,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் எரிபொருள் பற்றாக்குறை, சுற்றுச் சூழல் பிரச்சினைகள் மற்றும் நிலம் கையகப்படுத்துதல் போன்ற பல்வேறு சிக்கல்களால் இந்த இலக்கு 62,000 மெகா வாட்டாக குறைக்கப்பட்டது. 11-வது ஐந்தாண்டு திட்ட காலம் இன்னும் ஆறு மாதங்களில் நிறைவடைய உள்ள நிலையில் இந்த இலக்கும் எட்டப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இந்நிலையில் அடுத்த ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012-2017) ஒரு லட்சம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்ட வேண்டுமானால், மின் துறை எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க துரிதமாகவும், உறுதியாகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வல்லுனர்கள் கூறுகின்றனர். நம் நாட்டில் மின் துறையின் நலனைக் கருத்தில் கொண்டு 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.