இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ் 2 நாள் அரசு முறை பயணமாக மங்கோலியா சென்றுள்ளார். முன்னதாக சீனாவின் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுமந்திரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டார். பின்னர் அவர் சீனாவின் ஒருநாள் பயணத்தை முடித்துக்கொண்டு மங்கோலியாவிற்கு வந்தடைந்தார்.
இந்தியா-மங்கோலியா 6வது ஒத்துழைப்புக்கான கூட்டுக் குழு கூட்டம் நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் மங்கோலிய வெளியுறவுத் துறை அமைச்சர் டம்டின் டிசோக்பாட்டர் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தகூட்டத்தில், இருதரப்பு உறவுகள், குறிப்பாக வர்த்தகம் மற்றும் முதலீடு, ஆற்றல், சுரங்கம், கால்நடைவளர்ப்பு, கல்வி மற்றும் திறன்மிகுந்த கட்டிடம் மற்றும் சுற்றுலா ஆகியவற்றின் அனைத்து அம்சங்களையும் பற்றி விவாதிக்கப் படும் என வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சுஷ்மா சுவராஜ், காந்தன் டெக்சென்லிங்-ள் உள்ள பெளத்த மடாலயத்திற்கு சென்று அங்குள்ளதுறவிகளை சந்தித்தார். மேலும் சுஷ்மா சுவராஜ் 42 ஆண்டுகளில் மங்கோலியாவுக்கு வருகைதந்த முதல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆவார்
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.