குடியரசுத்தலைவர் கையால், தேசியவிருதை பெற முடியவில்லை என்ற காரணத்திற்காக, விழாவை புறக்கணித்த வர்களுக்கு தபால் மூலம் விருதுகளை அனுப்பிவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசின், 65வது தேசியதிரைப்பட விருதுகள் வழங்கும் விழா, தில்லியில், சமீபத்தில் நடந்தது. தேசியவிருது பெறும் அனைவருக்கும், குடியரசுத்தலைவர் கையால், பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படுவது வழக்கம்.ஆனால், இந்தமுறை, 11 பேருக்கு மட்டுமே, குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த், விருது வழங்குவார் என அறிவிக்கப்பட்டது.
இதனால் விருது அறிவிக்கப்பட்ட கலைஞர்கள் அதிருப்தி அடைந்தனர். இதுதொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளைசேர்ந்த கலைஞர்கள் ஆலோசனை செய்தனர். பின்னர், திரைப்படவிருது வழங்கும் விழாவில் பங்கேற்பதில்லை என முடிவு செய்தனர். இதுதொடர்பாக திரைப்பட விழா இயக்குனரகத்துக்கு அவர்கள் கடிதம் எழுதியிருந்தனர்.
இந்நிலையில், 'விழாவை புறக்கணித்த வர்களுக்கு, பதக்கமும், சான்றிதழும், தபால்மூலம், அவர்கள் வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படும்' என, தகவல் ஒலிபரப்புதுறை அறிவித்துள்ளது. முந்தைய ஆண்டுகளில், பல்வேறு காரணங்களுக்காக விருதை பெற, நேரில் வர முடியாமல் போனவர்களுக்கு, தபால்மூலம் விருதை அனுப்பி வைப்பதை, மத்திய அரசு வழக்கமாக வைத்துள்ளது. இந்தமுறையும் அதையே பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.