டெல்லியில் பா.ஜனதா தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க தலைவர் அமித் ஷா, கர்நாடகாவில் அமைந்துள்ள காங்கிரஸ் – ஜனதா தளம் (எஸ்) கூட்டணி மக்கள் தீர்ப்புக்கு எதிரானது என கூறி உள்ளார்.
கர்நாடகாவில் பா.ஜ.க தனிப் பெரும் கட்சியாக வெற்றிப் பெற்றது. எங்களுடைய வாக்குவங்கியும் அதிகரித்தது. மக்களுடைய தீர்ப்பு காங்கிரசுக்கு எதிரானது தான் என தெளிவாகியது. காங்கிரஸ் முதல்மந்திரி தோல்வி யடைந்தார், அவர்களுடைய பாதி அமைச்சர்கள் தோல்வி அடைந்து விட்டார்கள், ஏன் காங்கிரஸ் தோல்வியை கொண்டாடுகிறது? இதே போன்றும் மதசார்பற்ற ஜனதா தளமும் தோல்வியை கொண்டாடுவது ஏன்? அவர்களிடம் இப்போது 37 தொகுதிகள் மட்டுமே உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி மக்களின் தீர்ப்புக்கு எதிரானது. குதிரைபேரம் தொடர்பாக வெளியான ஆடியோக்கள் போலி யானவை என காங்கிரஸ் தலைவர்களே ஒப்புக் கொண்டார்கள், இது சுப்ரீம் கோர்ட்டில் தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக வெளியிடப்பட்டது. பா.ஜனதா குதிரைபேரத்தில் ஈடுபட்டது என கூறுவது முற்றிலும் அடிப்படை யற்றது என கூறிஉள்ளார் அமித்ஷா.
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
Leave a Reply
You must be logged in to post a comment.